சக்தியோடு கலந்த நித்திய
பேரொளியே!
சாகாவரம் பெற்ற சமத்துவக்
கவியே!
மனிதசாதி மண்ணிலே மாண்புற வாழ
மகத்துவ கவிபலத் தந்த மகாகவியே!
ஞாலம் போற்றும்
ஞானியர்தம் கருத்தை
ஞாலம் உயரநாளும்
உழைக்கும் - எளிய
பாமரனும் அறிந்தே பயனுற வேண்டி
பாக்கள்பலப் பாடி; மாக்கள் அல்ல - நீவீர்
பரமனின் மக்கள், மண்ணில்
தெய்வம்
உண்மை, உழைப்பு,
ஒற்றுமையோடு - இங்கே
ஒருவரை ஒருவர் அன்பு
பாராட்டி
ஒருமையாய் உள்ள
இயற்கையின் பன்மையை
சக்தியின் தோற்றமதை
நாளும் போற்றியே
சத்திய ஜோதியில்
கலந்துநற் கதிபெறுவீர்
சாத்திரம் வேண்டாம்வேறு
பலசடங்குகள் வேண்டாம்
அன்பொன்றே போதும்ஆண்ட
வனைச் சேர
அன்பின் வடிவினன்,
அன்பில்வாழும் - அந்த
அன்பின் பதம்பற்றி அன்பால்அன்பை அடைந்தே
இன்பம் முருவீர் இன்னல்
களைவீர் என்றே
மானுடம் சிறக்க மாகவி
பாடிய - உலக
மகாகவி மறைந்து
தொண்ணூறாண்டுகள் -ஆயினும்
மனிதசாதிக்கு உழைத்து
மங்காப்புகழ் கொண்ட
மாணிக்கப் பேரொளியை
மனதாரப் போற்றுவோம்.
வாழ்க வளர்க மகாகவியின்
புகழ்!
வாழிய! வாழிய!!
வாழியவே!!!
அன்புடன்,
தமிழ் விரும்பி.
No comments:
Post a Comment