பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Monday, 5 December 2011

ஓயாது உறிஞ்சிக் குடிக்கும் நீங்களும் என்ன அரசியல்வாதிகளா?உரிமையோடு உரிமைகீதம் பாடியே
உறங்காமல் கிரங்காமல் இரங்காமல்  
உறிஞ்சி உறிஞ்சி உயிரைவாங்கும்
உலங்குகளே உங்களை கேட்கிறேன்
உள்ளம் திறந்து உண்மை உரைப்பீரோ?

சைவனென்றும் அசைவனென்றும் பேதமில்லாப்
பெருவாழ்வை இசைவுபட வாழ்பவர்களே! 
இம்சையீன்ற இளம் அரக்க வீரர்களே 
அகிம்சை எங்கள் மூச்சென்ற
அந்தரங்கம் அறிந்தவர்கள் நீங்களே!உங்களில் தான் எத்தனை ஒற்றுமை
உங்களில் தான் எத்தனை சமத்துவம்
உங்களில் தான் உணவால் உன்னதமில்லா 
உயர்வுதாழ்வு உங்களுக்குள் இல்லை...

சாக்கடை பெருக்கினோம் அதன்மீதே
பூக்கடை பரப்பினோம் உண்டுகளிக்க
வேர்கடலை அவித்தோம் அதை
வேண்டுமளவு திறந்து வைத்தே
போக்கடையற்ற சாக்கடையோரம் 
நிறுத்தி ஆட்களை கூட்டினோம் 

வீட்டைச்சுற்றி குப்பைகள் குவித்தோம் 
வீதியில்உயர் கோபுரங்கள் ஆக்கினோம்  
வீடுதோறும் சென்று அருள்பாலிக்க அங்கே 
உங்களை கடவுளாயும் நிறுத்தினோம்.

வாய்க்கால் வெட்டினோம் எங்கள்
வீட்டுக்கழிவை அதிலேப் பாய்ச்சினோம்
இடுப்பளவு குழிதோண்டி உங்களை
இடைவிடாத இன்பத்தில் ஆழ்த்தினோம் 

இன்னும் சொன்னால் ஏமார்ந்த நேரம் 
அதை எதிர்வீட்டிற்கும் பாய்ச்சினோம் 

பெருங்காடுகள் அழித்தோம் - உபாயமாக
சிறுசெடிகள் நிறைந்த பெருங்காடுகளை
எங்கள் வீட்டைச் சுற்றியே வளர்த்தோம்

இரவெல்லாம் இறக்கைகட்டிப் பறந்த
உங்கள் களைப்பை அங்கே போக்க
மஞ்சம் வேண்டுமே என்ற நல்ல
நெஞ்சம் கொண்ட நாங்கள்...

ஓ! நன்றிகெட்ட கொசுக்களே...
இத்தனையும்செய்த எங்களை  
ஓயாது உறிஞ்சிக் குடிக்கும் 
நீங்களும் என்ன அரசியல்வாதிகளா?

ஒய் திஸ் கொலைவெறி! கொலைவெறி!! கொலைவெறி டி!!!


4 comments:

ராஜா MVS said...

அருமை...

தமிழ் விரும்பி said...

///ராஜா MVS said...
அருமை...
5 December 2011 23:44////

நன்றிகள் நண்பரே!

ஷைலஜா said...

உங்க வலைப்பூ இருக்கே என் டாஷ்போர்ட்ல தமிழ்விரும்பி....ஏதும் செய்யலையே நான் எதுக்கும் மறுமுறை செக் பண்ணிட்றேன்

தமிழ் விரும்பி said...

///ஷைலஜா said...
உங்க வலைப்பூ இருக்கே என் டாஷ்போர்ட்ல தமிழ்விரும்பி....ஏதும் செய்யலையே நான் எதுக்கும் மறுமுறை செக் பண்ணிட்றேன்
9 December 2011 00:24////

நல்லது நன்றி சகோதிரி... தங்களின் பெயர் எனது பதிவில் உள்ளப் பட்டியலில் காணமல் போய்விட்டது அதனால் வினவினேன்.
தங்களின் வருகைக்கு நன்றிகள்.

Post a Comment