பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
There was an error in this gadget

Monday, 21 November 2011

வினைகள் அறுக்க அருள்வாய் நீயே! ஐயப்பா!! என் ஐயப்பா !!!...




அபிஷேகப் பிரியன் நீயே!
அலங்காரப் பிரியனும் நீயே!
சமதர்மக் கடவுள் நீயே!
சத்தியத்தின் மறுஉரு  நீயே!
நித்திய ஜோதி நீயே!
என்நெஞ்சில் நிறைந்தவனும் நீயே!
அளபில்லா ஆனந்தம் நீயே!
அன்னதானப் பிரபுவும் நீயே!
உத்திரத்தில் உதித்தவன் நீயே!
உத்திராட்சம் அணிந்தவன் நீயே!
மார்கழியில் பிறந்தவன் நீயே!
மாதவம் கொள்பவனும் நீயே!
மோகினியின் புதல்வனும் நீயே!
மோகத்தை அறுப்பவனும் நீயே!
வன்புலி நாயகன் நீயே!
வானோர் போற்றும் தெய்வமும் நீயே!
என்னுள் உறைந்தவன் நீயே!
எடுத்தாண்டு கொள்வாய் நீயே!
அத்வைத தத்துவம் நீயே!
அநாதை ரட்சகனும் நீயே!
வேண்டும் வரம் தருபவன் நீயே!
வினைகள் அறுக்க அருள்வாய் நீயே!

அரிகர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! 
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!! 
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!!



6 comments:

ராஜா MVS said...

சுவாமி சரணம்...

ஷைலஜா said...

ஐயனுக்கு எழுதிய பாட்டு இனிக்கிறது முடிந்தால் இதை ராகம்போட்டு பாடி அனுப்பறேன்

தமிழ் விரும்பி said...

///ராஜா MVS said...
சுவாமி சரணம்...
21 November 2011 19:47///

சுவாமி சரணம்! சுவாமி சரணம்!! சுவாமி சரணம்!!!

தமிழ் விரும்பி said...

////ஷைலஜா said...
ஐயனுக்கு எழுதிய பாட்டு இனிக்கிறது முடிந்தால் இதை ராகம்போட்டு பாடி அனுப்பறேன்
21 November 2011 20:12///

ஆஹா.. அருமை அப்படியே செய்து அனுப்புங்களேன் சகோதிரி...
விரைவில் வருவான் வேதநாயகத்தின் சோதரன்!
சுவாமியே சரணம் ஐயப்பா!

minorwall said...

தமிழ்விரும்பிக்கு எனது அன்புப் பிறந்த தின வாழ்த்துக்கள்..ஒரு நாள் லேட் ஆகிவிட்டது..லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா சொல்லிக்குறேன்..

தமிழ் விரும்பி said...

////minorwall said...
தமிழ்விரும்பிக்கு எனது அன்புப் பிறந்த தின வாழ்த்துக்கள்..ஒரு நாள் லேட் ஆகிவிட்டது..லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா சொல்லிக்குறேன்..
22 November 2011 20:25////

ரொம்ப நன்றி மைனர்வாள்...

Post a Comment