பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Sunday 9 October 2011

"தையலை உயர்வு செய்" அமைதிக்கான இவ்வாண்டு (2011) நோபல் பரிசு பெரும் முப்பெரும் தேவிகள்!


The Nobel Peace Prize 2011

Ellen Johnson Sirleaf
Leymah Gbowee
Tawakkul Karman

The Nobel Peace Prize 2011 was awarded jointly to Ellen Johnson Sirleaf, Leymah Gbowee and Tawakkul Karman "for their non-violent struggle for the safety of women and for women’s rights to full participation in peace-building work"
 லைபீரியா அதிபர் எலன் ஜான்சன் சார்லீஃப்லைபீரியா பெண்மணி லேமா போவீஏமன் நாட்டைச் சார்ந்த கர்மான் ஆகிய மூன்றுப் பெண்கள் தாம் அவர்கள்இம் மூன்றுப் பெண்களே அப்பெருமைக்கு உரியவர்கள்.


Ellen Johnson Sirleaf

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!

லைபீரியா அதிபரான இந்த எலனே ஆப்பிரிக்க நாட்டின் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண் பிரதமரும் ஆவார்அம்மையார் தம் சாதுர்யமானசாமர்த்தியமானமிகவும் கடுமையான அரசியல் நடவடிக்கைகளும்போக்கும் அவரை இரும்புப் பெண்மணி என்றப் பெயரை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! "



_______________________________________________________________________


                                                                      
                                                                   Leymah Gbowee

"விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்;வெல்லுவம் என்றெ
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்.
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?"

அதே போன்றே லேமோ போவீயும் லைபீரியாவில் பிளவு பட்டிருந்த பல இனசமய மக்களை ஒன்றுபடுத்தி அங்கே வெகு காலமாக நடந்த போருக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்தவரும் ஆவார்.

"வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம்
."

________________________________________________________________________




 Tawakkul Karman

ஏமன் டவாகல் கர்மான் ஜனநாயகம் மலரவும் அமைதிக்காகவும் தானே முன்னின்றி போராடியவர் ஆவார்.

"திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃ
....................................................................."

_______________________________________________________________________

இவர்களை ஒட்டி நோபல் பரிசுக் குழு கூரியவைகளாவன....

"அமைதியை கட்டிக்காக்கும் பணிகளில் பெண்கள் முழுமையாக ஈடுபடபெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அவர் ஆற்றிய அரிய பணிகளுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது."

"ஆண்களுக்கு கிடைப்பது போன்ற அதே வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதிலும்ஜனநாயகத்திலும் நாம் வெற்றிக் காண முடியாது"

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
;"

"தையலை உயர்வு செய்

"பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!"

என்றான் மகாகவி.... 

அதோடுஉயர்ந்த இந்தப் பெண்களைஉலகம் உயர பாடுபடும் இந்தப் பெண்களை பாராட்டும்ஆஸ்லோ நோபல் குழுவிற்கு நமது பாராட்டுக்களையும்வாழ்த்துக்களையும் கூறிக் கொள்வோம்.
_________________________________________________________________

பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள்... என்றோ!...  இவன் பாடி வைத்துப் போன யாவும் இன்று நிறைவேறுகின்றனமகாகவி நவநாகரிகம் அடைந்த அன்றைய வெள்ளையர்களின் குடும்பங்களில் பெண்களுக்கு பல சுதந்திரம் இருந்தப் போதும் கூடஅப்போது வாக்குரிமை இல்லை என்று ஆதங்கப் பட்டுக் கொண்டானாம்பெண்கள் தான் இந்த உலகை உய்விக்க வந்தவர்கள்ஆம்... அவர்கள் தாம் என்கிறான் மகாகவி பாரதி...

இன்றைய இந்தியாவில் பெண்டிரின் நிலையை யாவும் நன்கு அறிவோம்... அதிலும் வடக்கே இருக்கும் நிலையை வகைப்படுத்த ஓராயிரம் பிரிவுகள் செய்ய வேண்டும்

இருந்தும்இங்கே ஒன்றை சொல்ல வேண்டும்பாரதியின் கொள்கைகளை (இந்தியப்பெண்டிர் முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும்பின்பற்ற வேண்டும்அப்போது தான் அது மிக விரைவாக எங்கும் பரவும்யாவரையும் சென்றடையும்... தையலை உயர்வு செய்"யச் சொன்னதோடுபுதுமைப் பெண் அவள் வேதம் புதுமை செய்பவள் என்றும் பாடியதின் நோக்கத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சாதி அடிப்படையிலே சமூகத்தில் சலுகைக் காட்டி பொருளாதாரத்தில் தாழ்வுற்று இருப்பவருக்கு நல்லது செய்வதாகவும்கல்வி அறிவு அதிகம் பெறாத சிலருக்கு சலுகை அடிப்படையிலே கல்வி தருவதாகவும் கூறி கண்காணிப்பும்தணிக்கையும்அதன் அவசியத்தையும் சோதிக்காமல்அவசியப்பட்டால் அதில் ஏதும் மாற்றம் கொள்ளச் செய்யாமல் வரும் அரசுகள் தொடரும் அந்த பணியினும் சிறந்த அவசியமான ஒருப் பணி உண்டு... 

ஆம்அது தான் பாரதி சொன்ன "தையலை உயர்வு செய்அவர்களுக்கு தனிப் பிரிவு கொண்டு சலுகை செய்துஅவர்கள் சமூகத்தில் (எல்லா சாதியிலும் இது பொது தான்படும் அவலத்தை போக்கி கல்வியையும் ஞானத்தையும் வளர்க்கும் வழியை ஆளும் அரசுகள் செய்யவேண்டும்

அது நடக்கும் வரை பாரதியின் திட்டம் செயல் படுவது தடைபட்டே நிற்கும்அதோடுஅவனின் பாடல்கள் மேடை அலங்கார பேச்சிற்கு மட்டுமே பெரிதும் துணை நிற்கும் எனபதே உண்மைஇந்த அவலம் மாறபெண்கள் வெறும்காட்சிப் பொருளாகவும்ஏமாற்றப் படுபவர்களாகவும்ஆடுகளைப் போல் அண்டிப்பிழைப்பவர்களாகவும்அடிமையாகவும்மோக போகப் பொருள்களாகவும்கலைக் கூடங்களிலே அறிவில்லா பொம்மைகளாகவும் இருப்பதை உணர்ந்து அந்நிலை மாற... அவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது

அது இந்த சமூகத்தில் பெரிய விஞ்ஞானிகளையும்மெஞ்ஞாநிகளையும் பெற்று வளர்த்து ஆளாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்பதை பாரதி கூறிய வழியிலே உணர்ந்து அதற்கு தன்னை ஆயுதப் படுத்த வேண்டும்அதை செய்ய உண்மையான உயர் கல்வி கற்க வேண்டும்அப்படி அதைப் பெரும் போது அறிவோடுவீரமும்விவேகமும்உலக ஞானமும் கிடைக்கும்அப்படி ஒவ்வொருப் பெண்ணும் உலக ஞானம் பெற்றால்அங்கே மூடத்தனமும்அடிமைத்தனமும் ஒரு சேர அழியும் அப்போது புதிய தோர் உலகம் படைக்க அதாவது கிருத யுகம் படைக்க ஒவ்வொரு வீட்டிலும் மகா புருஷர்கள் அவதரிப்பார்கள் என்று தீர்க்கமாக கூறி விட்டு அதைக் காண இங்கே இயற்கையில் கலந்து நிற்கிறான் பாரதி...

இதை நாம் ஒவ்வொருவரும்இந்த அரசாங்கமும் உணரவேண்டும்.... அப்படி செய்தால் வெகு சீக்கிரத்தில்சாதி ஒழிப்பும் தேவை இல்லை.. சமூக சீரமைப்பும் தேவையில்லைஇலவசமும் தேவை இல்லைஇட ஒதுக்கீடும் தேவை இல்லை.... எல்லாம் தானாக நடக்கும்

சக்திப் பெண்இயக்கம் பெண்இயங்க வைப்பவள் பெண்அந்த இயக்கம் சீராகும் போது அத்தனையும் சீராகும்.. இது தானேவேறு யாரும் (இவனுக்கு முன்பு தோன்றியவர்கள்இவனே இவர்கள் தாம் எனது முன்னோடிகள்பெரியவர்கள் என்று போற்றியவர்களும் கூடஒரு உறுதியானத் தீர்வை அதற்கு முன்னதாக எங்கும் கூறாத தீர்வை இந்த எட்டயபுரத்து ஞானக் கிறுக்கன் சொல்லி இருக்கிறான்


"பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும். 

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்
."

வெகு சீக்கிரம் மகாகவி பாரதி கண்ட புதுமைப் பெண்களை இந்தியா பெற்றெடுக்கும் என நம்புவோம்....

நன்றி வணக்கம்.

உங்கள் கருத்தை இரண்டு வரிகளில் கூறுங்கள் அன்பர்களே!

அன்புடன்,

தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.




4 comments:

kmr.krishnan said...

நல்ல‌ பதிவு. எங்கிருந்தெல்லாமோ தேர்வு செய்து அழகாகத் தொடுக்கிறீர்கள். மகிழ்ச்சி. வளர்க!

Unknown said...

////kmr.krishnan சொன்னது…
நல்ல‌ பதிவு. எங்கிருந்தெல்லாமோ தேர்வு செய்து அழகாகத் தொடுக்கிறீர்கள். மகிழ்ச்சி. வளர்க!
9 அக்டோபர், 2011 7:22 am///

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சார்.

Anonymous said...

மாதர் குலம் அடைந்த உயர்வை பறைசாற்றும் கட்டுரை.
நன்றி; வாழ்த்துக்கள்.

கிருஸ்ணர்

Unknown said...

/////பெயரில்லா சொன்னது…
மாதர் குலம் அடைந்த உயர்வை பறைசாற்றும் கட்டுரை.
நன்றி; வாழ்த்துக்கள்.

கிருஸ்ணர்////

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றிகள் அண்ணா!

Post a Comment