நல்வாழ்வு
விடியலுக்குத் தூரமில்லை விவேகத்தை
வளர்த்துவிட்டால்
துவண்டுபோக வேண்டியதில்லை துணிவுடனே
செயல்பட்டால்
தானாய்வரும் என்பதெல்லாம் வெறும்கனவு -
திறந்திடு
தகவோடுப்போரிட்டே நல்வாழ்வெனும் கதவு.
நல்லார்
சொல்லொன்றும் செயலொன்றும் கொள்ளார் - அல்லாமல்
சொல்லியதையே செயலாக்கி கொள்வார் – இல்லாதவர்
பொல்லாதவர் என்றெல்லாம் பாராரவர்; நல்லார்
எல்லோரிலும் ஈசனையேக் காண்பார்.
வாகை
"எண்ணுவது உயர்வுள்ளல்" என்ற எண்ணமிதை - நீ
எந்நாளும் எண்ணாமல் உயர்வில்லை - அங்கே
எண்ணியதோடு நில்லாமல் திண்ணியமோடு உழைத்தால்
விண்ணைவளைத்து வாகைதனை சூடிடலாம்.
உண்மையின் தன்மையரியா அப்பாவிகள்.
உண்மையெது பொய்யெதன்பதை அறிந்திடுவார் - இருந்தும்
உண்மை மறைத்திடுவார் மரமென்னும்
பொய்க்கொண்டே,
உண்மையெனும் நெருப்பெரித்து அம்மரத்தை நீறாக்கும் - என்ற
உண்மையறியா அப் பாவிகளே.
நன்றி வணக்கம் !...
தமிழ் விரும்பி.
No comments:
Post a Comment