வேலும் மயிலும் உனக்குண்டு
வேழமுகத்தான் அன்பும் மிகவுண்டு
அன்னையும் பிதாவும் உனக்குண்டு
அறிவோடு அழகான மனைவிகளோ,
ஆறுகரத்திற்கு ஒன்று உண்டு
தேனுண்டு திணை உண்டு
தீங்கனிகள் தாம் உண்டு
அன்புண்டு அருளும் உண்டு
அன்பானப் பக்தர்கள் இங்கே
அகில மெல்லாம் ஆயிரம்,
ஆயிரம் கோடி உண்டு
வேண்டும் யாவும் எப்போதும்
வேண்டு மளவு உனக்குண்டு
வேந்தனே! வீரனே!! என்னப்பனே!!!
முருகா! திருக்குமரா!! கருணைக் கடலே!!!
வேதனையில் உழலும் எனக்கோ
உனைவிட்டால் யாருண்டு முருகா!
முருகா! முருகா!! முருகா!!!
6 comments:
முருகு எனும் அழகனுக்கு
தீந்தமிழ்க் கடவுளுக்கு
இனியதோர் பாமாலை ..
மனம் லயித்தேன் ஐயா.
////மகேந்திரன் said...
முருகு எனும் அழகனுக்கு
தீந்தமிழ்க் கடவுளுக்கு
இனியதோர் பாமாலை ..
மனம் லயித்தேன் ஐயா.////
மிக்க நன்றிகள் தோழரே!
அப்பன் முருகன் உலகை எல்லாம் காக்கட்டும்.
முருகா! திருக்குமரா!! கருணைக் கடலே!!!
வேதனையில் உழலும் எனக்கோ
உனைவிட்டால் யாருண்டு முருகா!
முருகா! முருகா!! முருகா!!!
அழ்கன் தமிழ்க்கடவுளுக்கு
அழகான வரிகளால் பாமாலை.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
///வேண்டும் யாவும் எப்போதும்
வேண்டு மளவு உனக்குண்டு
வேதனையில் உழலும் எனக்கோ
உனைவிட்டால் யாருண்டு முருகா!
முருகா! முருகா!! முருகா!!!///
ஆஹா அற்புதம்.
அவனன்றி ஒன்றுமில்லை.
////இராஜராஜேஸ்வரி said...
முருகா! திருக்குமரா!! கருணைக் கடலே!!!
வேதனையில் உழலும் எனக்கோ
உனைவிட்டால் யாருண்டு முருகா!
முருகா! முருகா!! முருகா!!!
அழ்கன் தமிழ்க்கடவுளுக்கு
அழகான வரிகளால் பாமாலை.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..///
மிக்க நன்றி..
////krishnar said...
///வேண்டும் யாவும் எப்போதும்
வேண்டு மளவு உனக்குண்டு
வேதனையில் உழலும் எனக்கோ
உனைவிட்டால் யாருண்டு முருகா!
முருகா! முருகா!! முருகா!!!///
ஆஹா அற்புதம்.
அவனன்றி ஒன்றுமில்லை./////
மிக்க நன்றி அண்ணா..
Post a Comment