பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Tuesday, 4 October 2011

இளையபாரதம்(மே) இங்கே படைத்திடு!




இருட்டறையில் உலகம் இருக்கையிலேஇங்கே
இதயம்தான் ஒளி விடுமோ.

படித்தவனும் பாமரனாய், பழையசாதி கொடுமை
பிடித்துநிற்கும் நிலையும் மாறிடுமோ?

சாதிவெறி வளர்த்திடுவார் அல்லாமல் - அவரின்
சாதி யரசியல் வாழ்ந்திடுமோ?

விருப்பமுரும் கல்வியையே அரசும் இங்கே
மறுக்காமல் தந்திடுமோ?

பொருளாதார நிலையோடு புத்தியையுமளந்தே அரசு
பள்ளத்தில் கிடப்போரை மேலேற்றுமோ?

குடும்பத்தில் ஒருவருக்கே அரசுவேலை அந்நிலையில்
அடுத்தவருக்கே சலுகையென புதுச்சட்டம்!?

நிதிஉதவி யாருக்கு? புதுநீதியை அரசும்
சாதிபேதம் இல்லாமல் தந்திடுமோ?

கல்விக்கு உதவி தரலாம் அன்றி அறிவுக்கு
அவரவர் திறமை போற்றோமோ?

போக்கத்தவரே போதகராகும் பொல்லா -நிலைப்
போக்கினாலன்றி போதனை சிறக்குமோ?

எனக்கென என்றேபோகும் இளைஞர் கூட்டம்
இனியும் உறங்குவது நியாயமோ?

பொறுத்தது போதும் "எழுந்திரு விழித்திரு"
இளையபாரதம்(மே) இங்கே படைத்திடு!

அன்புடன்,
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.

2 comments:

ராஜா MVS said...

தங்களின் ஆதங்கம் புரிகிறது...நண்பரே...

அருமை...

தமிழ்மணம் இணைத்து..ஓட்டும் போட்டுட்டேன்... நண்பரே...

Unknown said...

///ராஜா MVS சொன்னது…
தங்களின் ஆதங்கம் புரிகிறது...நண்பரே...

அருமை...

தமிழ்மணம் இணைத்து..ஓட்டும் போட்டுட்டேன்... நண்பரே...////

தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் நண்பரே!
வாக்களிப்பிற்கும் நன்றிகள் தோழரே!

Post a Comment