பச்சை வண்ண மேலாடை -அதில்
பால் அன்ன நீரோடை -மனம்
இச்சை கொள்ளும் பூஞ்சோலை -அதன்
இடை இடையே சிறு பாறை...!
நெட்டை நெடிய மரங்களின் ஊடே
நிலையில்லா வாழ்வைப் போலே
அலை அலையாய் பனி மூட்டம்...!
கடலில் குளித்து எழுந்ததுமே தனது
கரங்களை நீட்டும் கதிரவனும் -அவன்
இரவெல்லாம் பிரிந்த விரகதாபம் தீர
பச்சைமலை நோக்கிப் பரவுகின்ற அற்புதக்காலை...!
நெடுதுயில் போட்டத் இளந் தென்றலோ
நெட்டை மரங்களுக்கு விடைகொடுத்தே
நெளிந்து; விரிந்து; நறுமலர் அமர்ந்து,
தணிந்து உயர்ந்து; சுருங்கி அகண்டு
சுகந்தமாய் பறந்தே கிளம்பும் போதே...!
பனிப் போர்வை மூடித் தூங்கும்
மலை யவளின் முகத்திரையை -மிகப்
பவ்வியமாக நீக்கியே; தாய்ப்பாசம் பொங்கி
அவளின் உச்சி முகர்ந்து புறப்பட்டபோது...!
இரவெல்லாம் காத்து கடுங்குளிர் கோர்த்து
இரங்கக்கேட்டே; இராவண ஏக்கம் -ஏங்கிக்
கிடந்த பனி மூட்டமோ -இளம்
இரவியின் வரவால் வியர்வைத்
துளிகளை விடுத்தே மிக வேகமாக
விரைந்து சென்று மறைந்ததுவே...!
காதலன் அவனைக் கண்டதால் -அழகு
இராமனைக் கண்ட சீதையைப் போல்
பச்சைவண்ண மலையோ மொத்தமும் பூத்து
பலவண்ண ஓவியம் ஆகியதே -அதில்
இச்சை கொண்டே இளங்குயில் ஒன்று
இனிதே, மிகஇனிதே; தேன்சொட்டும்
பாடல் ஒன்றை இசைத்ததுவே...!
மனம் கொள்ளை போகும் பாடலுக்கோ...
மனமயங்கிய தும்பிகள் யாவுமே -ஆங்கே
மறந்தே போயின மது உண்ண...!
தும்பிகளே மயங்கிய தென்றால் -அதைச்
சொல்லவும் வேண்டுமோ!, மெல்லியத் தளிர்
அரும்பும், மொட்டும், போதுகளான -வண்ண
நறும் பூக்கள் யாவும் அதுபோலவே...!
மதுக் குடம் ஒத்த மலர்க் கூட்டம் -அம்
மலர்களது மடிகள் கனக்க தேனூறி
ஊரியத் தேனும் பெருக் கெடுத்தே
மடை திறந்த அருவியைப்போல் -மலர்க்
காம்புகள் வழியே பாய்ந்தோடும்…
தேன் பாயும்; தேனாறு அதுவும்
தேங்காமல் குளிர் நீரோடை
உடுத்தும் மேலாடையாக -அங்கே
குளித்து எழும் பூங்காத்தையும்
மது மயக்கம் தந்தே தான் ஓடும்…!
ஓடை யாவிலும் குதித்து தாவி
ஓடிவரும் நீர்த் திவலை களை
ஓடி உடைக்க எதிர்த்து; முட்டிமோதி
அங்கே குஞ்சுகளோடு கொஞ்சி விளையாடும்
செக்கச் சிவந்த கெண்டை கயலோடு,
கெளுத்தியும்; அயிரையும்; கருத்த விராவும்;
பெருத்த வாழையும் சேர்ந்தே -அசுரவேகம்
பாயும் ஆராவுமாக அத்தனையும் சேர்ந்தே
ஆனந்தக் கூத்தாடும்; மின்னலொளி மின்னும்
அழகு வெள்ளி ஓடையதை காண்பார்தம்
மனம் கொள்ளை போம்...!
இத்தனை அழகும் இனிதாய் பெற்ற
அற்புத எழில் மலை!... அழகாய்....
என் கற்பனையில் வளர்ந்தே -இப்போது
அழகுக் கவிதையாய் மலர்ந்ததே!...
23 comments:
தெள்ளு தமிழில் ஒரு அழகு கவிதை
////கா ந கல்யாணசுந்தரம் said...
தெள்ளு தமிழில் ஒரு அழகு கவிதை
19 December 2011 12:53////
தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் கவிஞரே!...
அழகிய கவிதை. வரிகளைப் படிக்கும் போது தமிழ் கொஞ்சுகிறது. அற்புதம் ஐயா.
////V.Radhakrishnan said...
அழகிய கவிதை. வரிகளைப் படிக்கும் போது தமிழ் கொஞ்சுகிறது. அற்புதம் ஐயா.
19 December 2011 22:35////
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே!
அத்தனை அழகும் இனிதாய்ப் பெற்ற
அழகுத் தமிழ் கவிதை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
////Ramani said...
அத்தனை அழகும் இனிதாய்ப் பெற்ற
அழகுத் தமிழ் கவிதை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
20 December 2011 13:51///
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் ஐயா!... மதுரகவி(ஞரே)!
கவி எழில் கொஞ்சுகிறது.
அதில் மனம் கொள்ளை போகிறது
வர்ணனைகள் எழிலோவியத்தை மிஞ்சுகிறது.
மலைமகளே என்னோடு பயணித்திரு
என மனம் கெஞ்சுகிறது.
அழகான கவிதை ஐயா..
இன்று முதல் தங்களின் தளம் தொடர்கிறேன்.
தமிழ்மணம் 2
////மகேந்திரன் said...
கவி எழில் கொஞ்சுகிறது.
அதில் மனம் கொள்ளை போகிறது
வர்ணனைகள் எழிலோவியத்தை மிஞ்சுகிறது.
மலைமகளே என்னோடு பயணித்திரு
என மனம் கெஞ்சுகிறது.
அழகான கவிதை ஐயா..
இன்று முதல் தங்களின் தளம் தொடர்கிறேன்.
தமிழ்மணம் 2
21 December 2011 21:04 ////
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி கவிஞரே!!!
இயற்க்கையின் அழகை தங்கள் கவிதைவடிவில் படிக்கும்போது, இன்னும் ரசிக்கத் தோன்றுகிறது...
அருமை... நண்பரே...
////ராஜா MVS said...
இயற்க்கையின் அழகை தங்கள் கவிதைவடிவில் படிக்கும்போது, இன்னும் ரசிக்கத் தோன்றுகிறது...
அருமை... நண்பரே...
22 December 2011 01:28////
வாருங்கள் அருமை நண்பரே..
தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி...
மிகவும் அருமை .
///sasikala said...
மிகவும் அருமை .
24 December 2011 17:42////
மிக்க நன்றிகள் சகோதிரி..
அழகுத் தமிழில் நடைபோடும் கவியினூடே கொஞ்சிச் சிரிக்கும் இயற்கை அழகோ அழகு. பீடோங்கி நடக்கிறது பெருமைமிகுத் தமிழ் இத்தடத்தில். பாராட்டுகள் நண்பரே.
////கீதா said...
அழகுத் தமிழில் நடைபோடும் கவியினூடே கொஞ்சிச் சிரிக்கும் இயற்கை அழகோ அழகு. பீடோங்கி நடக்கிறது பெருமைமிகுத் தமிழ் இத்தடத்தில். பாராட்டுகள் நண்பரே.
25 December 2011 09:22////
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் சகோதிரி...
அழகு
இராமனைக் கண்ட சீதையைப் போல்
பச்சைவண்ண மலையோ மொத்தமும் பூத்து
பலவண்ண ஓவியம் ஆகியதே
அத்தனை வரிகளும் படமும்
வானவில்லாய்
வண்ணங்கள் கோர்த்து அழகாய் ஒளிர்கின்றன.. பாராட்டுக்கள்..
///இராஜராஜேஸ்வரி said...
அழகு
இராமனைக் கண்ட சீதையைப் போல்
பச்சைவண்ண மலையோ மொத்தமும் பூத்து
பலவண்ண ஓவியம் ஆகியதே
அத்தனை வரிகளும் படமும்
வானவில்லாய்
வண்ணங்கள் கோர்த்து அழகாய் ஒளிர்கின்றன.. பாராட்டுக்கள்..
25 December 2011 15:58///
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் அம்மா!
படிக்கப் படிக்க காட்சி என்னுள் ஓவியமாய்
விரிந்து கொண்டே போனது
முழுமையான லயிப்பும் மொழி லாவகமும்
கைவரப்பெற்றவர்களால் மட்டுமே
இத்துனை சிறப்பாக எழுத முடியும்
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 4
/////Ramani said...
படிக்கப் படிக்க காட்சி என்னுள் ஓவியமாய்
விரிந்து கொண்டே போனது
முழுமையான லயிப்பும் மொழி லாவகமும்
கைவரப்பெற்றவர்களால் மட்டுமே
இத்துனை சிறப்பாக எழுத முடியும்
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்////
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் ஐயா!
பச்சை வண்ண மெல்லாம்
பளிங்கு மாளிகையாய் மாற
இச்சை கொள்ள வைத்ததய்யா
இனிய தமிழ் கவிதை
////அ. வேல்முருகன் said...
பச்சை வண்ண மெல்லாம்
பளிங்கு மாளிகையாய் மாற
இச்சை கொள்ள வைத்ததய்யா
இனிய தமிழ் கவிதை
29 December 2011 19:41////
இதயம் கனிந்த பின்னூட்டம்
இள மாங்கனியாய் இனித்தது நண்பரே!
மிகவும் அருமை சகோ
//kumaresan sivan said...
மிகவும் அருமை சகோ
22 February 2015 at 22:28 ///
தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே!
Post a Comment