The
Nobel Peace Prize 2011
Ellen
Johnson Sirleaf
Leymah
Gbowee
Tawakkul
Karman
The Nobel Peace Prize 2011
was awarded jointly to Ellen Johnson Sirleaf, Leymah Gbowee and Tawakkul
Karman "for their non-violent struggle for the safety of women and
for women’s rights to full participation in peace-building work"
Ellen Johnson Sirleaf
“சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!
லைபீரியா அதிபரான இந்த எலனே ஆப்பிரிக்க நாட்டின் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண் பிரதமரும் ஆவார். அம்மையார் தம் சாதுர்யமான, சாமர்த்தியமான, மிகவும் கடுமையான அரசியல் நடவடிக்கைகளும், போக்கும் அவரை இரும்புப் பெண்மணி என்றப் பெயரை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.
" பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! "
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! "
_______________________________________________________________________
Leymah Gbowee
அதே போன்றே லேமோ போவீயும் லைபீரியாவில் பிளவு பட்டிருந்த பல இன, சமய மக்களை ஒன்றுபடுத்தி அங்கே வெகு காலமாக நடந்த போருக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்தவரும் ஆவார்.
"விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்;வெல்லுவம் என்றெ
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்.
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?"
வேட்கை கொண்டனம்;வெல்லுவம் என்றெ
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்.
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?"
அதே போன்றே லேமோ போவீயும் லைபீரியாவில் பிளவு பட்டிருந்த பல இன, சமய மக்களை ஒன்றுபடுத்தி அங்கே வெகு காலமாக நடந்த போருக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்தவரும் ஆவார்.
"வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம்."
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம்."
________________________________________________________________________
Tawakkul Karman
ஏமன் டவாகல் கர்மான் ஜனநாயகம் மலரவும் அமைதிக்காகவும் தானே முன்னின்றி போராடியவர் ஆவார்.
"திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃ
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃ
....................................................................."
_______________________________________________________________________
இவர்களை ஒட்டி நோபல் பரிசுக் குழு கூரியவைகளாவன....
"அமைதியை கட்டிக்காக்கும் பணிகளில் பெண்கள் முழுமையாக ஈடுபட, பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அவர் ஆற்றிய அரிய பணிகளுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது."
"ஆண்களுக்கு கிடைப்பது போன்ற அதே வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதிலும், ஜனநாயகத்திலும் நாம் வெற்றிக் காண முடியாது"
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;"
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;"
"தையலை உயர்வு செய்"
"பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!"
என்றான் மகாகவி....
அதோடு, உயர்ந்த இந்தப் பெண்களை, உலகம் உயர பாடுபடும் இந்தப் பெண்களை பாராட்டும்; ஆஸ்லோ நோபல் குழுவிற்கு நமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறிக் கொள்வோம்.
_________________________________________________________________
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள்... என்றோ!... இவன் பாடி வைத்துப் போன யாவும் இன்று நிறைவேறுகின்றன. மகாகவி நவநாகரிகம் அடைந்த அன்றைய வெள்ளையர்களின் குடும்பங்களில் பெண்களுக்கு பல சுதந்திரம் இருந்தப் போதும் கூட, அப்போது வாக்குரிமை இல்லை என்று ஆதங்கப் பட்டுக் கொண்டானாம். பெண்கள் தான் இந்த உலகை உய்விக்க வந்தவர்கள், ஆம்... அவர்கள் தாம் என்கிறான் மகாகவி பாரதி...
இன்றைய இந்தியாவில் பெண்டிரின் நிலையை யாவும் நன்கு அறிவோம்... அதிலும் வடக்கே இருக்கும் நிலையை வகைப்படுத்த ஓராயிரம் பிரிவுகள் செய்ய வேண்டும்
இருந்தும், இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். பாரதியின் கொள்கைகளை (இந்தியப்) பெண்டிர் முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும், பின்பற்ற வேண்டும். அப்போது தான் அது மிக விரைவாக எங்கும் பரவும். யாவரையும் சென்றடையும்... தையலை உயர்வு செய்"யச் சொன்னதோடு, புதுமைப் பெண் அவள் வேதம் புதுமை செய்பவள் என்றும் பாடியதின் நோக்கத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
சாதி அடிப்படையிலே சமூகத்தில் சலுகைக் காட்டி பொருளாதாரத்தில் தாழ்வுற்று இருப்பவருக்கு நல்லது செய்வதாகவும், கல்வி அறிவு அதிகம் பெறாத சிலருக்கு சலுகை அடிப்படையிலே கல்வி தருவதாகவும் கூறி கண்காணிப்பும், தணிக்கையும், அதன் அவசியத்தையும் சோதிக்காமல்; அவசியப்பட்டால் அதில் ஏதும் மாற்றம் கொள்ளச் செய்யாமல் வரும் அரசுகள் தொடரும் அந்த பணியினும் சிறந்த அவசியமான ஒருப் பணி உண்டு...
ஆம், அது தான் பாரதி சொன்ன "தையலை உயர்வு செய்" அவர்களுக்கு தனிப் பிரிவு கொண்டு சலுகை செய்து, அவர்கள் சமூகத்தில் (எல்லா சாதியிலும் இது பொது தான்) படும் அவலத்தை போக்கி கல்வியையும் ஞானத்தையும் வளர்க்கும் வழியை ஆளும் அரசுகள் செய்யவேண்டும்.
அது நடக்கும் வரை பாரதியின் திட்டம் செயல் படுவது தடைபட்டே நிற்கும். அதோடு, அவனின் பாடல்கள் மேடை அலங்கார பேச்சிற்கு மட்டுமே பெரிதும் துணை நிற்கும் எனபதே உண்மை. இந்த அவலம் மாற, பெண்கள் வெறும்காட்சிப் பொருளாகவும், ஏமாற்றப் படுபவர்களாகவும், ஆடுகளைப் போல் அண்டிப்பிழைப்பவர்களாகவும், அடிமையாகவும், மோக போகப் பொருள்களாகவும், கலைக் கூடங்களிலே அறிவில்லா பொம்மைகளாகவும் இருப்பதை உணர்ந்து அந்நிலை மாற... அவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.
அது இந்த சமூகத்தில் பெரிய விஞ்ஞானிகளையும், மெஞ்ஞாநிகளையும் பெற்று வளர்த்து ஆளாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்பதை பாரதி கூறிய வழியிலே உணர்ந்து அதற்கு தன்னை ஆயுதப் படுத்த வேண்டும். அதை செய்ய உண்மையான உயர் கல்வி கற்க வேண்டும், அப்படி அதைப் பெரும் போது அறிவோடு, வீரமும், விவேகமும், உலக ஞானமும் கிடைக்கும். அப்படி ஒவ்வொருப் பெண்ணும் உலக ஞானம் பெற்றால், அங்கே மூடத்தனமும், அடிமைத்தனமும் ஒரு சேர அழியும் அப்போது புதிய தோர் உலகம் படைக்க அதாவது கிருத யுகம் படைக்க ஒவ்வொரு வீட்டிலும் மகா புருஷர்கள் அவதரிப்பார்கள் என்று தீர்க்கமாக கூறி விட்டு அதைக் காண இங்கே இயற்கையில் கலந்து நிற்கிறான் பாரதி...
இதை நாம் ஒவ்வொருவரும், இந்த அரசாங்கமும் உணரவேண்டும்.... அப்படி செய்தால் வெகு சீக்கிரத்தில், சாதி ஒழிப்பும் தேவை இல்லை.. சமூக சீரமைப்பும் தேவையில்லை, இலவசமும் தேவை இல்லை, இட ஒதுக்கீடும் தேவை இல்லை.... எல்லாம் தானாக நடக்கும்.
சக்திப் பெண், இயக்கம் பெண், இயங்க வைப்பவள் பெண், அந்த இயக்கம் சீராகும் போது அத்தனையும் சீராகும்.. இது தானே! வேறு யாரும் (இவனுக்கு முன்பு தோன்றியவர்கள், இவனே இவர்கள் தாம் எனது முன்னோடிகள், பெரியவர்கள் என்று போற்றியவர்களும் கூட) ஒரு உறுதியானத் தீர்வை அதற்கு முன்னதாக எங்கும் கூறாத தீர்வை இந்த எட்டயபுரத்து ஞானக் கிறுக்கன் சொல்லி இருக்கிறான்.
"பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்."
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்."
வெகு சீக்கிரம் மகாகவி பாரதி கண்ட புதுமைப் பெண்களை இந்தியா பெற்றெடுக்கும் என நம்புவோம்....
நன்றி வணக்கம்.
உங்கள் கருத்தை இரண்டு வரிகளில் கூறுங்கள் அன்பர்களே!
அன்புடன்,
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.
4 comments:
நல்ல பதிவு. எங்கிருந்தெல்லாமோ தேர்வு செய்து அழகாகத் தொடுக்கிறீர்கள். மகிழ்ச்சி. வளர்க!
////kmr.krishnan சொன்னது…
நல்ல பதிவு. எங்கிருந்தெல்லாமோ தேர்வு செய்து அழகாகத் தொடுக்கிறீர்கள். மகிழ்ச்சி. வளர்க!
9 அக்டோபர், 2011 7:22 am///
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சார்.
மாதர் குலம் அடைந்த உயர்வை பறைசாற்றும் கட்டுரை.
நன்றி; வாழ்த்துக்கள்.
கிருஸ்ணர்
/////பெயரில்லா சொன்னது…
மாதர் குலம் அடைந்த உயர்வை பறைசாற்றும் கட்டுரை.
நன்றி; வாழ்த்துக்கள்.
கிருஸ்ணர்////
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றிகள் அண்ணா!
Post a Comment