பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
There was an error in this gadget

Wednesday, 28 August 2013

கூறாய்க் கண்ணா! கோகுலக் கிருஷ்ணா!!


ஊனில் ஊறி உணர்வில் உருகி
உயிரினில் கலந்த ஒளியே
காணும் யாவிலும் காண்பார் விருப்பமாய்
காட்சி அளித்திடும் கதிரே
தேனூறும் பூவிலும் திரண்டெழும் மணத்திலும்
உருவஅருவமாய் விளங்கிடும் அமுதே
யானுனை தொழு திடும் பொழுதினில்
யாதானும் வந்துள் கூறாயோ
வேணு கானப் பிரியனே எந்தன்
வேதனை காண் கிலையோ
வாராய்க்கண்ணா! மாடுகள் மேய்த்து போதும்
கூறாய்க்கண்ணா மேயும் என்மனம்
வேறாய், வேரோடுவேராய் போகும்வழி தனையெனக்கு

கூறாய்க் கண்ணா! கோகுலக் கிருஷ்ணா!!

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

கோலாகல கோகுலாஷ்டமி வாழ்த்துகள்..!

Ramani S said...

அருமையான சிறப்புக் கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

G Alasiam said...

///இராஜராஜேஸ்வரி said...
கோலாகல கோகுலாஷ்டமி வாழ்த்துகள்..!///

///Ramani S said...
அருமையான சிறப்புக் கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்///

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!:)

பார்வதி இராமச்சந்திரன். said...

ஆவினங்களைப் போல் அல்லவா மன்னுயிர்களையும் காக்கிறான் கண்ணன்!!. அருமையான பகிர்வு!!. ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து ரசித்தேன். மிக்க நன்றி அண்ணா!!!

G Alasiam said...

///பார்வதி இராமச்சந்திரன். said...
ஆவினங்களைப் போல் அல்லவா மன்னுயிர்களையும் காக்கிறான் கண்ணன்!!. அருமையான பகிர்வு!!. ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து ரசித்தேன். மிக்க நன்றி அண்ணா!!!///

ஆம் ,
எல்லாம் ஆகி எல்லாவற்றிலும் தாமாகி
புல் புழுவிலிருந்து பிரபஞ்சம் யாவையும்
படைத்துக் காத்து அழித்துப்படைப்பவன் தானே!

நன்றிகள் சகோதரி...

நடராஜன் said...

ஐயா, அன்னைத்தமிழில் உங்களை சந்திப்பது மகிழ்சியாய் உள்ளது. வேதனை அவன் அருளால் அவன் தாள் வணங்க குறையும். ஆனால் அளப்பரிய அவன் கருணை உங்களை மேன்படுத்தவே என்று உணரும்போது ஒன்று புரியும். அவன் உங்களுக்கு உள்ளாய், உடனாய் இருந்தாலும் வேராகித்தானே தாங்கி நிற்கிறான். ஒரு மரத்தின் வேர் மென்மையாக இருந்தாலும் அதன் உறுதித்தன்மையை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வேண்டுமானால் அடிமரமாய் உறுதியாய். கடினத்தன்மையுடன் இருந்தாலும் உங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை கண்டிப்பாய் அறிந்திருந்து அருளுவான். ஏன் உங்கள் வேதனையே அவனுடைய அருளும் தன்மையால் தானே. இறைநிலை நின்று வாழ்த்தி மகிழும் உங்கள் நண்பன் கே.என்.சிவமயம்

Tamil Bloggers said...

தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

suppudu said...

கவிதை..!

இனிமை..!

பகிர்வினிற்கு மிக்க நன்றி..!

++++++++++++++++++

என்னுடைய வலைத்தளத்தில் இன்று:

வணக்கம்...

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

சரியா...?

உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

அப்போ தொடர்ந்து படிங்க...

ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

Post a Comment