பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Sunday, 2 October 2011

அண்ணலே! எங்கள் ஆருயிரே!!



அண்ணலே! எங்கள் ஆருயிரே!!
கலியுக வரதர், கண்கண்ட மகாபுருஷர் -ஆன்ம
வலிமையில் இமயம் வென்றவர் நமது மகாத்மா அவர்களின் பிறந்த 
இந்நாள் என்றும் நமக்கெல்லாம் பொன்னாள். 
இந்த சத்தியம் பெற்ற நித்தியக் குழந்தையை 
புத்தியில் கொண்டே புனைவேன் ஒருப் பாடலை....


அன்பெனும் பேரொளியின் அற்புதக் குழந்தை 
மண்ணுயிரெல்லாம் மாண்புற மாதவம் புரிந்தே
விண்ணவர்போற்ற விந்தைகள் செய்தார் - மகாத்மா 
மண்ணுலகம் வந்த மாதவனே!.



செயற்கரிய செய்தார், செவ்வனே செய்தார்
செய்யும் யாவிலும் சத்தியம் கொண்டார் 
அஹிம்சையெனும் யாகம் வளர்த்தே -அதிலே 
அடிமை தளைகளை ஆகுதியாக்கி -அழகிய 
விடுதலை வேள்வி, எங்கும் நடத்தியே 
ஊமைமக்களை உரிமை முழக்கமிடச் செய்த  
உலகம் போற்றும் உன்னதத் தலைவர் 
மனிதநேய மகாபுருஷன்; பாரதம் ஈன்ற
தவப்புதல்வன், கத்தியும் ரத்தமும் இன்றியே
யுத்தம் செய்யும் புத்தம் புதிய கலையை
பூமியில் படைத்த கலியுக பிரம்மா 
ஜீவமுக்தி பெற்ற ஸ்ரீராமபக்தர் -எங்கள் 
அண்ணல் மகாத்மா வான் புகழ்
வாழிய! வாழிய!! வாழியவே!!! 

அன்புடன்,
தமிழ் விரும்பி -ஆலாசியம் கோ.


4 comments:

கோகுல் said...

அண்ணல் மகாத்மா வான் புகழ்
வாழிய! வாழிய!! வாழியவே!!!//

பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

அண்ணல் காந்தியைப் பற்றிய கவிதை
அருமை நண்ப!
இன்று நானும் ஒன்று எழுதியுள்ளேன்
வருக கருத்துரை தருக!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

///கோகுல் சொன்னது…
அண்ணல் மகாத்மா வான் புகழ்
வாழிய! வாழிய!! வாழியவே!!!//

பகிர்வுக்கு நன்றி!///

தங்களின் வருகைக்கும், அன்பிற்கும் நன்றிகள் நண்பரே!

Unknown said...

////புலவர் சா இராமாநுசம் சொன்னது…
அண்ணல் காந்தியைப் பற்றிய கவிதை
அருமை நண்ப!
இன்று நானும் ஒன்று எழுதியுள்ளேன்
வருக கருத்துரை தருக!

புலவர் சா இராமாநுசம்////

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும், மேலான அன்பிற்கும் நன்றிகள் ஐயா!

Post a Comment