பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
There was an error in this gadget

Saturday, 5 November 2011

என்னை ஏன் மறந்தாய்? எரியும் நெருப்பில் எறிந்தாய்!என்னை ஏன் மறந்தாய்?
எரியும் நெருப்பில் எறிந்தாய்!
கண்ணை நானும் இழப்பேன்!
உன்னை நானும் இழப்பேனோ?

உயிரை உனக்கு தந்தேன்
என்னுயிரே நீயென வந்தாய்
விண்ணில் ஏறவும் துணிந்தேன்
மண்ணே சொர்க்கமென உணர்ந்தேன்...

உன்னை எனக்குப்பிடிக்கும் என்றவளே
என் கண்ணை கவர்ந்து சென்றவளே 
என்னை ஏனடி?  மறந்தாய்
ஏது செய்யவே நினைந்தாய்?


ஜென்மங்கள் கோடி எடுத்தாலும்
விண்ணிலே பிறந்து ஒளிர்ந்தாலும்
வேண்டும் வரம் ஒன்று மட்டுமே அது 
என் ஜீவனாக என்றும் நீ மட்டுமே...

வரம் வேண்டியே தவம் நின்றேன் 
தரவேண்டிய வரம் மறந்தே 
என்னை ஏன்? மறந்தாய்
இதயக் கதவை அடைத்தாய்...

இமயம் ஏறிய அவலம் - இங்கே 
இதயம் பற்றி எரியும்!...
உதயம் இனியும் உண்டோ? - உன் 
உயிரும் என்னுள் கலந்து நின்றே!...

விண்ணில் பறக்கவும் வேண்டேன்
உன்னில் கலக்கவும் வேண்டேன்
மண்ணில் சொர்க்கமும் வேண்டேன் 

என்னுள் என்னை அல்லாமல்
உன்னை மட்டுமே இருக்க வேண்டி
பெண்ணே! உன்னை ஒன்றே கேட்பேன் 
அதனாலே மீண்டும் உயிர்ப்பேன்...

மறுக்காமல் அளிப்பாய் - மனம்
கிறுக்காய்ப் போன என் இதயம்
நொறுங்காமல் ஒருசொல் உதிர்ப்பாய் 

ஆம், ஒரு சொல் உதிர்த்து
என்னை மீண்டும் உயிர்ப்பாய்!
ஒரே ஒரு சொல் அது?
உன்னை எனக்கு பிடிக்கும் என்று!

அன்புடன்
- தமிழ் விரும்பி.


8 comments:

ராஜா MVS said...

காதலின் வலிகளையும், அன்பையும் தாங்கிய வரிகள்....

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமையான கவிதை..

Lakshmi said...

நல்ல சொற்பிரயோகங்களுடன் அமைந்த நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

தமிழ் விரும்பி said...

///ராஜா MVS சொன்னது…
காதலின் வலிகளையும், அன்பையும் தாங்கிய வரிகள்....////

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றிகள் நண்பரே

தமிழ் விரும்பி said...

/////முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
அருமையான கவிதை..///

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றிகள் நண்பரே

தமிழ் விரும்பி said...

/////Lakshmi சொன்னது…
நல்ல சொற்பிரயோகங்களுடன் அமைந்த நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.////

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றிகள் சகோதிரி!

கோகுல் said...

இந்த கவி எனக்குப்பிடிக்கும்!

தமிழ் விரும்பி said...

////கோகுல் சொன்னது…
இந்த கவி எனக்குப்பிடிக்கும்!////

வருகைக்கும், ரசிப்பிற்கும் மிக்க நன்றி நண்பரே!

Post a Comment