உலகத்தை வாழ்வித்துக் காப்போன் -நல்
உலகமதை ஒளியில் நிறைப் போன்
பிரபஞ்ச படைப்பின் ஆதியவன் -அவன்
கரம், நமைப்பற்றி அணைக்கவே -நன்றியோடு
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் -சிக்கென
அவன் தாள் பிடித்தே பணிந்திடுவோம் !
சிவனே போற்றி! சீவன் காக்கும்
தேவனே! தேவாதிதேவனே !! போற்றி!!!
பொங்கலோ பொங்கல் என்றே -புவியோர்
மங்களம் பொங்க; அன்போடு, நன்றியும்
ஆனந்த வாழ்வதும் எங்கும் பொங்கிடவே!
வானம் பொய்க்காது வையமெல்லாம் செழிக்கவே!
தானதர்மங்கள் சிறந்து தரணியெல்லாம் மகிழவே!
நாளும் நானிலம்காக்கும் நாயகனை - நம்
பாலும் மனத்தை பரிசுத்த மாக்கியே
பரந்தாமன் சூரிய நாராயணன் -அவன்
கரம்பற்றி அணைக்கவே கனிவோடு வணங்குவோம்
எமைக் காப்பாய் கருணைக்கடலே!
சூரியனே போற்றி! சுடர் மிகு தேவனே போற்றி!!
நாதனே போற்றி! ஆதி மூலனே போற்றி!
நல்லோர் தீயோர் என்னும் பேதமிலாது
எல்லோரும் இன்புற்று வாழவே - எந்நாளும்
அருளும் ஏகாந்த மூர்த்தியே போற்றி!
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
போற்றி!! போற்றி!! போற்றி!!
இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.