மகாகவி ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் 130- ஆவது பிறந்தநாள்
கொண்டாட்டம். தமிழுலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது.
அப்படி நமது மகாகவிக்கு திருவையாறு பாரதி இயக்கமும், திருச்சி வானொலி நிலையத்தாரும்
சேர்ந்து, பாரதியின் 130- ஆவது பிறந்தநாள்
விழாவை அதி விமர்சியாக கொண்டாடி இருப்பதை அறிந்து அன்னைத் தமிழின் சார்பாக
மகிழ்ச்சியை தெரிவிப்பதோடு, அவ்விழாவிற்கு
பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மகாகவிக்கு
ஒரு இனியவிழா!
மகத்தான அறிஞர்கள் கூடியவிழா!
மாணிக்க ஒளியவன் கவிதையிலா,
மாமன்ற பேச்சும் மனதில் நில்லா!
கவிதை வானில் அவன் கவிநிலா,
காலங்கள் கடந்தும் வந்திடும் உலா!
வேதங்கள் புதுமைச் செய்த கலா!
வேதாந்த லட்சியம் விளம்பிய முழா!
அவன்கவி வேரிலே பழுத்தப் பலா,
வெடித்து தேனிலே நனைந்தச்சுளா!
அடிமைத் தலையை அசைத்ததிலா
ஆணோடு பெண்ணையும் அமர்த்தியதிலா
அன்னைத் தமிழை போற்றியதிலா
அகிலமெலாம் உயர எண்ணில்லா
அறிவுத்தரவே மண்ணில் வந்தநிலா
மகாகவி இவனோ உலக கவிஉலா!
மகாகவி பாரதி! ஒரு யுகபுருஷன் இவன் புகழ்
வாழிய! வாழிய!! வாழியவே!!!
மகத்தான அறிஞர்கள் கூடியவிழா!
மாணிக்க ஒளியவன் கவிதையிலா,
மாமன்ற பேச்சும் மனதில் நில்லா!
கவிதை வானில் அவன் கவிநிலா,
காலங்கள் கடந்தும் வந்திடும் உலா!
வேதங்கள் புதுமைச் செய்த கலா!
வேதாந்த லட்சியம் விளம்பிய முழா!
அவன்கவி வேரிலே பழுத்தப் பலா,
வெடித்து தேனிலே நனைந்தச்சுளா!
அடிமைத் தலையை அசைத்ததிலா
ஆணோடு பெண்ணையும் அமர்த்தியதிலா
அன்னைத் தமிழை போற்றியதிலா
அகிலமெலாம் உயர எண்ணில்லா
அறிவுத்தரவே மண்ணில் வந்தநிலா
மகாகவி இவனோ உலக கவிஉலா!
மகாகவி பாரதி! ஒரு யுகபுருஷன் இவன் புகழ்
வாழிய! வாழிய!! வாழியவே!!!
அவ்விழாவைப் பற்றி அறிய விரும்புவோர் கீழ்கண்ட தளங்களுக்குச் சென்று பார்க்கலாம்.
நன்றி வணக்கம்.
8 comments:
நேற்றுதான் 11-ம் தேதி கவிஞரின் பிறந்த நாள் என்பது தெரிந்தது.
ஆனால் 12-ம் தேதி யாருடைய பிறந்த நாள் என்பதே எப்பவோ தெரிந்திருந்தது !!!
:(
தகவலுக்கு நன்றி
////தருமி said...
நேற்றுதான் 11-ம் தேதி கவிஞரின் பிறந்த நாள் என்பது தெரிந்தது.
ஆனால் 12-ம் தேதி யாருடைய பிறந்த நாள் என்பதே எப்பவோ தெரிந்திருந்தது !!!
:(
12 December 2011 18:32////
உண்மைதான் தங்களின் ஆதங்கமும் நியாயமானதே....
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஐயா!..
////கவிதை வீதி... // சௌந்தர் // said...
தகவலுக்கு நன்றி
12 December 2011 19:01 ////
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் நண்பரே!
இங்கு எனது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
தகவலுக்கு நன்றி... நண்பரே...
அன்னைத்தமிழ்யை போற்றிய நிலாவை வானுயரக்கவிதையிட்டு வாழ்த்தியதற்கு பாராட்டுக்கள்.
////ராஜா MVS said...
இங்கு எனது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
தகவலுக்கு நன்றி... நண்பரே...
12 December 2011 22:32////
தங்களை வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!
////ஷைலஜா said...
அன்னைத்தமிழ்யை போற்றிய நிலாவை வானுயரக்கவிதையிட்டு வாழ்த்தியதற்கு பாராட்டுக்கள்.
12 December 2011 22:32 ////
மிக்க நன்றி சகோதிரி...
Post a Comment