பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday 25 August 2011

உலகம் இப்போது கலியுகத்தின் முடிவிலா?


செல்வம் மிக உடையோர் பலர்; அவர்கள் அதை சரியான வழியில் செலவு செய்யாது, தற்பெருமைக்கும், தனது சந்ததிக்கும், தனது வெத்துப் புகழுக்குமாக அந்த செல்வத்தை வீணடிக்கும் அவல நிலையை இன்று நாம் கண்கூடாய்க் காண்கிறோம். 

அப்பேர்ப் பட்டவர்கள் வலியவர்களாய் தன்னை ஆக்கிக் கொண்டு ஆணைகளையும் பிறப்பித்து, தான் எண்ணியதையே செய்ய வேண்டும், இந்த உலகையே தனது ஆணைக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் ஆணை இடுகிறார்கள். இதை, நாம் இன்று உலகில் எங்கும் காண்கிறோம்.

சரியான ஒரு நல்ல திட்டத்திற்கு, அதை சரியான முறையிலே செயல் படுத்தி இந்த வையகம் பயனுற செயல் புரிய வேண்டியவர்கள் அந்தப் பதவிக்கு வருவதில்லை. 

தகுதியற்ற தற்குறிகள்தாம், அவ்விடத்திலே அமர்கிறார்கள், அதனாலே அவர்களிடம் சென்று சேரும் பொருள்கள் யாவும்; பாத்திரம் தவறிப் போய் விழும் பைம்பொன்னை போல்; தவறானவர்களிடம் செல்வத்தை வழங்கியதையே ஒப்பும். 

அது கடைசியில் யாருக்கும் பயன் படாமல், பசி பட்டினியைப் போக்காமல் ஏழைக்கு பயன் படாமல் பாழாய்ப் போகும். போகும் என்ன? இப்போது போகின்றதைக் கண்கூடாய்க் காண்கிறோம்.

பெண்ணென்றால் அவள் ஒரு தவம், அப்படிப் பிறப்பதற்கே தவம் செய்திருக்க வேண்டும் என்றார் கவிமணி. அந்தப் பெண் அன்பின் வடிவினள், இந்த உலகம் இயங்க அந்தப் பிரமத்தால் படைக்கப் பட்ட சக்தியின் வடிவினள். 

கருணைக் கடலான அவள் கருணையோடு இந்த உலகத்தையே தன் குழந்தையாக கட்டி அணைக்க கடமையுள்ளவள். 

அப்பேர்ப் பட்ட பெண், தனது பெண்மையின் சிறப்பறியாது நாணில்லாமல் ஆட்சியை விரும்பி, அதனையும் பெற்று, அதிகாரம் பெற்ற அவளே தானென்ற மமதையில், தானும் ஒருத் தாயென்று உணராது, தர்மத்தையே கொன்று பலலட்சம் மக்களையும் கொன்றுக் குவிக்க காரணமாவாள்.


அதாவது, பெண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதையே மறந்தவள் நாணில்லாதவள் தான். வேறென்னவாக இருக்க முடியும்?. அதையும் இன்று நாம் கண்கூடக் காண்கிறோம். 

இந்த உலகத்தை ஆள்வோர் பெரும்பாலோர், மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்க காண்கிறோம். 

வணிகர்கள் நிர்பந்தப் படுத்தப் படுகிறார்கள், மக்களுக்கான திட்டங்களை வணிக நிறுவனம் குத்தகை பெற்று செய்யுங்கால், வல்லமைகொண்ட அரசோ அதில் கட்டாயப் பங்கு கேட்டு கொள்ளை யடிக்கும். 

நிலங்கள் பறி போகும், மக்கள் உடைமைகள் பறிபோகும். கடைசியாக எல்லா பாதுகாப்பும், சத்தியமும் செத்து எல்லாம் பொய்யாய் நிற்கும் 
இதுவே கலியுக முடிவாம்.

இதை நான் கூறவில்லை. உலக மகாகவி, அமரத்துவம் பெற்ற அற்புதக் கவிஞன் இப்படிப் பாடி சென்றுள்ளான். பாடலைப் பார்ப்போம் வாருங்கள்.



 கலியுக முடிவு!

"மிகப் பொன்னுடையோன், மிக அதைச்சிதறுவோன்
அவனே வலியனாய் ஆணைதான் செலுத்துவன்
பாத்திரம் தவறிப் பைம்பொன் வழங்கலே
தவமென முடியும் தையலார் நாணிலாது
ஆட்சியை விரும்புவர், அவனியை ஆள்வோர்

குடிகளின் உடைமையைக் கொள்ளையிட்டு அழிப்பர்
பொய்யுரை கூறி வணிகர் தம் பொருளைக்
கவர்வர், இவ்வுலகத் திறுதியின் கண்ணே 
மக்களின் அரண் (அறமெலாம்) எலாம்மயங்கி நின்றிடுமால்
பொருட் காப்பென்பது போய்ப் பெருங்கேடுரும்"
                                                           -            உலக மகாகவி சுப்பிரமணிய பாரதி.

இவைகள் யாவும் இன்று நாம் கண்கூடாக பார்க்கிறோம் அல்லவா.... ஆக, வெகு தூரம் இல்லை, கலியின் முடிவு. 

சமதர்மமும், சகோதரத்துவமும், சுதந்திரமும் கொண்ட ஒரு வாழ்வு தான் இதற்கு விடிவு. அது தான் பாரதி வேண்டிய கிருத யுகம்.  

மகாகவி பாரதி சொன்னது போல் உலக மக்கள் யாவும் அறிவு பெறுவோம். அந்த அறிவே தெய்வம் என்று போற்றுவோம். 

அறிவு பெற்றால் விடிவு வரும். 

ஆண், பெண், அலி என்றும் ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் அறிவு பெற; ஏட்டுக் கல்வி மாத்திரம் அல்லாமல், வேதாந்தம் அளித்த அந்த அறிவுக் கல்வியும் சேர்த்தே கற்போம். 

அதுவே சிறந்ததொரு உபாயம். அதனையே போற்றுவோம், அனைவருக்கும் கற்றுக் கொடுப்போம். விரைவில் கலியை வெல்வோம். மீண்டும் எந்த பேதமும் இல்லாத வேதகாலத்தை ஒப்ப, மீண்டும் இங்கே "வேதம் புதுமை செய்து" அறிவென்னும் அச்சாணி கொண்ட நவீன வேதகாலச் சக்கரத்தையே புவிக்கு ஆதாரமாய் சுழற்றுவோம்.



நன்றி வணக்கம்.
தமிழ் விரும்பி.             
           

19 comments:

vidivelli said...

சரியான ஒரு நல்ல திட்டத்திற்கு, அதை சரியான முறையிலே செயல் படுத்தி இந்த வையகம் பயனுற செயல் புரிய வேண்டியவர்கள் அந்தப் பதவிக்கு வருவதில்லை. /

உண்மையான கருத்து...



தகுதியற்ற தற்குறிகள்தாம், அவ்விடத்திலே அமர்கிறார்கள்,/
இப்பிடிப்பட்டவர்களிடம்தான் ஒப்படைக்கப்படுகிறது அதிகாரங்கள்..
அருமையாக அழமான கருத்துக்களை முன்வைத்து வெளிப்படுத்தி நிற்கிறது கட்டுரை...
அற்புதமான படைப்பு..
அன்புடன் பாராட்டுக்கள்..

Unknown said...

///vidivelli சொன்னது…
சரியான ஒரு நல்ல திட்டத்திற்கு, அதை சரியான முறையிலே செயல் படுத்தி இந்த வையகம் பயனுற செயல் புரிய வேண்டியவர்கள் அந்தப் பதவிக்கு வருவதில்லை. ////

உண்மையான கருத்து...
தங்களின் தெளிந்த கருத்து உடன் பாட்டிற்கும் பாராட்டிற்கும் நன்றிகள் நண்பரே!

குறையொன்றுமில்லை. said...

அதிசயம் நானும் தமிழ் விரும்பி என்கிர பெயரில்
பதிவு எழுதிண்டு இருக்கேன். ஆனா நீங்க உருப்படியான விஷயங்கள் சொல்ரீங்க. நல்ல பதிவு
படிச்ச திருப்தி. நன்றி. என் பக்கமும் வாங்க.

Anonymous said...

ஆலாசியம், சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்! எப்படித்தான் இப்படிக் கடினமான விஷயங்களை எடுத்துக்கொண்டு எழுதுகிறீர்களோ! இதற்கு முந்தைய பதிவும் சுபெர்ப்.

கலியுகம் ஆரம்பித்து ஐந்தாயிரம் வருடங்கள்தான் ஆகின்றன, இன்னும் லட்சக்கணக்கான வருடங்கள் மீதமிருக்கின்றன. அதன்படி பார்த்தால் இப்போதைக்கு உலகம் அழியாது. இன்னும் கலி முற்றவில்லை. அண்ணா இப்பதான் ட்ரெயிலர் ஓடிக்கிட்டிருக்கு, இன்னும் மெயின் picture வரல (இதை ரஜினி ஸ்டைல் ல் படிக்கவும்). ட்ரெயிலர் கே உலகம் இந்த லட்சணத்தில் இருந்தால், இன்னும் போகப்போக எப்படியோ? - uma

Unknown said...

///Lakshmi சொன்னது…
அதிசயம் நானும் தமிழ் விரும்பி என்கிர பெயரில்
பதிவு எழுதிண்டு இருக்கேன். ஆனா நீங்க உருப்படியான விஷயங்கள் சொல்ரீங்க. நல்ல பதிவு
படிச்ச திருப்தி. நன்றி. என் பக்கமும் வாங்க.////

நல்லது.... ஆமாம், நானும் தங்களைப் போலவே அதிசயித்தேன்...
தங்களின் வலை மஞ்சரியை ரசித்தேன் அருமை நான் நேரம்
கிடைக்கும் போதெல்லாம் வந்து வாசிக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.

Unknown said...

////UMA Said...ஆலாசியம், சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்! எப்படித்தான் இப்படிக் கடினமான விஷயங்களை எடுத்துக்கொண்டு எழுதுகிறீர்களோ! இதற்கு முந்தைய பதிவும் சுபெர்ப்.

கலியுகம் ஆரம்பித்து ஐந்தாயிரம் வருடங்கள்தான் ஆகின்றன, இன்னும் லட்சக்கணக்கான வருடங்கள் மீதமிருக்கின்றன. அதன்படி பார்த்தால் இப்போதைக்கு உலகம் அழியாது. இன்னும் கலி முற்றவில்லை. அண்ணா இப்பதான் ட்ரெயிலர் ஓடிக்கிட்டிருக்கு, இன்னும் மெயின் picture வரல (இதை ரஜினி ஸ்டைல் ல் படிக்கவும்). ட்ரெயிலர் கே உலகம் இந்த லட்சணத்தில் இருந்தால், இன்னும் போகப்போக எப்படியோ? - uma////

உண்மை தான் உமா... தங்கள் சொல்வதும் உண்மை தான்... இப்பவே இப்படி என்றால் இன்னும் போகப் போக... என்ன செய்வது நமக்கு அடுத்தடுத்த பிறவிகளில் சமாளிக்கும் சக்தியை அந்த பிரம்மம் அளிக்கட்டும். வேதகால மனிதர்கள் இப்போது இருந்தாலும் இப்படித்தான் பிரமிப்பார்கள். கலியை சமாளிக்க மருந்து முன்பே கண்டு பிடிச்சாச்சு... இருந்தும் அது அரசாங்க மருத்துவமனையில் தரும் த/அ மாத்திரை மாதிரி இலவசமாக கிடைப்பதால் அதன் அருமை தெரியாமல் இருக்கிறது. பார்ப்போம்.
உங்கள் பின்னூட்டம் காணாததால் நான் எழுதுவது யாருக்குமே புரியவில்லையோ என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்..
நன்றிகள் உமா.

Unknown said...

/////தமிழ் விரும்பி சொன்னது
உங்கள் பின்னூட்டம் காணாததால் நான் எழுதுவது யாருக்குமே புரியவில்லையோ என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்..\\\\\\\\\\

என்னை வம்புக்கு இழுக்கலைன்னா தமிழ்விரும்பிக்கு தூக்கம் வராதுன்னு நினைக்கிறேன்..

அது எப்பிடி இப்பிடி கரெக்ட்டாக் கணிச்சீங்கோ?

Unknown said...

/////minorwall சொன்னது…
/////தமிழ் விரும்பி சொன்னது
உங்கள் பின்னூட்டம் காணாததால் நான் எழுதுவது யாருக்குமே புரியவில்லையோ என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்..\\\\\\\\\\

என்னை வம்புக்கு இழுக்கலைன்னா தமிழ்விரும்பிக்கு தூக்கம் வராதுன்னு நினைக்கிறேன்..

அது எப்பிடி இப்பிடி கரெக்ட்டாக் கணிச்சீங்கோ?////

பொதுவாக இரு பெரும் பிரிவுகள் உண்டு ஆன்மீக வாதிகள் மற்றும் பொருள் வாதிகள் அல்லது உலகாயவாதிகள் என்று... அதுவது ஒருப் பிரிவில் அதிக விருப்பம் இருக்கும் போது அடுத்தப் பிரிவில் தானாக குறையும்... அதாவது ஆன்மீகத்தை அது எவ்வளவு சிரமமாக இருந்தாலும் முயற்சித்து புரிந்து கொள்ள நினைப்பவர்கள் ஒரு பிரிவினரும்; அடுத்ததாக அதற்கு மாறாக உலகில் உள்ளப் பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சி, விளக்கம் இதில் அதிக நாட்டமுள்ளவர்கள்... அப்படி இருக்கும் போது உமா முதல் பிரிவில் சேர்ந்திருப்பதாக எனது அபிப்ராயம் ஆகவே அப்படிக் கூறி இருந்தேன். வேறொன்றும் இல்லை நண்பரே! வேறு எதைக் கணித்தேன் என்கிறீர்கள் மைனர்வாள்... உலகாயதப் பொருள்களில் விருப்பும் அவசியமே அதை மறந்து வாழவிரும்புவோருக்கு நாட்டில் இடமில்லை... காட்டில் தான் இருக்க வேண்டும்.... எல்லாம் நமது ஆளுமையில் இருக்க வேண்டும் என்பதே.. தங்களின் அடுத்தக் கேள்வி இதுவாக இருக்கலாம் என நினைத்தே இதையும் கூறிவிடுகிறேன்.. சரியா நண்பரே!

Anonymous said...

அப்படி இருக்கும் போது உமா முதல் பிரிவில் சேர்ந்திருப்பதாக எனது அபிப்ராயம் //

ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதும், நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பதும் உண்மைதான். அதே அளவு ஈடுபாடு / ஆர்வம் மற்ற உலகாய விஷயங்களிலும் இருக்கிறது ('ரெண்டுங்கெட்டான்' என்றொரு பிரிவை ஏற்படுத்தினால் அதில் வருவேனோ என்னவோ!!!).

மற்றபடி நம்ம மைனர்வாலும் (எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன், ஹி ஹி) கூடிய சீக்கிரமே முதல் பிரிவுக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

Unknown said...

////உமா....மற்றபடி நம்ம மைனர்வாலும் (எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன், ஹி ஹி)///

ஹா...ஹா..ஹா.. மைனர்வாள் இதப் பார்த்தேளா.. இப்ப சொல்லுங்கோ!

Unknown said...

இந்த ரெண்டுங்கெட்டான் வகையறாக்களே இப்பிடித்தான்..
வேற அர்த்தம் வர்ற மாதிரி எழுத்துப் பிழையை வேணும்னே பண்ணிட்டு வருத்தம் தெரிவிக்குறது ரெண்டுங்கெட்டான் வகையறாக்கு ஒரு அடையாளம்..

Unknown said...

புரிகிறதா இல்லையா என்பதல்ல கேள்வி..
தெளிவாக இல்லாத ஒன்றை தேடித் திரிந்து நாமாகவே விளக்கம் கொடுத்து கற்பிதத்திலேயே
புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சி அவசியமா இல்லையா என்பதுதான் கேள்வி..
சர்வநிச்சயமாக நான் ரெண்டாவது பிரிவில்தான் வருகிறேன்..
சோதிடம் தொடர்பான எனது விழைவு என்பதுகூட நீங்கள் சொன்ன இந்த உலகாயதத்துக்கு ஏதேனும் ஒரு
வழிகாட்டல் கிடைக்குமேயாயின் இந்த பழைய விஞ்ஞானத்தைச் சிறிது தூசிதட்டிப் பார்த்தால் என்ன என்கிற ஆர்வத்தின் அடிப்படையிலேதான்..ஆனால் அங்கே, அதாவது வகுப்பறையிலே கொஞ்சம்கொஞ்சமாக பக்திமார்க்கம் தலைதூக்கி சோதிட ரீதியிலான விடைதெரியாத உலகாயதக் குழப்பங்களுக்கெலாம் கடவுளே விடை என்கிற வழக்கமான பங்கே தென்பட்டது..
அதிலேதான் கொஞ்சம் கொஞ்சமாக கொண்ட நோக்கத்தில் ஆர்வமிழக்கத்தொடங்கினேன்..
இடையிலே நண்பரொருவரின் தீவிர வற்புறுத்தலுக்குப் பின் கடவுள் வழியைக் கைகொண்டு
உலகாதயத்தில் எளிதில் இயற்கையாக / செயற்கையாக சாதிக்கமுடியாமலிருந்த சில முயற்சிகளை சாதிக்க முயற்சித்து அதிலே முழுநம்பிக்கை கொண்டு முயற்சித்த எனக்கு நெருங்கியவருக்கு அது பலித்ததையும்,
அதே சமயம் எல்லா விஷயத்திலும் பலிக்காததையும் வழக்கம்போலே கண்டுகொண்டேன்..
எனவே "ஒன்றும் ஒன்றும் இரண்டு" என்ற ரீதியில் இந்த விஷயங்கள் கணிக்கத் தகுந்தவையல்ல என்பதை நடைமுறையில் உணர்கிறேன்..எனவே இதுபோன்று நீண்ட விளக்கம் போரடிப்பதால் தன்னிலை விளக்கி போரடிக்காமல் விலகிநின்று மொக்கை கமென்ட் அடிப்பது என்று நிறுத்திக்கொள்கிறேன்..

Unknown said...

////சோதிடம் தொடர்பான எனது விழைவு என்பதுகூட நீங்கள் சொன்ன இந்த உலகாயதத்துக்கு ஏதேனும் ஒரு
வழிகாட்டல் கிடைக்குமேயாயின் இந்த பழைய விஞ்ஞானத்தைச் சிறிது தூசிதட்டிப் பார்த்தால் என்ன என்கிற ஆர்வத்தின் அடிப்படையிலேதான்..////

மைனர்வாள், நான் அறிந்தவரை.... நடக்க இருப்பதை மாற்ற இயலாது... ஆனால் அது அனுபவத்தை தரும்... அந்த அனுபவம் ஆனந்தம் தருமா அல்லது வருத்தம் தருமா என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தே... கர்ம யோகத்தில் தெய்வ வழிபாடு பெரிதாக சொல்லப் படவில்லை இல்லை நேராகச் சொல்லப் படவில்லை.... அதே நேரம்... பொன் பொருள் புகழ் வேண்டாது, உலகில் உள்ள அனைத்து ஜீவன்களிலும் அன்பு கொண்டு கடமையை செய்தால் அது நற்கதி தரும் என்பது வேதாந்தம் தரும் கருத்து.... அதையே தான் பெளத்தமும், ஜைனமும் கூறுகிறது (இஸ்லாத்தும், கிருஸ்துவமும் நான் இப்போதைக்கு அறியாதது). நற்கதி என்பதை யார் கண்டார் என்பீர்கள் என்றால்... அதுவும் சரிதான்... நிரந்தர ஆனந்தம் அங்கே தான் கிடைக்கிறது என்கிறார்கள் அனுபவப் பட்டவர்கள்... எனினும் பக்தி என்பது வணிகம் அல்ல!!!... இதை ஆன்மீக வாதிகளாக வேஷம் போட்டுத் திரிபவர்கள் கூட புரிந்துக் கொள்வதில்லை காரணம் அவர்கள் உண்மையான ஆன்மீக வாதிகள் இல்லை. அப்படிப் பட்டவர்களை பார்த்து தான் பலரும் எரிச்சலும், கோபமும் படுவது இயற்கை அது தான் இன்றும் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது..... சரி, எப்படியோ நாம் நமக்கு ஆனந்தம் தரக் கூடிய வேலைகளை செய்வோம் நண்பரே... நன்றிகள் மைனர்வாள்.

Anonymous said...

இந்த ரெண்டுங்கெட்டான் வகையறாக்களே இப்பிடித்தான்..// ம்ம்

Anonymous said...

சர்வநிச்சயமாக நான் ரெண்டாவது பிரிவில்தான் வருகிறேன்//

அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே, நான் சும்மா விளையாட்டுக்கு எழுதியதை நீங்க சீரியஸா எடுத்துக்கொண்டீர்களா?

விஞ்ஞானத்தைச் சிறிது தூசிதட்டிப் பார்த்தால் என்ன// பாத்து ரொம்ப தட்டி அலர்ஜியாகிவிடப்போகிறது!

வகுப்பறையிலே கொஞ்சம்கொஞ்சமாக பக்திமார்க்கம் தலைதூக்கி சோதிட ரீதியிலான விடைதெரியாத உலகாயதக் குழப்பங்களுக்கெலாம் கடவுளே விடை என்கிற வழக்கமான பங்கே தென்பட்டது..// ம்ம்

மொக்கை கமென்ட் அடிப்பது// ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்!

Unknown said...

வரிக்கு வரி கலாய்ச்சிருக்கீங்கோ..நல்லது..அபிடியே இருக்கட்டும்.. நன்றி..

Anonymous said...

நான் சீரியசாக எடுத்துக்கொண்டீர்களா என்று கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை, நல்லது அப்படியே இருக்கட்டும் என்றால் சீரியசாக எடுத்துக்கொண்டீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படி எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் மன்னிப்பு கோருகிறேன், இனிமேல் எனது கமெண்ட்ஸ் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து/படித்து தவறாக எடுத்துக்கொள்ளாதவிதத்தில் எழுதப்படும். நன்றி!

Unknown said...

ச்சே..ச்சே..என்னிக்கு நான் எதை சீரியஸா எடுத்துருக்கேன்...be cool ..

Anonymous said...

அதானே பார்த்தேன், நீங்க கமெண்ட் போட்டவிதம் அப்படித் தோன்றியது. அதனால்தான் கேட்டேன். நன்றி! (ஸ்ஸ் ப்பா)

Post a Comment