பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday, 1 September 2011

வினைகள் தீர்ப்போய் போற்றி!



சதுர்த்தி வணக்கங்கள் குருவே!...

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு.
   ஒளவையார் 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு 
சங்கத் தமிழ் மூன்றும் தா -  ஒளவையார் 



காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணில் ஒற்றி
நூலைப் பல பல வாகச் சமைத்து நொடிப் பொழுது

வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள்செய்துன்

கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறிஎனக்கே.
- மகாகவி சுப்ரமணிய பாரதி.



ஆனை முகத்தோனே ஆறுமுகன் சோதரனே 

தானைத் தலைவனே தமிழமுது அளிப்பவனே 

வேதநாயகனே வேண்டும்வரம் தருபவனே - நின் 
பாதம் பணிந்து வணங்குகிறேன். - தமிழ் விரும்பி.





அன்புடன் வணக்கம்,

தமிழ் விரும்பி.


3 comments:

Anonymous said...

நேற்று நான் விடுப்பில் இருந்ததால் இதற்குப் பின்னூட்டம் போடவில்லை.

வரிசையா படிச்சுண்டே வந்தால் உங்களோட கவிதை!!! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்! - உமா

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

////உமாசொன்னது…
நேற்று நான் விடுப்பில் இருந்ததால் இதற்குப் பின்னூட்டம் போடவில்லை.

வரிசையா படிச்சுண்டே வந்தால் உங்களோட கவிதை!!! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்! -////

நன்றிகள் உமா... சும்மா எழுதிப் பார்த்தேன்..

Post a Comment