மகான் உன்னை நினைக்கின்றேன் -என்
மனமார நினைப் போற்றுகின்றேன்!
உலகம் செழிக்க உன்னதம் பெற்றிட
உலகமக்கள் உண்மையில் உறைந்திட
புதுநெறி புகுத்திய புதுமைத் துறவியே!
புதியஉலகம் படைக்க வேண்டியே
புவியெல்லாம் வலம் வந்தே -பல
புனிதர்களை படைத்த பிரம்மாவே!
புண்ணிய பூமியின் புனிதம் காக்க
மண்ணின் மைந்தர்கள் நல்மனத்தை துளைத்து
கருணை பொங்கும் மகத்துவம் செய்து...
மானுடம் வாழ மறுபிறவி சிறக்க
பிறப்பின் லட்சியம் அதை -இப்
பிறவியிலே அடைய தியான மென்னும்
மெஞ்ஞான வழி காட்டிய ஞானப் பெருங்கடலே!
இளைஞர் கூட்டத் தளபதியே!
நீயும், நின் சிந்தனைத் தந்த அமுதமும்
தேனுடன் பாலும் சேர்த்தாற் போலே;
தேவனே! நீயுமென் சிந்தையில் சேர்ந்து...
நீ புவிக்கு வந்த அந்தப் புனித நாளின்
நினைவில் திளைத்து களித்து -மனம்மயங்கி
விழித்து நின்னையே நினைத்து நினைத்து
பேருவகை பெற்றிடும் இப்பொழுதில்...
பிறவிப் பெருங்கடல் நீந்த -என்னுள்
பேரொளி பெருக அந்தப் பரமனை
பேராவலில் உருகி வேண்டுகிறேன்.
6 comments:
ஆன்மீகச் செம்மல்
அறிவுலக வேதாந்தி
விவேக ஆனந்தரின் பிறந்த நாளன்று
மனம் இனிக்கும் பதிவு ஐயா.
///மகேந்திரன் said...
ஆன்மீகச் செம்மல்
அறிவுலக வேதாந்தி
விவேக ஆனந்தரின் பிறந்த நாளன்று
மனம் இனிக்கும் பதிவு ஐயா.
13 January 2012 01:41////
நன்றி கவிஞரே!
வரிக்கு வரி வார்த்தைகளை சிறைப்படுத்தி ஒழுங்கமைத்து கவி வடிக்கும்
தம்பி உங்களை கவிஞர் என்றே அழைக்க மனம் நாடுகிறது.
கவிதை பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள்.
கவலையான தகவல் ஒன்று.....http://www.thamilkkural.com/index.php?option=com_content&view=article&id=1906:2012-01-10-09-27-52&catid=76:localothers&Itemid=519
///krishnar said...
வரிக்கு வரி வார்த்தைகளை சிறைப்படுத்தி ஒழுங்கமைத்து கவி வடிக்கும்
தம்பி உங்களை கவிஞர் என்றே அழைக்க மனம் நாடுகிறது.
கவிதை பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள்.
கவலையான தகவல் ஒன்று.....http://www.thamilkkural.com/index.php?option=com_content&view=article&id=1906:2012-01-10-09-27-52&catid=76:localothers&Itemid=519
13 January 2012 11:41////
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் அண்ணா!
நானும் அந்த செய்தியைச் சென்று பார்த்தேன்...
ஏனோ தெரியவில்லை அதில் ஒரு சந்தோசம் அவர்களுக்கு....
மனதிற்குள் புகுந்த மாயை... விரைவில் தெளிவுறும் என நம்புவோம்.
அருமை! விவேகாநந்தர் நம் பாரதத்திற்குக்கிடைத்த பொக்கிஷம்!
////ஷைலஜா said...
அருமை! விவேகாநந்தர் நம் பாரதத்திற்குக்கிடைத்த பொக்கிஷம்!
13 January 2012 16:31 ////
உண்மைதான்... இன்னும் சொன்னால் மனித குலத்திற்கே அது பெரும் பாக்கியம் தான்.
நன்றிகள் சகோதிரி...
Post a Comment