பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday, 2 November 2011

அதர்மத்தை விளக்க வரலாறு வயிற்றில் சுமக்கும் நரகல்கள் இவர்கள்....

கயவர்கள் இவர்கள் வேகமாக
விரைந்து பரவிய 
காட்டாறு போன்றவர்கள்

உலகை நாசம் செய்தது
மட்டுமல்லாமல் தன்னையே
நாசம் செய்து கொண்ட
ஆலகால விஷம் கொண்ட
கரு நாகங்கள்...

அவச்சுழிக் கொண்டே 
அவனியில் முளைத்த
அருவருத்த முட்கள்

அவத்தையே அவதானித்து
அவதி செய்வதே மூச்சாய்...
அவ நெறிக் கொண்டே 
அவலம் விளைவித்த
அவமான சின்னங்கள் இவர்கள்
அவாவால் அசிங்ககப் பட்டே
அவழியில் ஆழ்ந்து
அநாதை நாய்களாய் அழிந்தவர்கள்

அதர்மத்தை விளக்க
வரலாறு வயிற்றில் சுமக்கும்
நரகல்கள் இவர்கள்....

ஒருவேளை
மலக்குடலில் கருவுற்று
மனிதக் கடலில் கலந்தவர்களோ?
அத்தனை அசிங்கமான 
ஜென்மங்களை பற்றி 
வேறென்ன சொல்வது!

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்றாள் தமிழ் மூதாட்டி...
புல்லாய், பூண்டாய், புழுவாய் என்று தொடங்கி கடைசியாக மனிதன்
அளவிற்கு உயர்ந்த பின்னும் பாழும் கொடுங் குணத்தால் கொடுமையின்
உச்சிக்கே சென்று அங்கிருந்து பந்தாடப்பட்டு மீண்டும்... 
ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது! 
இன்னும் எத்தனை கோடிமுறை மீண்டும், மீண்டும் பிறந்து இறந்து..... 
எப்போது மீண்டும் இந்த அற்புத மானிடப் பிறவியோ
அந்த மகேசனே அறிவான்....  

இந்தப் பட்டியல்கள் இன்னும் நீளும்...

இவர்களைப் பற்றிய சுருக்கமான விசயங்களை 


இங்கே படிக்கலாம்.

நன்றி வணக்கம்,

அன்புடன்,
தமிழ் விரும்பி.


21 comments:

suryajeeva said...

அணு பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை என்பது மட்டுமே நிஜம், பல அணுக்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு மீண்டும் பிறக்கும் என்பது நகைப்பு

தமிழ் விரும்பி said...

////suryajeeva சொன்னது…
அணு பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை என்பது மட்டுமே நிஜம், பல அணுக்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு மீண்டும் பிறக்கும் என்பது நகைப்பு
௨ நவம்பர், ௨௦௧௧ ௨:௦௦ பிற்பகல்/////

அழியக் கூடிய உடலையும்
அதனுள் இயக்கமாக இருக்கும்
ஆன்மாவையும் பற்றிய படைப்பு!
புரிந்தால் திகைப்பு!
புரியாத யாவும் நகைப்பே!!

வருகைக்கு நன்றிகள் தோழரே!

ராஜா MVS said...

தங்களின் கவிதை அருமை...

ராஜா MVS said...

தண்ணீரை சுடத்தால் நீர் ஆவியாக மாறும். அங்கே நீர் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது...

அதுபோலவே மனித உடலும்.....

தமிழ் விரும்பி said...

////ராஜா MVS சொன்னது…
தங்களின் கவிதை அருமை...
௩ நவம்பர், ௨௦௧௧ ௧௨:௨௮ முற்பகல்////

பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே!

தமிழ் விரும்பி said...

////ராஜா MVS சொன்னது…
தண்ணீரை சுடத்தால் நீர் ஆவியாக மாறும். அங்கே நீர் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது...

அதுபோலவே மனித உடலும்.....
௩ நவம்பர், ௨௦௧௧ ௧௨:௩௧ முற்பகல் /////

தாங்கள் சொல்வதும் சரி தான்....
நீரில் உள்ள அத்தனைத் தாதும் அந்த ஆவியான நீரில் இருக்கிறதா என்பதும் ஆய்வுக்கு உரியதே!
இருந்த போதும்.... நீர் என்பதும் கூட அதில் இருக்கும் வெப்ப நிலையைப் பொறுத்தே... நீர் நீராகவே இருக்கிறது வெப்பத்தால் அதன் நிலை மட்டுமே மாறுகிறது என்றும் கொள்ளலாம்...

எல்லா ஜடப் பொருளும் இயக்கம் கொள்ள ஒரு சக்தி தேவைப் படுகிறதே அந்த சக்தி மட்டுமே அழிவில்லாதது.... அந்த சக்தி எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேரும்! சேரவேண்டும் அது தான் ஏற்பாடு / அதன் லட்சியமும் கூட.... அதனாலே அது அழியும் உடலை மீண்டும் மீண்டும் எடுக்கிறது அது தனது லட்சியத்தை அடையும் வரை என்கிறார்கள் பெரியோர்...

நேரமின்மையால் தான் நான் உங்களைப் போன்ற நண்பர்களின் வலைப் பதிவுகளில் வந்து பின்னூட்டம் இடுவதில்லை... தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம்.

தங்களின் வருகைக்கும், பின்நூட்டத்திகும் நன்றிகள் நண்பரே!

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ராஜா MVS said...

~*~நேரமின்மையால் தான் நான் உங்களைப் போன்ற நண்பர்களின் வலைப் பதிவுகளில் வந்து பின்னூட்டம் இடுவதில்லை... தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம்.~*~

பரவாயில்லை நண்பரே...
பலரும் அப்படிதான் பல நண்பர்களின் பதிவுகளில் பின்னூட்டம் இடமுடிவதில்லை... எனக்கும் தான்...

தங்களின் மனதில் எங்களின் நினைவு இருக்கிறது என்பதே மகிழ்ச்சி தான்...

மிக்க நன்றி... நண்பரே...

ராஜா MVS said...

தங்களின் பதில் எனக்கு ஏற்ப்புடையதே...

இருந்தாலும் பஞ்சபூதங்கள் அடங்கியதே மனித உடல். எரிக்கும்/புதைக்கும் போதோ அவை அவைகளோடு கலந்துவிடுகிறது. இதில் தாங்கள் கூறுவதுபோல் வேதியியல் மாற்றங்கள் நிகழ்வதென்பது இயற்க்கையே...
இதில் அழிவு என்பது எங்கும் இல்லை என்பதே என் கருத்து...
ஒன்று இன்னோன்றாக உருமாற்றம் அடைகிறது அவ்வளவுதான்...

என் சிந்தனையில் எட்டியதை தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்... நண்பரே...
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...

மிக்க நன்றி...

தமிழ் விரும்பி said...

////ராஜா MVS சொன்னது…
~*~நேரமின்மையால் தான் நான் உங்களைப் போன்ற நண்பர்களின் வலைப் பதிவுகளில் வந்து பின்னூட்டம் இடுவதில்லை... தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம்.~*~

பரவாயில்லை நண்பரே...
பலரும் அப்படிதான் பல நண்பர்களின் பதிவுகளில் பின்னூட்டம் இடமுடிவதில்லை... எனக்கும் தான்...

தங்களின் மனதில் எங்களின் நினைவு இருக்கிறது என்பதே மகிழ்ச்சி தான்...

மிக்க நன்றி... நண்பரே...////

தங்களின் அன்பிற்கும் புரிந்துணர்வுக்கும் நன்றிகள் நண்பரே!

தமிழ் விரும்பி said...

////ராஜா MVS சொன்னது…
தங்களின் பதில் எனக்கு ஏற்ப்புடையதே...

இருந்தாலும் பஞ்சபூதங்கள் அடங்கியதே மனித உடல். எரிக்கும்/புதைக்கும் போதோ அவை அவைகளோடு கலந்துவிடுகிறது. இதில் தாங்கள் கூறுவதுபோல் வேதியியல் மாற்றங்கள் நிகழ்வதென்பது இயற்க்கையே...
இதில் அழிவு என்பது எங்கும் இல்லை என்பதே என் கருத்து...
ஒன்று இன்னோன்றாக உருமாற்றம் அடைகிறது அவ்வளவுதான்...

என் சிந்தனையில் எட்டியதை தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்... நண்பரே...
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...

மிக்க நன்றி...////

தாங்கள் சொல்வது சரி அதை நான் மறுக்கவில்லை
அதையும் இப்படிக் கூறுவோமா...
சக்தி மற்றுமே வேறு ஒரு சக்தியாக உரு மாற்றம் கொள்கிறது....
ஜடப் பொருள்கள் யாவிலும் சக்தி சேரும் போது அது இயங்குகிறது
அது நீங்கும் பொது ஜடப் பொருளாகவே இருக்கிறது....

பஞ்சபூதங்களின் இயக்கமும் அதனுள் உள்ள சக்தி என்றும் கொள்ளலாம் அல்லவா!
பிரபஞ்சத் தோற்றமும் அப்படித்தானே!....

உடல் என்பது பஞ்சபூதங்களின் மொத்த கூட்டு அவைகள் தாங்கள் சொல்வது போல்
உருமாற்றம் கொள்ளும் போது அங்கே உடல் அழிந்ததாக சொல்லலாம் இல்லையா!
நன்றிகள் நண்பரே! நேரம் கிடைக்கும் போது வந்து செல்லுங்கள்.

நம்பிக்கைபாண்டியன் said...

உலகை நாசம் செய்தது
மட்டுமல்லாமல் தன்னையே
நாசம் செய்து கொண்ட
ஆலகால விஷம் கொண்ட
கரு நாகங்கள்

நல்ல சாடல் வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//அவத்தையே அவதானித்து
அவதி செய்வதே மூச்சாய்...
அவ நெறிக் கொண்டே
அவலம் விளைவித்த
அவமான சின்னங்கள் இவர்கள்
அவாவால் அசிங்ககப் பட்டே
அவழியில் ஆழ்ந்து
அநாதை நாய்களாய் அழிந்தவர்கள்

//
அருமையான வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

ராஜா MVS said...

என் கருத்துக்கு, தங்களின் மேலான பதில் விளக்கம் கருத்துரைக்கு நன்றி... நண்பரே..

தமிழ் விரும்பி said...

///நம்பிக்கைபாண்டியன் சொன்னது…
உலகை நாசம் செய்தது
மட்டுமல்லாமல் தன்னையே
நாசம் செய்து கொண்ட
ஆலகால விஷம் கொண்ட
கரு நாகங்கள்

நல்ல சாடல் வரிகள்///

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றிகள் நண்பரே

தமிழ் விரும்பி said...

////"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
//அவத்தையே அவதானித்து
அவதி செய்வதே மூச்சாய்...
அவ நெறிக் கொண்டே
அவலம் விளைவித்த
அவமான சின்னங்கள் இவர்கள்
அவாவால் அசிங்ககப் பட்டே
அவழியில் ஆழ்ந்து
அநாதை நாய்களாய் அழிந்தவர்கள்

//
அருமையான வரிகள்///

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றிகள் நண்பரே

தமிழ் விரும்பி said...

////ராஜா MVS சொன்னது…
என் கருத்துக்கு, தங்களின் மேலான பதில் விளக்கம் கருத்துரைக்கு நன்றி... நண்பரே..
௫ நவம்பர், ௨௦௧௧ ௭:௦௮ பிற்பகல்///

நன்றிகள் நண்பரே

அ. வேல்முருகன் said...

மேற்கண்ட சர்வாதிகாரிகளில் கடாபி மற்றவர்களை போல் அல்ல என்பது என் எண்ணம். எண்ணை வளங்களை கொள்ளையடிப்பதற்காக கொல்லப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

Swaminathan T said...

Hitler is known by all. Others name are not given. Which country they belong to? What they did? Why cant you give details?

G Alasiam said...

Dear Mr. Swaminathan T,

Thanks for your comments and for your kind info.
I have already provided a link at the bottom o the post, please go to the below provided link to read about them.

http://bharathipayilagam.blogspot.sg/2011/10/blog-post_23.html

Thanks and Regards!

Post a Comment