பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Sunday, 15 January 2012

நீயின்றி எதுவும் இல்லை!உலகத்தை வாழ்வித்துக் காப்போன் -நல்
உலகமதை ஒளியில் நிறைப் போன்
பிரபஞ்ச படைப்பின் ஆதியவன் -அவன்
கரம், நமைப்பற்றி அணைக்கவே -நன்றியோடு 
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் -சிக்கென
அவன் தாள் பிடித்தே பணிந்திடுவோம் !
சிவனே போற்றி! சீவன் காக்கும் 
தேவனே! தேவாதிதேவனே !! போற்றி!!!

பொங்கலோ பொங்கல் என்றே -புவியோர்
மங்களம் பொங்க; அன்போடு, நன்றியும்
ஆனந்த வாழ்வதும் எங்கும் பொங்கிடவே! 
வானம் பொய்க்காது வையமெல்லாம் செழிக்கவே!
தானதர்மங்கள் சிறந்து தரணியெல்லாம் மகிழவே! 
நாளும் நானிலம்காக்கும் நாயகனை - நம் 
பாலும் மனத்தை பரிசுத்த மாக்கியே
பரந்தாமன் சூரிய நாராயணன் -அவன் 
கரம்பற்றி அணைக்கவே கனிவோடு வணங்குவோம் 
எமைக் காப்பாய் கருணைக்கடலே! 

சூரியனே போற்றி! சுடர் மிகு தேவனே போற்றி!!
நாதனே போற்றி! ஆதி மூலனே போற்றி!
நல்லோர் தீயோர் என்னும் பேதமிலாது
எல்லோரும் இன்புற்று வாழவே - எந்நாளும் 
அருளும் ஏகாந்த மூர்த்தியே போற்றி!
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
போற்றி!! போற்றி!! போற்றி!!

இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

12 comments:

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அருமையான பாமாலை ஐயா
படித்து படித்து ரசித்தேன்.

krishnar said...

என் இனிய தமிழர் தைத்திருநாள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

minorwall said...

பொங்கலோ பொங்கல்.......

தமிழ் விரும்பி said...

///மகேந்திரன் said...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
15 January 2012 02:31 ///

மிக்க நன்றி... தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் மீண்டும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே!

தமிழ் விரும்பி said...

///மகேந்திரன் said...
அருமையான பாமாலை ஐயா
படித்து படித்து ரசித்தேன்.
15 January 2012 02:32////

மிக்க நன்றி நண்பரே! ...

தமிழ் விரும்பி said...

////krishnar said...
என் இனிய தமிழர் தைத்திருநாள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
15 January 2012 09:54 ////

மிக்க நன்றி... தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் மீண்டும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா!

தமிழ் விரும்பி said...

////minorwall said...
பொங்கலோ பொங்கல்.......
15 January 2012 16:20////

ஆம், மைனர்வாள்! காலையிலே பொங்கிவிட்டது பொங்கலோ பொங்கல் என்று!
மீண்டும் பொங்கல் வாழ்த்துக்கள்!.

ஷைலஜா said...

ஞாயிறு போற்றுதும்! ஆஹா நீங்கள் போற்றிவிட்டீர்கள் அருமை!

தமிழ் விரும்பி said...

ஷைலஜா said...
ஞாயிறு போற்றுதும்! ஆஹா நீங்கள் போற்றிவிட்டீர்கள் அருமை!
16 January 2012 00:02

நன்றிகள் சகோதிரி...

Shakthiprabha said...

நற்கவிதைக்கு பாராட்டுக்கள்

தமிழ் விரும்பி said...

////Shakthiprabha said...
நற்கவிதைக்கு பாராட்டுக்கள்
21 January 2012 00:40 ///

நன்றிகள் சகோதிரி..

Post a Comment