(நன்றி தினமலர்)
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175 -ஆவது பிறந்தநாளான இன்று அவரை வணங்கி பேரருள் பெருவோம்.
வங்கக் கடலோரம் வந்துதித்த ஞானச்சுடரே!
எங்கள் எண்ணமெல்லாம் நிறைந்த அன்புச்சுடரே!
தங்க குருவே தரணிபோற்றும் திருவே!
சங்கடமில்லா வாழ்வைமுழங்கிய வேதச் சங்கநாதமே!
காளியின் பக்தனே! வங்காளச்சித்தனே! -அன்
பாழிப் பித்தனே! ஜீவமுக்தனே!
பாரதத்தாயின் இடது இடுப்பில் இருகமர்ந்தோய்!
பாரெல்லாம் பணிந்துப் போற்ற உயர்ந்தோய்!
தேனினும் இனிய அன்பைப் பொழிந்தோய்!
'ஊனைஉருக்கி உள்ளொளி' பொங்கிப்
பெருகியே
மானுடம் செழிக்க, மகத்துவம் புரியவே
மாணிக்க மாணவன் நரேந்திரனை பயந்தே
மாநிலம் உய்ய மாதவம் செய்தோய்!
கருணைக்கடலே! களங்கமில்லா அன்பின் ஊற்றே!
அருள்வாய் எந்தையே! நானுனை -மானசீகக்
குருவாய் நினைந்தே நினதடிப்போற்றுகிறேன்!.