பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Saturday 2 July 2011

அப்படின்னா! கஜினி முகமது எவ்வளவு கொண்டு போனான்???...



இன்றைய தினம் செய்தித் தாள்களின் தலைப்புச் செய்தியே திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து எடுக்கப் பட்ட விலை மதிப்பற்ற பொன்னும் பொருள்களும் பற்றியதான நிகழ்ச்சி தான். மிகவும் சந்தோசமான செய்தி என்றாலும். இதைப் பற்றிய வரலாற்று செய்தியைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தால் சில செய்திகளைத் தேடித் பார்த்தேன். அவைகளை உங்களோடும் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன்.
__________________________________________________________________________________
"திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், ரகசிய அறைகளில் இருந்து விலைமதிப்பற்ற தங்கம், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுக்கும் பணி தொடர்கிறது. இங்கு சுரங்க அறைகளில் இருந்து இதுவரை கிடைத்த பொருட்கள் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். இதையடுத்து, தற்போது கோவில் பகுதிகளில் கேரள அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது." - நன்றி தினமலர்.
__________________________________________________________________________________

கொச்சி:""பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து அதில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட், ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி கோவிலில், 27ம் தேதி முதல் கணக்கெடுக்கும் பணிகளை துவக்கியது.கோவிலுக்குள் இருந்த ஆறு பாதாள அறைகளில், ஐந்து அறைகளை அக்கமிட்டியினர் திறந்து பார்த்து கணக்கெடுப்பு நடத்தினர். ஆறாவது அறையை திறக்க முடியாமல் போனதால், அவ்வறையை திறப்பது குறித்து நாளை மறுதினம் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். அக்கமிட்டியில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், நீதிபதியுமான சி.எஸ்.ராஜன் மற்றும் எம்.என்.கிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.

தான் பார்த்த காட்சிகள் குறித்து நீதிபதி ராஜன் கூறியதாவது:கோவிலுக்குள் பாதாள அறைகளுக்கு செல்லும் கதவை திறந்ததும், பார்ப்போரை பிரமிக்க வைக்கும் மிக பெரிய கருங்கற்கள் கொண்டு பாதை மறைக்கப்பட்டிருந்தது.அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழு மிகவும் பாடுபட்டு அகற்றியது. கீழே அறைகள் மிகவும் சிறியதாக இருந்தன. கீழ்பகுதியில் நான்கைந்து பேர் மட்டுமே நிற்பதற்குரிய இடமே இருந்தது. அவ்வறைகளில் தேக்கினாலான நிறைய பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அப்பெட்டிகளில் தான் தங்கம், வெள்ளி, ரத்தினம் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் வியப்படைந்தேன். நம்ப முடியாத மாயலோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன். அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக அளித்து வந்துள்ளனர்.

அவற்றில் மன்னர்களது நண்பர்கள், பிற நாட்டு மன்னர்கள் வழங்கிய பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு முறை மன்னர் கோவிலுக்கு வரும்போதும், ஒரு தங்க நாணயத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை சுவாதி திருநாள் மன்னர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
இவ்வாறு அங்கு தங்க நாணயங்களே மிக பெரிய சேகரிப்பாக காணப்பட்டது. அவற்றில், "சூரத் நாணயம்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல சரித்திர நூல்களை ஆய்வு செய்த போது நேபாள மன்னர் குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் சாளக்கிராம கற்களை திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கி உள்ளது தெரிந்தது.

அவை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்து தான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றில் 12 ஆயிரத்து 500 கற்களை கொண்டு தான் தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை உருவாக்கப்பட்டது. மீதமுள்ள கற்கள் பாதுகாப்பாக பத்ம தீர்த்தத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்தது.பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவை புதையலாக கருத முடியாது. புதையல் என்பதற்கு அரசின் விளக்கத்திலும் அவைகள் இடம் பெறாது. அவைகள் அனைத்தும் கோவில் சொத்தாகவே கருத முடியும். மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க மட்டுமே சுப்ரீம் கோர்ட் கமிட்டியை நியமித்துள்ளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கெடுக்க அல்ல.இவ்வாறு ராஜன் கூறினார்.
______________________________________________________________________________________________________________
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்,  இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற விஷ்ணு கோயில் ஆகும். இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இக் கோயிலில் உள்ள இறைவன் விஷ்ணுவின் தோற்றங்களில் ஒன்றான அனந்தசயனக் கோலத்தில் காணப்படுகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக் கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.

கோவிலின் வரலாறு என்று சொல்லப் போனால் விக்கிப் பீடியாவில் நமக்குக் கிடைக்கும் செய்திகள்.

"" இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிலிருந்து km,m,.,,.....,.,.., பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது.

தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12000 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது "அனந்தசயன மூர்த்தி" பிரதிஷ்டை செய்யப்பட்டது.""

இங்கே குறிப்பிடப் பட்டுள்ள "கடுசர்க்கரா" மற்றும் சாளக்கிராமம் என்பது என்ன?.

இங்கேக் குறிப்பிடும் சாளக் கிராமம் என்பது ஒருவித பிரத்தியோகமான பாறை கல் என்று அறிகிறேன்.
பன்னிரெண்டாயிரம் துண்டகளாக இருக்கணும் எனவும் தோன்றுகிறது. நான் 2009 .ஆம் வருடம் அக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் போது சுவாமியின் முக தரிசனம் ஒரு வாயிலிலும் அவரின் திருப் பாத தரிசனம் பெற சற்று நடந்து சென்று வேறு ஒரு வாயிலில் கண்டு இன்புற்றேன். அவ்வளவு பெரிய சிலை அது.

அஷ்டபந்தனம் என்பது அது ஒரு எட்டுவிதமான பொருள்களினால் ஆன கலவையாக இருக்கும் என நினைக்கிறேன்…. என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.... தெரிந்தவர்கள் சொல்லலாம்.

ஒரு சிறுக் குறிப்பைக் கூறிக் கொள்கிறேன்.
பாஞ்சாலன் குறிச்சியில் கட்டபொம்மு எழுப்பியக் கோட்டைக்கு தீ பிடிக்காமல் இருப்பதற்காக பதனியோடு (பனை மரத்தில் இருந்து இறக்கும் திரவம்) மண்ணையும், கம்பு, வரகு ஆகியவற்றின் வைக்கோல் களுடனும் இன்னும் பலப் பொருள்களுடன் சேர்ந்தக் கலவையை உபயோகப் படுத்தியதாக கேள்வியுருகிறேன். அதைப் போன்றதொன்றாக இருக்கலாம்.

அதுசரி இவ்வளவுப் பொன்னும் பொருளும் பத்மநாப சுவாமிக்கு யார் தந்திருப்பார்கள் என்றக் கேள்விக்கும் இங்கே விடைக் கிடைக்கிறது. 


ராஜாவின் தானப் பட்டயம்:
"" 1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் "பத்மநாபதாசர்" என்று அழைக்கப்பட்டனர். இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது.

குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.""
__________________________________________________________________________________

பெரும்பாலும், நமது தேச  தமிழ் மன்னர்கள் (தென்னிந்தியாவில்) தங்களுக்கானப் பெரிய அரண்மனைகளை விட பெரிய கோவில்களையே கட்டி இறைவனை வணங்கியதோடு மட்டுமல்லாமல்; அதனையும் தங்களது ஆட்சியின் சாதனைகளாகவும் எண்ணி வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

இங்கே பழைய தமிழ் தேசம் என்கையில் அதற்கான எல்லையையும் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அதை யார் சொல்வது.

குருமுனியின்... குருமுனியா?!! யாரவன் சுரக் குடுவையில் பிறந்த, அதாங்க பிரபஞ்சத்தின் முதல் குளோனிங் குழந்தை, அப்படியா, அது யார்? சரி தான், தென்புலத்தை சமன் செய்ய வடக்கில் இருந்து வந்தானே அகத்தியன்.

அவனின் பன்னிரு சீடர்களிலே கடைசி பன்னிரெண்டாமவன்.... இப்போது தெரிந்திருக்குமே!  ஆமாம், அவனே தான் நம்ம முப்பாட்டான் தொல்காப்பியன் கூறியதைப் பாப்போம். 

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நலத்துந்
தங்குறிப் பினவே திசைச்சொற்கிளவி"    (தொல். சொல்.400 . )

இதிலே வரும் "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு" என்பதில் வரும் பன்னிரண்டு நாடுகள் தாம் நமது பண்டைய தமிழ் நாடாம். இந்தப்  பன்னிரெண்டை யும் பிறிதொரு முறை ஆராய்வோம்.

ஆக அந்த பன்னிரு நாடுகளில் ஒன்றினுள் வருவது தான் இந்த சேர நாடும் அதாவது மலை நாடு ஆகும். அங்கே இன்று விளங்கும் மொழியும் நம்மில் இருந்து என்பதைவிட நம் மொழியுடன் வடமொழிக் கலப்பில் பிறந்த புதிய மொழியே அதற்கும் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் ஆண்டுகலேயாம் வயது. இதையும் பின்னொருநாளில் விரிவாகப் பார்ப்போம்.
________________________________________________________________________________

சரி சொல்லவந்த விசயத்திற்கு வருகிறேன்.

நாம் வரலாற்றுப் பாடங்களை பள்ளிகளில் படித்து இருக்கிறோம். சிலர் கல்லூரிவரை படிக்கிறார்கள், அதிலும் சிலர் ஆராய்ச்சியும் செய்கிறார்கள், வேறு சிலரோ அதை ஒரு பொது அறிவாக எண்ணி விரும்பிப் படிக்கிறார்கள். அப்படி பார்க்கையில் நீங்கள் எந்தவகை என்பது உங்களுக்கேத் தெரியும்.

 விஷயம்?!:
ஒருவிசயத்தை தொடர்ந்து செய்து, தோல்வியுற்று போகும் போது;  அதைப் பற்றிக் கேலி செய்வதற்கோ  அல்லது நேர்மறையாக அந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி கூறி தன்முப்னைப்பு செய்வதற்கோ நாம் அனைவரும் அதை அடிக்கடிக் கூறுவோம்.

அது என்ன ? ஞாபகம் வருகிறதா?... சரி, அது தான் கஜினி முகமதுவின் சோமநாதபுரப் படையெடுப்பு. பதினாறு முறை படையெடுத்து தோல்வியுற்றும் மீண்டும் விடாது படையெடுத்து பதினேழாவது முறையாக வென்றான் என்பது வரலாறு. சரி நாம் இந்த விஷயத்தை தன்முனைப்பு ஊட்ட பலருக்கும் பலமுறை, ஏன்? நமக்கே சொல்லிக் கொள்வோம் எனலாம். அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒருவன், ஒரு இடத்தைப் பிடிக்க பதினாறு முறை படையெடுத்து தோல்வியுற்று பதினேழாவது முறை வென்றான் என்றால் அவனின் முயற்சிக்குப் பாராட்டலாம். என்றாலும்,  அப்படி அவன் வென்று என்ன செய்தான் என்றால்?.

வரலாறு நமக்குச் சொல்வது, வென்ற கஜினி முகமது. சோமனாதபுரத்தைக் கொள்ளை கொண்டான். அங்குள்ளப் பொன்னும் பொருளையும் அபகரித்தான் அங்கே இருக்கும் பிரசத்திப் பெற்ற திருக் கோவிலுனுள் புகுந்து பொன்னையும் பொருளையும் அள்ளிச் சென்றான் என்றும் கூறுகிறது வரலாறு.

சோம்நாத் கோவிலின் தோற்றம் ஆண்டு 1869 .

நாம் தான் இன்றைய நிலையில்; நமக்குத் தெரிந்து, நம்மூர் கோவில்களைப் பார்க்கிறோமே!  அப்படி என்ன பொன்னும் பொருளும் கொண்டு செல்ல,  என்ன இருக்கிறது என்றே பலநேரம் உங்களுக்கும் அப்படித் தோன்றும் என்றே நினைக்கிறேன்.

கஜினி முகமது சோமநாதப் புரத்தை சூறையாடினான் பொன்னும் பொருளையும் கவர்ந்து சென்றான் என்று வரலாற்றுப் பாடத்தில் படித்தப் போது, ஏதோ சிந்தாமணி வருணை போலும் என்றேத் தோன்றியது. காரணம் நாம் தான் அவைகளை பார்த்த ஞாபகம் கூட இல்லையே. சினமாவில் தவிர வேறெங்கே கண்டோம்.
  
ஆனால் இன்றைய  பத்மநாப ஸ்வாமிக் கோவிலின் பொன் ஆபரணங்களைப் பார்க்கும் போது!  சோமநாதபுரமும் எப்படி இருந்திருக்கும் அதுவும் பதினாறு முறைத் தோற்றும் விடாபிடியாக பதினேழாவது முறையும் முயன்றான் என்றால்.... அங்கே எவ்வளவு  செல்வம் இருந்திருக்கும் என்பதை நிச்சயம் நம்மால் இப்போது உணர முடியும்.

ஆக, இந்த சிந்தனையோடு சோமநாதபுர திருக்கோவிலைப் பற்றிய சில தகவல்களை திருவாளர் விக்கிப் பீடியா அவர்களின் துணையோடு இங்கே தருகிறேன்.




சோம்நாத் கோயில்: 

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சௌராஷ்டிராவின்வேராவல் என்னும் இடத்துக்கு அண்மையில் பிரபாஸ் க்ஷேத்திரம் என்னும் இடத்தில் உள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இத் தலம் ரிக் வேதத்திலும்குறிப்பிடப்பட்டுள்ளது. சோம்நாத் கோயில் என்றுமுள்ள கோயில் எனக் குறிப்பிடப்படுவதுண்டு. இது ஆறு தடவை தீயினால் அழிந்தபோதும் ஒவ்வொருமுறையும் அது மீளமைக்கப்பட்டது.


இதைப் பற்றிய ஒருக் கதையும் இருக்கிறது:
சந்திரன் தனது அழகினால் கர்வம் கொண்டதனால், அவனுடைய மனைவியின் தந்தையான தக்சன் அவனைத் தேய்ந்துபோகும்படி சபித்துவிட்டான். சந்திரன் பிரபாஸ் தீர்த்தத்துக்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது சாபம் ஒரு பகுதி நீங்கியது. அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது.
சோம்நாத் கோயில் முதலில் சந்திரனால் பொன்னால் கட்டப்பட்டதாம். பின்னர் இராவணன் அதை வெள்ளியிலும், கிருஷ்ணன் அதனைச் சந்தன மரத்திலும், குஜராத்தின் சோலங்கி அரசனான பீமதேவன் கல்லாலும் கட்டினார்களாம்.
மேலும் தகவல்களை அறிய இந்த லிங்கிற்கு போகவும். http://en.wikipedia.org/wiki/Somnath


கஜினி, செல்வம் கொளுத்து விளங்கிய இந்திய வடமேற்கே இருந்த பல நகரங்களில் இருந்த கோவில்களில் பெரும் கொள்ளை அடிப்பதே வேலையாகக் கொண்டிருந்தான் என்பது மட்டும் உண்மை.  
இதுகாறும் எம் பதிவைப் பொறுமையாகப் படித்து பார்த்திருப்பீர்கள் இந்த பதிவைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இரண்டு வரியில் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

நன்றி வணக்கம்.
அன்புடன்,
தமிழ்விரும்பி.  

11 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தோழரே..

//அப்படின்னா! கஜினி முகமது எவ்வளவு கொண்டு போனான்???...//

நெஞ்சு பொறுக்குதில்லையே ..
நெஞ்சு பொறுக்குதில்லையே ..

இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்..

என்று பாடத் தோன்றுகிறது.

நீங்கள் சொல்வது சரி தோழரே..

முகலாயர்களும்,
பிரெஞ்சுக்காரர்களும்
ஆங்கிலேயர்களும் கொள்ளையடித்தும்
நம் தாய்த்திருநாட்டில் அதுவும் ஒரே இடத்தில்
இவ்வளவு சொத்து இருக்கிறது என்றால்

உண்மையில் இந்தியா எவ்வளவு வசதியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது ..

ம்ம்..


அதற்கு சான்றாக பரம்பரை பரம்பரையாக நம் நாட்டை கொள்ளை அடித்து ( அரசியல் நடத்தி )
ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணமாக சேர்த்து வைத்திருக்கும் சொத்தே எக்கச்சக்கம் என்னும் போது
அது நம்நாட்டில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர்களாக்கிவிடும் என்னும் போது...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

என்னும் பாடலே காதில் ஒலிக்கிறது.

அருமையான பதிவு தோழரே..

நன்றி

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் ஆலாசியம் அவர்களே,

அஷ்டபந்தனம் என்பது,

1, கொம்பரக்கு
2, கற்காவி
3, சாதிலிங்கம்
4, சுக்கான் தூள்
5, செம்பஞ்சு
6, தேன் மெழுகு
7, குங்கிலியம்
8, எருமை வெண்ணெய்

ஆகிய எட்டுப் பொருட்களால் தயாரிக்கப்படுவதாகும்.

சிவயசிவ said...

வணக்கம் தமிழ் விரும்பி அவர்களே!

தாயன்போடு தொடங்கி, தமிழ்த் தரணிக்குக் கவி மழை பொழிந்த கார்மேகமாகி, இன்று வரலாற்றுக் காவலனாகப் பரிணமித்த உங்களது திறமைக்கு முதல் வணக்கம்.

கஜினி முகமது அத்தனை முறை படைஎடுத்துத் தோற்றான் என்பது ஏதோ நம் மன்னர்களின் வீரம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் நம்மிடமிருந்த சொத்துக்களைக் கொண்டு சென்றான் என்பதைப் பலரும் உணர்வதில்லை. அதை உணர்த்தி இருக்கிறீர்கள்.

மன்னராட்சிக் காலங்களில் திருக் கோயில்கள் நீதி மன்றங்களாக, வரி வசூலிக்கும் இடங்களாக,பேரழிவுக் காலங்களில் முகாம்களாக இருந்திருக்கின்றன என்பதும் பலருக்குத் தெரிவதில்லை.

தொடரட்டும் உங்கள் பணி.

நன்றி.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் கங்காதரன்,

//கஜினி முகமது அத்தனை முறை படைஎடுத்துத் தோற்றான் என்பது ஏதோ நம் மன்னர்களின் வீரம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் நம்மிடமிருந்த சொத்துக்களைக் கொண்டு சென்றான் என்பதைப் பலரும் உணர்வதில்லை. அதை உணர்த்தி இருக்கிறீர்கள்.//

அருமை அருமை
ஆலாசியம் தொட மறந்ததை
அற்புதமாக எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்..

( ஆமா ஆலாசியம் உண்மையிலேயே மறந்துட்டிங்களா ? )


நன்றி..

Unknown said...

////சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
தோழரே..
உண்மையில் இந்தியா எவ்வளவு வசதியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது ..///


உண்மை தான் தோழரே பத்மநாப சுவாமியின் மூலம் அதை கண்கூடாக நாம் பார்க்கி....

Unknown said...

////சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
வணக்கம் ஆலாசியம் அவர்களே,

அஷ்டபந்தனம் என்பது,

1, கொம்பரக்கு
2, கற்காவி
3, சாதிலிங்கம்
4, சுக்கான் தூள்
5, செம்பஞ்சு
6, தேன் மெழுகு
7, குங்கிலியம்
8, எருமை வெண்ணெய்////

நன்றிகள் தோழரே...

அப்படி என்றால் சிலைகளை பிரதிச்டைப் பண்ணும் போது
ஒருவித செங்காவி நிறத்தில் ஒருவித பசையை உபயோகப் படுத்துவார்களே அதுவோ?...

Unknown said...

////சிவ. வே. கங்காதரன் சொன்னது…
வணக்கம் தமிழ் விரும்பி அவர்களே!

தாயன்போடு தொடங்கி, தமிழ்த் தரணிக்குக் கவி மழை பொழிந்த கார்மேகமாகி, இன்று வரலாற்றுக் காவலனாகப் பரிணமித்த உங்களது திறமைக்கு முதல் வணக்கம்.

கஜினி முகமது அத்தனை முறை படைஎடுத்துத் தோற்றான் என்பது ஏதோ நம் மன்னர்களின் வீரம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் நம்மிடமிருந்த சொத்துக்களைக் கொண்டு சென்றான் என்பதைப் பலரும் உணர்வதில்லை. அதை உணர்த்தி இருக்கிறீர்கள்.

மன்னராட்சிக் காலங்களில் திருக் கோயில்கள் நீதி மன்றங்களாக, வரி வசூலிக்கும் இடங்களாக,பேரழிவுக் காலங்களில் முகாம்களாக இருந்திருக்கின்றன என்பதும் பலருக்குத் தெரிவதில்லை.

தொடரட்டும் உங்கள் பணி./////

அன்புடன் வணக்கம் தோழரே...
தங்களின் பின்னூட்டக் கவிசாரல் குற்றால நாதரின் மலைச் சாரலாய்க் குளிர்கிறது..
தங்களின் பின்னூட்டத்திற்கு தகவல்களுக்கும் நன்றிகள் தோழரே!

Unknown said...

////சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
வணக்கம் கங்காதரன்,

///கஜினி முகமது அத்தனை முறை படைஎடுத்துத் தோற்றான் என்பது ஏதோ நம் மன்னர்களின் வீரம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் நம்மிடமிருந்த சொத்துக்களைக் கொண்டு சென்றான் என்பதைப் பலரும் உணர்வதில்லை. அதை உணர்த்தி இருக்கிறீர்கள்.//

அருமை அருமை
ஆலாசியம் தொட மறந்ததை
அற்புதமாக எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்..

( ஆமா ஆலாசியம் உண்மையிலேயே மறந்துட்டிங்களா ? )///

தங்களின் கேள்வியை புரிந்துக் கொள்கிறேன்...
பதிவின் கடைசியில் அதைப் பற்றி எழுதியிருக்கிறேன்...

மற்றவர்கள் போரிட்டு வென்று தனது ராஜ்ஜியத்தை விரிவுப் படுத்தினர்
ஆனால் இவனோ, அதில் நாட்டம் கொள்ளவே இல்லை... பொன் பொருளின் மீதே
கவனமாக இருந்திருக்கிறான்.

நன்றித் தோழரே!

athiraihindus said...

வணக்கம்....... சோமநாதர் ஆலையம் பற்றிய கட்டுரை நன்றாக இரருந்தது. நீங்கள் ஒரு ஆல்ந்த வரலாற்றை விட்டு விட்டீர்கள். அது சோமநாதர் ஆலயத்தின் மீது கஜினி படையெடுக்கும் முன் அங்கு இருந்த செல்வங்கள் பற்றியது. எனக்கு தெரிந்ததை சொல்கிரேன்........... சோமநாதர் ஆலயம் நமது தஞ்சை பெரிய கோவில் போல 4 மடங்கு பெரியது. அதன் கோபுரம், விமானம், மூலவர் சன்னிதி ஆகியவை முழுக்க முழுக்க தங்க தகடுகலால் போர்த்தபட்டிருந்தது. இந்த கோவிலில் 6 கால பூஜை செய்வதர்காகவே 120 பசுக்கள் கொண்ட பன்னை இருந்துள்ளது. மேலும் இந்த கோவிலின் மூலவருக்கு சார்த்த ரோஜா மலர்கள் காஸ்மீரிலுருந்து வரவலைக்க பட்டது. காஸ்மீரில் சோமநாதர் ஆலயத்திற்கான மிகப்பெரிய மலர் தோட்டம் இருந்துள்ளது. இங்கிருந்து குதிரைகள் மூலம் பூஜைக்கான மலர்களை எடுத்துச்செல்ல 200க்கும் மேற்படவர்கள் பணியமர்த்த பட்டிருந்தனர். மேலும் இங்கிருந்த ஒரு சிவ லிங்கம் காந்த சக்தி கொண்டதாக இருந்துள்ளது, இந்த லிங்கம் எந்த பிடிமானமின்றி அந்தரத்தில் மிதக்குமாரு வடிவமைக்கப்பட்டிருந்தது. கஜினி படையிடுத்து வந்தபோது கோவில் கோபுரத்தின் மீது இருந்த தங்க தகடுகளை பெயர்த்து எடுத்து சென்ருள்ளான். பின் அந்த லிங்கத்தை எடுத்து வந்து அதை துண்டு துண்டாக சிதைத்து மக்கள் நடக்கும் பாதையில் போட்டுள்ளான்(மக்கள் அதை மிதித்து செல்ல வேண்டும் என்பதர்க்காக). இதுபோன்ற சம்பவங்களில் லட்ச கணக்கான சத்திரிய வீரர்களோடு எனய குடியான மக்களும் போராடியுள்ளனர் இருந்தும் அவர்கலால் ஆலயத்தை காக்க முடியவில்லை. மேலும் ஹிந்து மக்கள் ஆலயத்தில் இருந்த சுவாமி சிலைகலையும், பொக்கிசங்கலையும் அந்த அக்கிரமக்காரர்கலிடமிருந்து பாதுகாக்க பூமிக்குள் புதத்து வைத்துள்ளனர். இவை வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் தோண்டியெடுக்கப்பட்டு அவர்கள் நாட்டிர்க்கு கொண்டுசெல்லப்பட்டது.....இந்த தகவல்கள் " கஜினியும்-சோமநாதரும்" என்ற பலைய புத்தகத்தில் நான் படித்தது...இவன்- அதிவீரராமபட்டினம் ஹிந்து(www.adiraihindus.blogspot.com)

Unknown said...

////athiraihindus சொன்னது…
வணக்கம்....... சோமநாதர் ஆலையம் பற்றிய கட்டுரை நன்றாக இரருந்தது. நீங்கள் ஒரு ஆல்ந்த வரலாற்றை விட்டு விட்டீர்கள்////

வணக்கம் அதிரையார் அவர்களே...
தங்களின் மேலதிகத் தகவல்களுக்கு
நன்றிகள்...

Anonymous said...

கண்ணன் / துபாய்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் அமைப்பு நம் தமிழ் நாட்டுக்கோவில் போல் உள்ளது. அப்படி இருப்பின் கோவிலை சேரமான் பெருமான் முதன் முதலில் எழுப்பினார் என்று கூறப்படுகிறது. இந்த சேரமான் பெருமான் என்பவர் யார்? அவரின் பிறப்பிடம் எது? தெறிந்தால் விளக்க முடியுமா?
நன்றி
வணக்கத்துடன்
கண்ணன்
துபாய்

Post a Comment