சதுர்த்தி வணக்கங்கள் குருவே!...
வாக்குண்டாம்
நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. - ஒளவையார்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. - ஒளவையார்
பாலும்
தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா - ஒளவையார்
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா -
காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணில் ஒற்றி
நூலைப் பல பல வாகச் சமைத்து நொடிப் பொழுது
நூலைப் பல பல வாகச் சமைத்து நொடிப் பொழுது
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள்செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறிஎனக்கே.
- மகாகவி சுப்ரமணிய பாரதி.
ஆனை முகத்தோனே ஆறுமுகன்
சோதரனே
தானைத் தலைவனே தமிழமுது
அளிப்பவனே
வேதநாயகனே வேண்டும்வரம்
தருபவனே - நின்
பாதம் பணிந்து
வணங்குகிறேன். - தமிழ் விரும்பி.
அன்புடன் வணக்கம்,
தமிழ் விரும்பி.
3 comments:
நேற்று நான் விடுப்பில் இருந்ததால் இதற்குப் பின்னூட்டம் போடவில்லை.
வரிசையா படிச்சுண்டே வந்தால் உங்களோட கவிதை!!! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்! - உமா
////உமாசொன்னது…
நேற்று நான் விடுப்பில் இருந்ததால் இதற்குப் பின்னூட்டம் போடவில்லை.
வரிசையா படிச்சுண்டே வந்தால் உங்களோட கவிதை!!! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்! -////
நன்றிகள் உமா... சும்மா எழுதிப் பார்த்தேன்..
Post a Comment