"நான் ஏறிக்கொண்டே
இருக்கிறேன்.
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா!
நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா!
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா!
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா!
நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா!
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா!
இறைவா, இறைவா! நூறு கோடி இந்திய மக்கள் லட்சிய
சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப
அமைதியையும் உழைத்து அடைவதற்கு அருள் புரிவாயாக!"
- டாக்டர் ஏ
.பி. ஜெ. அப்துல் கலாம்.
மேதகு மெஞ்ஞான
விஞ்ஞானி ஐயா அப்துல் கலாம் அவர்களின் அருமையானக் கவிதையத் தொடர்ந்து அவரின்
கவிதையின் தாக்கத்தால் விளைந்த எனது கவிதை இதோ!
உழைத்து உன்னத வாழ்வதை அடைய
உலகோருக்கு அருள்வாய் இறைவா!
களைப்பில் காலயர்ந்து அமர்வோருக்கு -குளிர்
நிழலென விளங்கும் பரமே!
சமநிலை காணமுடியா தெனினும் - யாவரும்
சமமெனும் மனநிலைவளர அருளும் -விமலா
யமனையும் கண்டு இங்கு கலங்கிடாத
மனம்தனை அளிப்பாய் இறைவா!
தனெக்கென வாழாமல் பிறர்க்கென வாழும்
மனத் தெளிவினை விளக்கிடும் இயற்கையது;
உனதரும் விளக்கமதை உலகோர றிவதில்லை
யானெனதெனும் செருக்கை அழிப்பாயோ!
ஒழுக்கம் உயர்வளிக்கும் உயர்வது உண்மையாலே
செழித்து வளர்ந்துவளம் கொழிக்கும் -இருந்துமதை
களித்து இன்புற கருணைமிகு தேவா
விழித்து நினதடிப்போற்று தலாலே!
3 comments:
திரு.அப்துல்கலாமின் கவிதை, அதைத் தொடர்ந்த தங்களின் கவிதை இரண்டும் அழகு,அருமை, அற்புதம்!!!. தங்கள் கவிதையில்,
////
களித்து இன்புற கருணைமிகு தேவா
விழித்து நினதடிப்போற்று தலாலே! ////
முத்திரை பதித்த வைர வரிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா!!!
பார்வதி இராமச்சந்திரன். said...
திரு.அப்துல்கலாமின் கவிதை, அதைத் தொடர்ந்த தங்களின் கவிதை இரண்டும் அழகு,அருமை, அற்புதம்!!!. தங்கள் கவிதையில்,
////
களித்து இன்புற கருணைமிகு தேவா
விழித்து நினதடிப்போற்று தலாலே! ////
முத்திரை பதித்த வைர வரிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா!!!
பாராட்டிற்கு நன்றிகள் சகோதரி!
ஐயா, தாமதமாக பினூட்டத்தை அனுப்புகிறேன். எங்கும் இறைந்து இருப்பாய் இருக்கும் இறைவன், அவன் அவள் அது என்னும் சுட்டி அறியப்படும் இந்த பிரபஞ்சத்தையும் கடந்து கடவுளாய், இருப்பாய், இருந்து ஐந்தொளில்களில் ஒன்றாகிய மறைத்தல் தொழிலையும் செய்துகொண்டு இருப்பதால் உங்கள் கேள்விகளுக்கு எது எப்போது நடக்கும் என்பதை மறைத்து வைத்தாலும், அருளல் என்னும் தொழில் இடையறாது நடந்து கொண்டிருப்பதால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். அது உங்கள் நாட்டுப்பற்றுக்கும் தொழிலில் அர்பணிப்பு திறனுக்கும் கொடுக்கும் வாழ்த்தாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவன் நீங்கள் கேட்டவாரே அருள்புரிவார்
Post a Comment