15 / 09/ 2011 -அன்று
வெளியிட்ட எனது பதிவிற்கு எனது நண்பர் ஜப்பானில் இருந்து தந்த பின்னூட்டமும்
அதனால் எனது மனதில் தோன்றும் கருத்துக்களும்...
அண்ணா! அன்னா ஹசாரே...
இருப்பீர் உசாரே!
ஏற்கனவே
இவர் பற்றிய பதிவுகளுக்கு இட்ட பின்னூட்டம்தான்..இங்கேயும் கட் &
பேஸ்ட்..
(சாரி..ரொம்ப நீளமாயிட்டுது..அதான்..கட் பண்ணிட்டேன்..)
அன்னா ஹசாரே என்ற பெரியவரின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளித்து வணங்குகிறேன்..
அதேவேளையில் ஊழல், லஞ்சலாவண்யம்,வன்முறை வெறியாட்டக் கும்பலைக் கையில்கொண்டு செயல்படும் ஆதிக்கசக்திகள் என்று
முற்றிலும் புரையோடிக்கிடக்கும்
இந்தியாவைக்கண்டு வருத்தம் அடைவதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியுமா என்றகேள்விதான் எழுகிறது..
ராகுல்காந்தி சொல்லியிருக்கும் விஷயம் போல இந்த சட்டமசோதா தாக்கலினால் மட்டுமே ஊழலை ஒழித்துவிடமுடியுமா என்ற கேள்வி
சிந்திக்கவேண்டிய கேள்வி..
ஊழலை இன்றுவரை வேடிக்கைபார்த்து வளர்த்துவிட்ட மக்களும் இந்த அரசியல்கட்சிகளின் பின்னே இன்றுவரையிலும் மவுனசாட்சியாகப்
பயணித்திருக்கின்றனர்
என்பதுதானே உண்மை..
'ஊழல் ரேசைத் துவங்கி அதிலே ஆழமாக கருத்தூன்றி ஜெயிப்பவருக்குத்தான் வெற்றிமாலை' என்ற கொள்கையை அடிப்படையாய்க்
கொண்டு செயல்பட்ட கட்சிகள்
ஆதிக்கத்தில் மதிமயங்கிக்கிடக்கும் மக்கள் இன்று ஊழல் ரேசில் வெற்றிபெற்றவரை குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதுதான் வேடிக்கையாக
இருக்கிறது..
எதிராளிகள் என்னமோ உத்தமர்கள் போலே..கணக்கிட்டுப்பார்த்தால் இந்தியாவிலே ஊழலற்ற தலைவர்கள் என்று தேடினால்
விரல்விட்டுத்தான் எண்ணமுடியும்..
இப்படி ஒன்றிரண்டு தலைகளை வைத்து இந்தியா போன்ற பெரிய நாட்டை நிர்வகிக்கத்தான் முடியுமா?
வீண் ஜம்பம்தான்..இந்த ஜாம்பவான்கள் லிஸ்டிலே இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திப்பிடிக்கும் கம்பெனி முதலாளிவர்க்கம்
முழுமுதலாக நிற்கிறதே?
இவர்களை ஊழல்குற்றத்திலே கைதுசெய்துவிட்டு இந்தியா எங்கே போகும்?
ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து யார்யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால்
இந்தியப் பொருளாதாரமும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஆட்டங்கண்டுவிடாதா?
பெயர்களை வெளியிடாவிட்டாலும் குறைந்தபட்சம் ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து இந்திய சேமிப்பில் சேர்க்குமா இந்திய
அரசாங்கம்?
உதாரணத்துக்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக்கொள்வோம்..
ஊழலை முன்னின்று நடத்தியவர்கள் என்ற அடிப்படையில் ராசா கைதுசெய்யப்பட்டதுடன் பின்புலமாக இருந்து செயல்படத்தூண்டிய
நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டதா?
நிறுவன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்களே ஒழிய அதனால் லாபமடைந்த முதலாளிகளைத் தண்டிக்க முடியுமா?
நிறுவனங்கள் அடைந்த லாபங்களை இந்திய அரசாங்கம் மீட்டுக்கொடுக்குமா?
The Comptroller and Auditor-General of India (CAG) சொன்னபடி கிட்டத்தட்ட ஒன்னேமுக்கால் லட்சம்கோடி இந்திய ரூபாயை
மீட்டுத்தருமா?நடைமுறையில் முடியுமா?
எல்லாம் நடக்கும் முன்பே தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரம் படைத்த பிரதமர் கடைசியில் துறைமந்திரியை கைதுசெய்துவிட்டு
விஷயத்தைக் கிடப்பில்போட்டிடுக்கும் அவலநிலையை என்னவென்று சொல்வது?
சீனாவோ,பாகிஸ்தானோ இந்தியாவின் பகுதிக்குள் இன்னும் ஊடுருவி இடங்களைப் பிடித்தபின்
பாதுகாப்புமந்திரியை காரணம் சொல்லி அவரைக் கைது செய்து விட்டால் இழந்த பகுதிகள் இந்தியாவுக்குக் கிடைத்துவிடுமா?
அதுபோலத்தான் இது..
முதுகெலும்பில்லாத தலைவர்களைக் கொண்ட இந்தியாவைப் பற்றிய அவநம்பிக்கைதான் மென்மேலும் வளர்கிறது..
பாவம் இந்தியா..பாவம் தமிழன்..பாவம் காந்தி..பாவம் அன்னா ஹசாரே..
மைனர்வாள்

உண்மைதான் தங்களின் ஆதங்கத்தை
உணரமுடிகிறது... அரசியல்வாதிகளின் கேடயமாக இருப்பது இந்த பாமர சமூகம் அதை அவர்கள்
சாதி இன வெறி என்னும் வலையில் பின்னி வைத்துக் கொண்டு பின்னோ பின்னு என்றுப்
பின்னுகிறார்கள்!!??...
கீழ்மட்ட அரசியல்.... சாதி என்ற வலையால் பின்னப் பட்டு தமிழன் என்ற உணர்வை
வளரவிடாமல் நம்மை ஒன்றாக கூட விடாமல் பிரித்து வைக்கப்பட்டுள்ளது... நாமெல்லாம் தமிழர்கள் நமது சகோதரர்கள் தாம் மற்ற
இனத்தவர்கள்.. இந்தியா என்னும் குடும்பத்தில் இவர்கள் அனைவரும் சமம் என்ற இந்த
உண்மையை அவசியத்தை அடிப்படையிலே சாதி தான் சதி செய்து கெடுத்து வைத்திருக்கிறது
என்பதே உண்மை...
இந்த சாதீய, இனவாத அமைப்பை எதிர்த்து போரிட்ட
யாவரும் பலநூறு ஆண்டுகளுக்கு மேலாக.. அதை வேறு சில பிரிவினர்கள் சேர்ந்து செய்ததை
இவர்கள் பிடுங்கிக் கொண்டு இப்போது இவர்கள் செய்கிறார்கள் என்று தான் சொல்ல
வேண்டும்... இது இப்படி இருக்க..
முதலாளிகளின் பிச்சைப் பணத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப் பற்றி வீம்பிற்காக, அரசாலும் ஆட்சியாளர்கள்
தான் இன்று முழுவதும்...உலக மாற்றங்களையும், உலக எதார்த்தத்தையும், அறிவியலின் அவசியத்தையும், காலத்திற்கு ஏற்ப
மாற்றினால் அது நம்முடைய பழைய செய்கைகளை நாமே கேலி செய்வதாக அல்லது தவறு என்று
கூறிவிடுவதாக ஆகி விடுமோ என்று; தவறு என்று தெரிந்தாலும்.
பகிரங்கமாக அன்று அப்படி இன்று இப்படி இருக்க
வேண்டும், இது காலத்தின் கட்டாயம், உலக மாற்றத்தோடு ஈடுகொடுக்க
வேண்டிய அவசியம் என்று பெருந்தன்மையோடு வெளியில் வர மறுக்கும் வெத்து வரட்டுக்
கொள்கைவாதிகளின் கூட்டமாக இந்த அரசியல் இருக்கிறது..
இன்றும் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் மூடி வைத்தாலும் தானாக பிதிங்கிக்
கொண்டு சுயம்பாக முளைத்துக் கொண்டு வரும் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி
என்பதாகவே தெரிகிறது... அதோடு தனி மனித இந்திய திறமை அரசாங்கத்தையும் மீறி உலகமய மாதலில் சங்கமிக்கும்
கலப்பின் காரணமே இந்த வளர்ச்சி மாற்றம் எனவும் கொள்ள வழியும் இருக்கிறது....
மக்கள் மன்றங்களிலே திறமை, அறிவு, தகுதி அடிப்படையிலே கூடும் கூட்டமில்லே
அங்கே சாதீய அடிப்படையில்... பணத்தை தண்ணியாய் அல்ல காற்றாய் அள்ளி வீசி தேர்தலிலே
அந்த இடத்தை பிடித்தக் கூட்டமிது.. அப்படி இருக்க என்ன செய்ய முடியும்?..
அடிப்படையில் தமிழன் ஒன்று படவேண்டும்... இலவசம் என்னும் பிச்சைப் பொருட்களை
அவசியம் இல்லாதவனும் வாங்க வெட்கப் படவேணும்... சாதீயத்தை, பொய்யான இந்தக் கால
நிலைக்கு அவசியம் இல்லாத இன வாதத்தை அதிலே கலந்தும்...
(இன உணர்வு இருக்கட்டும் அது வெறியாக்கப்
படுகிறது தனது இனத்தை போற்றாமல் பொய்யான பழங்கதைகளைப் பேசி ஒருவருக்கொருவர்
அடித்துக் கொண்டு அந்த நேரத்திலே அவனின் இனமே அழிக்கப் படுவதை மறக்கப் படுகிறது
என்பதை அறிவதில்லை....)
பேசியும் கட்சிகளை வளர்த்து தான், தனது குடும்பம், தான் பிறந்த சாதி..
இதற்காகத் தான் எனது கட்சி, மேலும் இவர்களுக்காக நாங்கள் அதிகாரத்தில் இருந்தால் திருடுவோம்... எங்களோடு
கூட்டு சேருவோரும் திருடுங்கள் மாட்டிக் கொண்டால் அது உங்கள் பாடு நாங்களும்
மற்றவர்களோடு சேர்ந்து கல் எறிவோம் என்பது தான் நிலைமை...
புத்திசாலித்
திருடர்களாக இருங்கள் என்பது தான் இங்கே இவர்களின் சித்தாந்தமும் / தாரக மந்திரமும் ஆகும்.
தனி மனித அக்கறை,
அவனை காப்பாற்ற
எவனும் யோசிக்க வில்லை.. காரணம் இவனெல்லாம்.... அந்த வழியிலே வரவும் இல்லை போகவும்
இல்லை...
"நமக்குத் தொழில் நாட்டுக் குழைத்தல்
நொடிப் பொழுதும் சோராது
இருத்தல்"
என்பதெல்லாம் இப்போது எடுபடாது..
ஏதாவது நல்லது பேசினால் செய்ய
முனைந்தால்.. யார் இவன் எந்த சாதி? எங்கிருந்து வருகிறான்? என்ற மூலத்தை தேடி அவனின்
வளர்ச்சி முதலில் நம்மைப் பாதிக்குமா? அப்படி என்றால் சாதி உணர்வைத் தூண்டி ஒரு கூட்டமாக சென்று
அவனை காலி செய்வது வழக்கமாகிவிட்டது...
தவறு செய்பவனை கண்டிக்க முடியவில்லை. அவன் சாதி இனம் என்னும் பாதுகாப்பு
வளையத்தில் இருக்கிறான்.. தவறு செய்பவனை அவனது தவறை நியாயப் படுத்த பாதுகாக்க அவனை
சேர்ந்தவன் ஒருகூட்டமாக அவனை பாது காக்கிறான்...
இதிலே நல்ல, படித்த தன்மானம் உள்ள
சிங்கங்கள் அசிங்கத்தில் உழன்று வரும் பன்றிகளை அடித்து உதைத்து கர்ஜனை செய்யாமல்
ஒதுங்குகிறது!?? அவர்களின் மீதுள்ள அசிங்கம்
நம்மீதும் பட்டுவிடுமே! என்று ஒதுங்கிப் போகிறது!!?? அது தான் அவலம்...
சாதி, மத பேதம், இனங்களுக்குள்ளே உள்ளக் குரோதம் தான் இவைகளை இது போன்ற அவலங்களுக்கெல்லாம்
உரம்.. கடைசியாக தாங்கள் கூறியது போல் முதலாளி என்றொரு பெரும்சாதி இருக்கிறது அது தன்னுடைய பண
பலத்தால் அத்தனையையும் விலைகொடுத்து வாங்கிக் கொண்டு. ஆட்டியும் படைக்கிறது..
இதில் மேலும் மிகப் பெரிய கொடுமை என்ன வென்றால்.. தலைவனோ, தலைவியோ இறந்து போனால்.. தகுதியான வாரிசு இல்லாவிட்டாலும்
அந்த வீட்டில் பிறந்த பன்றி குட்டியானாலும் அதற்கு மணிமகுடம் சூட்டி அதன் முன்பு மண்டியிடும்
இந்தக் கூட்டம் இருக்கும் வரை இந்த அவலம் மாறுவது குதிரைக் கொம்பே.. என்ன செய்வது, பிழைக்க மாட்டோம்
என்றாலும்.. மருந்து சாப்பிடுவதில்லையா அது போலத்தான்....
குறைந்த பட்சம் வரும் சமூகத்திற்கும் இந்த வியாதி பரவாமல் தடுக்க முடியாதா? தடுக்க வேண்டும் என்பதே ஒரு
சில இந்த நல்லோர்களின் ஆவல். காலத்தின் கைகளில் இருக்கு. வரும் காலம் அதை மாற்றும்
என உறுதியாக நம்புவோம்.... ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி நடப்பதாக வரலாறு
கூறுகிறதாம்.. வாழ்ந்த நாடுகள் தாழ்வதும் தாழ்ந்த நாடுகள் வாழ்வதும்.. தான் அந்த
சுழற்சியாம்..
அறிவியல் வளர்ச்சி தான் இந்த அவலங்களை எல்லாம் மாற்றவல்ல அருமருந்து... கணினி
என்னும் இந்த யுகப் புருஷன் தான் இந்த உலகை காக்க அவதரித்த அற்புத படைப்பு..
இறைவனின் ஆணையால் மனிதனின், அற்புதப் படைப்பு எனக் கொண்டு காலம் வெல்லும் என்று உறுதியாக நம்புவோம்.
கீழை நாடுகள் ஆதிக்கம் பெருகும் நிலை உதயமாகிறது.... அதில் இந்தியாவின் பங்கு
பெரிதாக இருக்கும் என்பதையும் தீர்க்கமாக நம்புவோம்...
ஒரு இந்தியக் குடும்பத்தில் பிறந்த தமிழனான, ஒரு மனிதனின் ஆதங்கமே!
நன்றி வணக்கம்,
தமிழ் விரும்பி ஆலாசியம் கோ.
6 comments:
இந்தியாவிலே ஊழலற்ற தலைவர்கள் என்று தேடினால் விரல்விட்டுத்தான் எண்ணமுடியும்..//
உண்மைதான். இப்படியெல்லாம் யோசித்தால் சலிப்பு ஏற்படவே செய்கிறது. இருந்தும் நம்பிக்கைதானே வாழ்க்கை. நம்பிக்கையோடு இருப்போம்.
பிழைக்க மாட்டோம் என்றாலும்.. மருந்து சாப்பிடுவதில்லையா அது போலத்தான்....//
இதை நானும் வழிமொழிகிறேன். - உமா
////////ஊழலை இன்றுவரை வேடிக்கைபார்த்து வளர்த்துவிட்ட மக்களும் இந்த அரசியல்கட்சிகளின் பின்னே இன்றுவரையிலும் மவுனசாட்சியாகப் பயணித்திருக்கின்றனர் என்பதுதானே உண்மை..//////////
இந்த மக்களில் ஒருவராகத்தான் நாமும்..இதிலே வெட்டி வீராப்பு பேசினால் இந்தியன் தாத்தா மாதிரி பிழைக்கத்தெரியாத ஆளா ஆகிப் போவோமென்று அவர் மகன் கேரெக்டரில் உலாவரும் காரியம் நடைமுறையில் சாதிக்கும் கூட்டத்தின் பிரதிநிதான் நம்மில் பலர்..எங்கே எப்போ யார்கிட்டேல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா லஞ்சம் கொடுத்தோம் என்று ஆராய்ந்து ஒவ்வொருவரும் மனசாட்சியைத் தொட்டு எழுத ஆரம்பிச்சா நம்ம கூட்டம், நம்ம சாதிசனம், இனம் எல்லாரும் ஒரே சாதியாகிப்போவோம்..ஆமாம்..ஒரு ஆளும் பாக்கி இருக்கமாட்டார்கள் என்பதுதான் என் எண்ணம்..அந்த அளவு இந்த வாழ்க்கைப் பாதைக்குத் தள்ளப்பட்டுப் பழகிவிட்டிருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை..
கமென்ட் என்ற பெயரில் கிட்டத்தட்ட தனிப்பதிவாகிப்போன எனது கமெண்ட்டுக்கு மீள்பதிவு இட்டமைக்கு தமிழ்விரும்பிக்கு நன்றி..
@Uma said...
நன்றிகள் சகோதிரி..
@minorwall said...
நன்றிகள் சகோதரரே!
Lovely blog you have here
Post a Comment