பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday 2 December 2011

நாயேனெனை நற்கதியே வைப்பாய் தேவதேவனே!

சேற்றிடை பூத்த தாமரை மலரும் 
காற்றிடை பரவும் தாழம்பூ மணமும்
ஊற்றிடை பொங்கும் நீர் குமிழும்
நாற்றிடை நெளிய நடனமாடும் தென்றலும்
சோற்றிடை இட்ட பசுநெய்யும் - அமுதமான 
பாட்டிடை நெய்த இசையின் இனிமையும்
எனை மகிழ்விக்கும் இவையாவும்ஈசனே!
எங்கும் நீக்கமற அமைந்த இறைவனே!
உனைப் போற்றிப் பணிதலில் பெறும்
ஆனந்தத் தினுமிவை சிறந்தனவோ?... 

சாட்சிகள் ஏதும் தேவையில்லை - மன
சாட்சியும் இங்கு வேறில்லைஎங்கும்
காட்சியாய் உனைக் காண்கினும்உந்தன்
மாட்சிமை உணரும் தாமரை ஒளிரவில்லை... 
வேட்கை கொண்டேன்வெளியாய், வெளிச்சமாய் 
வேட்விக்கும் போது உயரும் நெருப்பாய் 
பாற்கடல் பொங்கும் நீராய் - பச்சை
நிறம் பரப்பி பரவசமூட்டும் நிலமாய்
இசையாய்மழையாய் இயற்கை யாவிலும்
இயக்கமாய் இருக்கும் இருப்பே!... 

ஊனை உருக்க, உள்ளொளி பெருக்க
நாவை அடக்க நமச்சிவாய மெனும்
நற்கதிதரும் மந்திரமே என்னுள் ஒலிக்கவே 
கோவே! குருவே!! குணமில்லா அருவே!!! 
தேவே! திருவே!! திரிலோக கருவே!!! 
தேனே! தீதில்லாஅமுத ஊணே!! - வாணியின் 
வீணை கொட்டும் அமுதப் பாணே!!!
நான் என்னும் அகந்தையை - நினதருள்
நாண் கொண்டு வீழ்த்தியே; நாயேனெனை     
நற்கதியே வைப்பாய் தேவதேவனே! 

8 comments:

ஷைலஜா said...

//நான் என்னும் அகந்தையை - நினதருள்
நாண் கொண்டு வீழ்த்தியே; நாயேனெனை
நற்கதியே வைப்பாய் தேவதேவனே!

//

சாட்சிகள் ஏதும் தேவையில்லை - மன
சாட்சியும் இங்கு வேறில்லை; எங்கும்
காட்சியாய் உனைக் காண்கினும்; உந்தன்
மாட்சிமை உணரும் தாமரை ஒளிரவில்லை//

மிக அழகான பாடல் தாமரையை ஒளிரவைப்பதுவும் அவனே...மனதில் நின்றுவிட்ட வரிகள்.

ராஜா MVS said...

வரிகள் ஒவ்வொன்றும் ஆழமான அர்தத்தில்... மிக அருமையான கவிதை..

Unknown said...

///ஷைலஜா said...
//நான் என்னும் அகந்தையை - நினதருள்
நாண் கொண்டு வீழ்த்தியே; நாயேனெனை
நற்கதியே வைப்பாய் தேவதேவனே!

//

சாட்சிகள் ஏதும் தேவையில்லை - மன
சாட்சியும் இங்கு வேறில்லை; எங்கும்
காட்சியாய் உனைக் காண்கினும்; உந்தன்
மாட்சிமை உணரும் தாமரை ஒளிரவில்லை//

மிக அழகான பாடல் தாமரையை ஒளிரவைப்பதுவும் அவனே...மனதில் நின்றுவிட்ட வரிகள்.
2 December 2011 23:10 ///

நன்றிகள் சகோதிரி!...

Unknown said...

////ராஜா MVS said...
வரிகள் ஒவ்வொன்றும் ஆழமான அர்தத்தில்... மிக அருமையான கவிதை..
2 December 2011 23:35 ///

மிக்க நன்றி நண்பரே!

Radhakrishnan said...

//நாயேனெனை நற்கதியே வைப்பாய் தேவதேவனே!//

இங்கே நாய் என குறித்து கொள்வது நன்றியை, விசுவாசத்தை காட்டுவதா?! அல்லது நாய் போல் இந்த பூவுலகில் அவதிபடுவதை காட்டுவதா?

பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

////V.Radhakrishnan said...
//நாயேனெனை நற்கதியே வைப்பாய் தேவதேவனே!//

இங்கே நாய் என குறித்து கொள்வது நன்றியை, விசுவாசத்தை காட்டுவதா?! அல்லது நாய் போல் இந்த பூவுலகில் அவதிபடுவதை காட்டுவதா?

பகிர்வுக்கு நன்றி.
3 December 2011 00:26////

தங்களின் வருகைக்கு நன்றிகள்...
தாங்கள் சொல்வதில் இரண்டையும் கொள்ளலாம்.
இருந்தும் நன்றியை கொள்வது தான் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணம்.
நீங்களும் அதையே கொள்வீர்கள் என்பதும் எனது நம்பிக்கை.
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் நண்பரே!

Thanjavooraan said...

ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி உலகுக்கு உணர்வூட்டிய மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் கருத்தோடு ஒத்த உங்கள் கவிதை, நயத்தோடும், பக்தியோடும் தரப்பட்டிருக்கிறது. உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும் என்பது பாரதி வாக்கு. உள்ளம் எப்போதும் ஒளியிடை நின்று பிரகாசித்துக் கொண்டிருந்தால் போதும், இருட்டின் நிழல்கூட அங்கு நுழையமுடியாது. பலரும் உணர்ந்து பயன்பெறும் வண்ணம் உளது தங்கள் கவிதை மலர். வாழிய நீவிர்.

Unknown said...

////Thanjavooraan said...

3 December 2011 13:14////

வணக்கம் ஐயா!
தங்களின் பாராட்டும், வாழ்த்துக்களும் என்னை மகிழ்விக்கிறது...
நன்றிகள் ஐயா!

Post a Comment