சமயபுரம் அமர்ந்தவளே சாகாவரம் தருபவளே!
உமையவளே, உண்மைதோறும்
உறைபவளே!
அம்மையே, எமையாதரிக்க வேண்டியே - உம்மையே
தேடிவந்தேன் ஏழைமுகம் பாராயோ!
"எங்கெங்கு காணினும் சக்தியன்றோ" அவள்
எங்கள் இதயம் நிறைந்த பக்தியன்றோ
தங்கமான குணமதில் தாயாய் தங்கியருளும்
மங்கலமுத்துமாரி வுன்சேவடி போற்றுகின்றேன்!
வயல்நடுவே வருகின்றேன் வரும்பாதை, அதனூடே
முயலோட, நதிதனிலே கயலாட
கரைதனிலே
மயிலாட யாதொடும் சேர்மனமாட வேண்டுகிறேனம்மா
குயல்போலே நின்புக்ழ்பாட அருள்வாயே!
தேரோடும் வீதியெங்கும் தேடுகின்றேன்ம் -மஞ்ச
நீரோடு வேப்பில்லையும் சூட்டிடவே - காவிரி
ஆறோடும் கரையினிலே தேடிவந்தேன் - அம்மா
காட்டிடுவாய் கனிமுகத்தை நேரில்வந்தே!
பக்தி ஆறோடும்பாதை தோறும் பாடுகிறேன்
சக்தி உனையே யாவினிலும் காணுகிறேன்
சத்தியத்தில் வாழ்பவளே சங்கடங்கள் தீர்ப்பவளே
நித்தியானந்தம் அருள்வாய் தாயே!
சக்தியே நீயல்லால், இல்லையே முக்தியே
பக்தியே கொண்டிங்கு நின்பாதம் பற்றுகின்றேன்
புத்தியில் நின்றுடுவாய் புலனின்பம் மறந்திடவே
சித்தியினை தந்திடுவாய் சீக்கிரம்வந்திங்கே!
மஞ்சளாடை உடுத்தியுமே மண்டலமும் விரதமிருந்தே
அஞ்சுதிரி நெய்யிலேற்றி மாவிளக்கு
போட்டுவந்தேன்
தஞ்சமென்று வந்தென்னை தடுத்தாண்ட ருளுவாயே
நெஞ்சமெல்லாம் நிறைந்த சமயபுரத்தாயே!
அன்புடன்,
தமிழ் விரும்பி,
ஆலாசியம் கோ.
6 comments:
பாடல் நன்றாக உள்ளது! - உமா
///பெயரில்லா சொன்னது…
பாடல் நன்றாக உள்ளது! - உமா
12 அக்டோபர், 2011 1:43 pm///
நன்றிகள் உமா..
என் அன்னையைக்கண்டேன் மனம்குளீர்ந்தேன்
////ஷைலஜா சொன்னது…
என் அன்னையைக்கண்டேன் மனம்குளீர்ந்தேன்
13 அக்டோபர், 2011 2:38 am////
ஆம், நம்மை எப்போதும் காத்து நிற்பவள் அவள் தானே..
நன்றிகள் சகோதிரி...
மகமாயியின் பாடல் அருமை.
////சாகம்பரி சொன்னது…
மகமாயியின் பாடல் அருமை.
13 அக்டோபர், 2011 7:01 pm ////
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் சகோதிரி!
Post a Comment