பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday 15 December 2011

வஞ்சித்திணை பாட வேலும் விவேகமும் தாங்கிய விடியலுக்கு வெகுதூரம் இல்லை!


"பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே"
அவனுள்ளும் இருப்பதும் அந்த 
பேரொளி என்னும் பிரம்மமே என்றான்
மானுடம் போற்றிய மகாகவி....

போராளிகள் அல்ல யாராகிலும் சரி
சுட்டுப் பொசுக்கு, கொத்துக் கொத்தாய்
கூண்டோடு வெடித்துச் சிதறவே
வேண்டிய அளவுத் தாக்கு என்றே
ஈவு இறக்கமின்றியே கொலைவெறியோடு
பூ, பிஞ்சு,காய், கனி அனைத்தையும்
அடியோடு அழிக்கவே ஆணையிட 
எங்கிருந்தது வந்தது ஆணை..
ஐயகோ! ஈசனுக்கும் அடுக்குமோ?...

மனிதநேயம் தான் செத்துப் போனதோ?
ஓ மனமே!.. அது மனிதருக்கு மாத்திரம் 
இருக்கும் குணம் அன்றோ?...

கச்சத்தீவில் குச்சிக் கட்ட...
காட்டுமிராண்டிகளின் துணை கொண்டே 
மஞ்சளாற்றுக்கு மஞ்சம் போட்டு தந்து 
தந்திரமாய் வரலாறு தெரியாத
வந்தேறிகளின் துணைகொண்டே 
தஞ்சம் என்றே எங்கும் விரைந்து
நெஞ்சம் கொதிக்க மண்ணின் மைந்தர்களை 
தரணியெல்லாம் பரவ செய்து விட்டார்கள்!...

கெஞ்சிக் கேட்க பிச்சை அல்லவே - மனம்
துஞ்சியும் போகவில்லை எனினும் யாருக்கும்
அஞ்சியும் இருக்க வில்லை
மிஞ்சிப் போனால் இன்னும் எத்தனைக்காலம்
கொஞ்சம் பொறுத்திருப்போம் ஓரினத்தையே 
வஞ்சித்த பாவிகளை நிந்திக்க நெடுகாலம் இல்லை
வஞ்சித்திணை பாட வேலும் விவேகமும் தாங்கிய
விடியலுக்கு வெகுதூரம் இல்லை!!!....




8 comments:

Yaathoramani.blogspot.com said...

அப்பப்பா வார்த்தைகள் வரிந்து கட்டிகொண்டு
வந்து கவிதையில் விழுந்துள்ளதைப் படித்து
மிகவும் மயங்கிப் போனேன்
உண்ர்வின் வேகத்துக்கு வார்த்தைகள் இப்படி
வந்து விழுவதற்கு நிச்சயம் கலைமகள் அருள் வேண்டும்
உங்களுக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Unknown said...

////Ramani said...
அப்பப்பா வார்த்தைகள் வரிந்து கட்டிகொண்டு
வந்து கவிதையில் விழுந்துள்ளதைப் படித்து
மிகவும் மயங்கிப் போனேன்
உண்ர்வின் வேகத்துக்கு வார்த்தைகள் இப்படி
வந்து விழுவதற்கு நிச்சயம் கலைமகள் அருள் வேண்டும்
உங்களுக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1/////

தங்களின் மனம் கனிந்தப் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி...

SURYAJEEVA said...

நரம்புகளை முறுக்கேற்றி செல்லும் வார்த்தை கோலம்..

Unknown said...

////suryajeeva said...
நரம்புகளை முறுக்கேற்றி செல்லும் வார்த்தை கோலம்..
15 December 2011 16:06////

மிக்க நன்றி நண்பரே!

Radhakrishnan said...

//கெஞ்சிக் கேட்க பிச்சை அல்லவே - மனம்
துஞ்சியும் போகவில்லை எனினும் யாருக்கும்
அஞ்சியும் இருக்க வில்லை//

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அருமையான எழுத்து. நன்றி ஐயா.

நிவாஸ் said...

அருமையான வார்த்தைகள், அருமையான பதிவு

Unknown said...

////V.Radhakrishnan said...
//கெஞ்சிக் கேட்க பிச்சை அல்லவே - மனம்
துஞ்சியும் போகவில்லை எனினும் யாருக்கும்
அஞ்சியும் இருக்க வில்லை//

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அருமையான எழுத்து. நன்றி ஐயா.
21 December 2011 19:50 ///

நன்றிகள் நண்பரே!

Unknown said...

////நிவாஸ் said...
அருமையான வார்த்தைகள், அருமையான பதிவு
21 December 2011 20:17 ////

நன்றிகள் நண்பரே!

Post a Comment