பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday, 15 September 2011

அண்ணா! அன்னா ஹசாரே... இருப்பீர் உசாரே!
எங்கும், எதிலும், எல்லாம்,
ஊழல்! ஊழல்!! ஊழல்!!!

பாழும் சமூகம் பாரதியைப் போற்றும்
பாரதிதாசனை ஏத்தும்,
புத்தன், மகாத்மா காந்தியையும் துதிக்கும்
ஆனால், சாதி சாக்கடையிலே
குளித்துக் களிக்கும்!

சாதிகள் ஒழியும் வரை
ஊழல் வாதிகளை காப்பாற்ற
நாதிகள் வீதி தோறும்  உண்டு...

போராடப் பிறந்தவர்கள்
போராடுவதை நிறுத்தலாகாது...
பொல்லாத ஊழலை நெருப்பில்

நீறாட்டும் வரை போராட்டமும் ஓயாது..

அன்னா பார்த்துக் கொள்ளுங்கள்
இங்கே எவனும் யோக்கியன் இல்லை...
இவனை எதிர்த்தால் - உடனே
அவன் வருவான்...

அவனை எதிர்த்தால் அவனைவிட
விரைந்தே இவன் வருவான்.
இப்போது இருவரையும் எதிர்த்தால்
இருவரும் சேர்ந்தே கொல்வான் (வார்).

அதனாலேப் பார்த்துக் கொள்ளுங்கள்
அவர்கள் பார்க்காமல்
எதையும் கொள்வார்கள்
அவர்கள் கொள்வதைப் பார்த்தால்
அப்படி பார்த்தவர்களையும்
சேர்த்தேக் கொல்வார்கள்...

எல்லாம் அரசியல் சித்து
அவர்களின் நோக்கே சொத்து
பதவி, பணம், பந்தா - இதன்மீதே
அவர்கள் யாவருக்கும்  பித்து
நியாயம் பேசினால் வாயைப் பொத்து
மீறினால் கத்தியில் குத்து??...

எதுவானாலும்,
அரசியல் திருடர்களாகப் பார்த்து
திருந்தா விட்டால் இந்தத்
திருட்டை ஒழிக்க முடியாது!!??....

கருவறைத் தொடங்கி
கல்லறை வரை நீளும் இந்த
நெடுந்தூர ஊர்வலத்தை

கண்ணீர்ப் புகையல்ல
Gun - னும் அல்ல - அந்தக்
கண்ணனே மனு நீதிச்
சோழனாக வந்தாலும்

கலைக்க முடியாது என்றே
எண்ணிய எண்ணம்
எங்கோ போனது - இன்றோ
இளைஞர்ப் பட்டாளாம்
உங்கள் பின்னால் நிற்கிறது!

ஒருங்கிணையுங்கள் ஒருபோதும்
தலைவராய் நில்லாதீர்
சாதி மத சாயம் பூசி - அந்த
சாக்கடையில் அமுக்கி
சாகடிக்க ஒருக் கூட்டமிங்கே
காத்துக் கிடக்கிறது....

நெருப்புச் சாலையில் பயணம் - இருந்தும்
இருக்கட்டும் இடுப்புத் துணியில் கவனம்!
பொறுப்புள்ளவர்கள் போல  கூடவேவருவர்
பொல்லாத அந்த நெருப்புள்ளே தள்ள?!

சத்தியமென்றாலே சோதனை
சடுதியில் போகும் வேதனை
சப்போர்ட்டுக்கு அழைப்போம் தேவனை!
அவன் இல்லாமல் ஏது? சாதனை!

இன்னும் போனால் போதனை
அந்த போதை தனை நிறுத்தி
போற்றுகின்றேன் உமது செயலதனை...

வெற்றியதை வெட்டிதான்
எடுக்க வேண்டும் என்றால்
வெட்டி மட்டுமல்ல
வேட்டும் வைக்கவே தயாரானது

இளம், புது இரத்தம் பாயும்
இளைஞர் கூட்டம், இன்னும்
இருக்க அணைத்துக் கொள்ளுங்கள்
காந்தியத்தைக் காவு கொடுக்காமல்!..

ஊழல் பேயை விரட்ட உடுக்கை எடுத்த  - இந்த
இளையபாரதம் மிக விரைந்தே
படைக்கட்டும் புதிய பாரதம்!!!...

நன்றி வணக்கம்,

அன்புடன்,
தமிழ் விரும்பி.7 comments:

மாலதி said...

உங்களுடைய எண்ணம் சிறப்பானதாக இருக்கிறது அனால் கருத்துகள் சில இடங்களில் சற்று சிந்திக்க வைக்கிறது காரணம் அன்னாஅசரே பற்றிய யும் சில செய்திகளில் வேறுபடுகிறேன் இங்கு நேர்மை நியாயம் என்பது எல்லாம் எந்த அரசிடமும் கேட்க இயலாது அரசு என்றாலே கொள்ளை இப்படி இருக்கத்தான் செய்யும் அது அந்த நிறுவனத்தின் தனியான கோட்பாடு நாம்தான் அவற்றை திய்ருத்த முயல வேண்டும்.... இனிய படைப்புக்கு நன்றி ......

சுந்தரா said...

//அவர்கள் பார்க்காமல்
எதையும் கொள்வார்கள்
அவர்கள் கொள்வதைப் பார்த்தால்
அப்படி பார்த்தவர்களையும்
சேர்த்தேக் கொல்வார்கள்...//

அப்பட்டமான நிதர்சனம்.

அருமையான கவிதை!

தமிழ் விரும்பி said...

////மாலதி சொன்னது…
உங்களுடைய எண்ணம் சிறப்பானதாக இருக்கிறது அனால் கருத்துகள் சில இடங்களில் சற்று சிந்திக்க வைக்கிறது காரணம் அன்னாஅசரே பற்றிய யும் சில செய்திகளில் வேறுபடுகிறேன் இங்கு நேர்மை நியாயம் என்பது எல்லாம் எந்த அரசிடமும் கேட்க இயலாது அரசு என்றாலே கொள்ளை இப்படி இருக்கத்தான் செய்யும் அது அந்த நிறுவனத்தின் தனியான கோட்பாடு நாம்தான் அவற்றை திய்ருத்த முயல வேண்டும்.... இனிய படைப்புக்கு நன்றி ......////

தாங்கள் சொல்வதும் உண்மை தான்... மக்கள் சக்தி நிச்சயம் வெல்லும்.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள் சகோதிரி...

தமிழ் விரும்பி said...

////சுந்தரா சொன்னது…
//அவர்கள் பார்க்காமல்
எதையும் கொள்வார்கள்
அவர்கள் கொள்வதைப் பார்த்தால்
அப்படி பார்த்தவர்களையும்
சேர்த்தேக் கொல்வார்கள்...//

அப்பட்டமான நிதர்சனம்.

அருமையான கவிதை!///

தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் சுந்தரா!

கோகுல் said...

எதுவானாலும்,
அரசியல் திருடர்களாகப் பார்த்து
திருந்தா விட்டால் இந்தத்
திருட்டை ஒழிக்க முடியாது!!??....//

நூற்றில் ஒரு வார்த்தை!
நாசூக்கான வார்த்தைகளால்
வரையப்பட்டகவிதை! அருமை!

தமிழ் விரும்பி said...

////கோகுல் சொன்னது…
எதுவானாலும்,
அரசியல் திருடர்களாகப் பார்த்து
திருந்தா விட்டால் இந்தத்
திருட்டை ஒழிக்க முடியாது!!??....//

நூற்றில் ஒரு வார்த்தை!
நாசூக்கான வார்த்தைகளால்
வரையப்பட்டகவிதை! அருமை!////

தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் நண்பரே!

minorwall said...

ஏற்கனவே இவர் பற்றிய பதிவுகளுக்கு இட்ட பின்னூட்டம்தான்..இங்கேயும் கட் & பேஸ்ட்..
(சாரி..ரொம்ப நீளமாயிட்டுது..அதான்..கட் பண்ணிட்டேன்..)

அன்னா ஹசாரே என்ற பெரியவரின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளித்து வணங்குகிறேன்..
அதேவேளையில் ஊழல், லஞ்சலாவண்யம்,வன்முறை வெறியாட்டக் கும்பலைக் கையில்கொண்டு செயல்படும் ஆதிக்கசக்திகள் என்று

முற்றிலும் புரையோடிக்கிடக்கும்
இந்தியாவைக்கண்டு வருத்தம் அடைவதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியுமா என்றகேள்விதான் எழுகிறது..

ராகுல்காந்தி சொல்லியிருக்கும் விஷயம் போல இந்த சட்டமசோதா தாக்கலினால் மட்டுமே ஊழலை ஒழித்துவிடமுடியுமா என்ற கேள்வி

சிந்திக்கவேண்டிய கேள்வி..
ஊழலை இன்றுவரை வேடிக்கைபார்த்து வளர்த்துவிட்ட மக்களும் இந்த அரசியல்கட்சிகளின் பின்னே இன்றுவரையிலும் மவுனசாட்சியாகப்

பயணித்திருக்கின்றனர்
என்பதுதானே உண்மை..
'ஊழல் ரேசைத் துவங்கி அதிலே ஆழமாக கருத்தூன்றி ஜெயிப்பவருக்குத்தான் வெற்றிமாலை' என்ற கொள்கையை அடிப்படையாய்க்

கொண்டு செயல்பட்ட கட்சிகள்
ஆதிக்கத்தில் மதிமயங்கிக்கிடக்கும் மக்கள் இன்று ஊழல் ரேசில் வெற்றிபெற்றவரை குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதுதான் வேடிக்கையாக

இருக்கிறது..
எதிராளிகள் என்னமோ உத்தமர்கள் போலே..கணக்கிட்டுப்பார்த்தால் இந்தியாவிலே ஊழலற்ற தலைவர்கள் என்று தேடினால்

விரல்விட்டுத்தான் எண்ணமுடியும்..
இப்படி ஒன்றிரண்டு தலைகளை வைத்து இந்தியா போன்ற பெரிய நாட்டை நிர்வகிக்கத்தான் முடியுமா?
வீண் ஜம்பம்தான்..இந்த ஜாம்பவான்கள் லிஸ்டிலே இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திப்பிடிக்கும் கம்பெனி முதலாளிவர்க்கம்

முழுமுதலாக நிற்கிறதே?
இவர்களை ஊழல்குற்றத்திலே கைதுசெய்துவிட்டு இந்தியா எங்கே போகும்?
ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து யார்யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால்
இந்தியப் பொருளாதாரமும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஆட்டங்கண்டுவிடாதா?
பெயர்களை வெளியிடாவிட்டாலும் குறைந்தபட்சம் ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து இந்திய சேமிப்பில் சேர்க்குமா இந்திய

அரசாங்கம்?

உதாரணத்துக்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக்கொள்வோம்..
ஊழலை முன்னின்று நடத்தியவர்கள் என்ற அடிப்படையில் ராசா கைதுசெய்யப்பட்டதுடன் பின்புலமாக இருந்து செயல்படத்தூண்டிய

நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டதா?
நிறுவன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்களே ஒழிய அதனால் லாபமடைந்த முதலாளிகளைத் தண்டிக்க முடியுமா?
நிறுவனங்கள் அடைந்த லாபங்களை இந்திய அரசாங்கம் மீட்டுக்கொடுக்குமா?
The Comptroller and Auditor-General of India (CAG) சொன்னபடி கிட்டத்தட்ட ஒன்னேமுக்கால் லட்சம்கோடி இந்திய ரூபாயை

மீட்டுத்தருமா?நடைமுறையில் முடியுமா?

எல்லாம் நடக்கும் முன்பே தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரம் படைத்த பிரதமர் கடைசியில் துறைமந்திரியை கைதுசெய்துவிட்டு
விஷயத்தைக் கிடப்பில்போட்டிடுக்கும் அவலநிலையை என்னவென்று சொல்வது?
சீனாவோ,பாகிஸ்தானோ இந்தியாவின் பகுதிக்குள் இன்னும் ஊடுருவி இடங்களைப் பிடித்தபின்
பாதுகாப்புமந்திரியை காரணம் சொல்லி அவரைக் கைது செய்து விட்டால் இழந்த பகுதிகள் இந்தியாவுக்குக் கிடைத்துவிடுமா?
அதுபோலத்தான் இது..
முதுகெலும்பில்லாத தலைவர்களைக் கொண்ட இந்தியாவைப் பற்றிய அவநம்பிக்கைதான் மென்மேலும் வளர்கிறது..
பாவம் இந்தியா..பாவம் தமிழன்..பாவம் காந்தி..பாவம் அன்னா ஹசாரே..

மைனர்வாள்

Post a Comment