திருமுறைச் சாரம் பாடல் இரண்டு.
என் உள்ளம் கவர்ந்த கள்வனே!
எருதமர்ந்து ஏகிய இமய வரதனே!
முதிர் ஆமை ஓட்டையும் அதனுடனே
சதிர் வராக முளைப் பல்லையும்
கதிர் நின் மேனியெல்லாம் படர்ந்ததால்
சதுர வேத நாயகனே - நின்
மதுர மார்பில் மாலை யானதால்
முதிர் என்றும் அடையா - இளம்
நாகத்தையும் திருமார்பில் ஆரமாய் சூடியே
திருவோடு தாங்கியே சுந்தரஉருவோடு
அருவமுமான குருவே என் இதயம்
நிரம்பிய அமுதே; நின் பூங்கழல்
போற்றும் சான்றோர் தமக்கே தீங்கிலா
ஏற்றம் அளிக்கும் பொருட்டே - எழில்
பெற்றம் அமர்ந்து ஏகிய ஈசனே!
பிரமப்புரம் ஆளும் பெருந்தேவனே -நின்
பொற்பாதம் பணிகிறேன் நித்திய தேவனே
தப்பாமல் எனைத் தடுத்தாண்டு கொள்வாயே
கயிலை மலை நாதனே!- மாசற்ற
கனக மணி மார்பனே; கட்டழகனே;
பார்வதிநாதனே எம்மை பரிந்துக் காப்பாய்
பார்போற்றும் இப்பிரபஞ்சத் தலைவனே!
பார்வதிநாதனே எம்மை பரிந்துக் காப்பாய்
பார்போற்றும் இப்பிரபஞ்சத் தலைவனே!
திருச்சிற்றம்பலம்.
2 comments:
பார்வதி நாதன் நம்மை பரிந்து காப்பான்! நல்ல கவிதை சகோதரரே.
////ஷைலஜா said...
பார்வதி நாதன் நம்மை பரிந்து காப்பான்! நல்ல கவிதை சகோதரரே.
14 December 2011 08:33///
ஆஹா! அருமை... ஒருவாசகம் அது திருவாசகம் உங்கள் பின்னூட்டம் தந்த அழகு வாசகம் அதனையும் பாடலோடு சேர்த்து விட்டேன் சகோதிரி.
Post a Comment