பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday 28 March 2012

அம்மா நீ எங்கே!





எல்லாமாகி எங்கும் நிறை பராசக்தியே
பொல்லா வினையறுப்பாய் ஆதிசக்தியே!. 


வெடிபடு அணுவினுள் ஒளியுரு கடும்பொறி;
இடியொடு பிறந்தக்கொடுவிட அரவச்சீறி; நடுநடுங்க 
துடிதுடிக்க; சடசட, படபடவெனப்  பாயும்மின் 
கொடியொடு ஓடிடும் தூதூமணியே! 

அறிவினில் உறையும்; கருவென வளரும்;
பரிதியில் ஒளிரும்; வளியென பரவும்;
விரிவெளி யெனத் திகழும்; குணம்,
குறியிலா ஞானப்பெரும் திரளே! 

ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும் 
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை 
நன்றாய் படைக்க ஒன்றும் பலவாய் 
ஒன்றியழ கொழிக்கும் ஆதிசக்தியே! 

பெருமிருள் நெடுதுயில் சடுதியில்மறைய -விண்
உறுபெரும் பொருளது சுடரொளி நிறைய 
மருளெனும்செய் பாவமதுரு உறுவது ஒழிய 
பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே!

-நன்றி.



5 comments:

மகேந்திரன் said...

ஆதி அந்தமான ஆதிசக்திக்கான
பாமாலையில் மனம் லயித்தேன் ஐயா..

Unknown said...

///மகேந்திரன் said...
ஆதி அந்தமான ஆதிசக்திக்கான
பாமாலையில் மனம் லயித்தேன் ஐயா..///

அன்னையை நினைத்தாலே மனம் நெகிழும் அல்லவா!
வருகைக்கு நன்றிகள் கவிஞரே!

ஷைலஜா said...

அழகுத்தமிழில் அருமையான பாமாலை ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்

Unknown said...

///ஷைலஜா said...
அழகுத்தமிழில் அருமையான பாமாலை ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்/////

வாருங்கள் சகோதரியாரே!
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல உரியதாக்குகிறேன்.

Unknown said...

அருமையான வரிகள்

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

Post a Comment