பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday, 30 December 2011

மனைவியின் அருமை...!

நீரின் அருமை பயிரில் தெரியும்!
நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்!
கல்வியின் அருமை பதவியில் தெரியும்!
காசின் அருமை வறுமையில் தெரியும்!
தாயின் அருமை அன்பினில் தெரியும்!
தந்தையின் அருமை அறிவினில் தெரியும்!
நண்பனின் அருமை உதவியில் தெரியும்!
அண்ணனின் அருமை அன்பளிப்பில் தெரியும்!
அக்காவின் அருமை அரவணைப்பில் தெரியும்!
தம்பியின் அருமை தயவில் தெரியும்!
தங்கையின் அருமை விருந்தில் தெரியும்!
மகளின் அருமை மரியாதையில் தெரியும்!
மகனின் அருமை சுமையில் தெரியும்!
மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!
ஆனால்!... இது... 
அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்!

31 comments:

Anonymous said...

good one

SURYAJEEVA said...

அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் அருமையான கவிதை

மகேந்திரன் said...

வேரூரில் விதைத்து
வித்திட்ட பயிர் வளர்ந்து
வளர்ந்த பயிர் பறித்து
மாற்றான் நெஞ்சில் பதியப்பட்டு
வேரூன்றி விழுதீன்று
வியாபிக்கும் உறவாம்
மனைவி பற்றிய தங்களின்
கவி போற்றுதலுக்குரியது ஐயா...

இதில் அத்தனை உறவுகளுக்கு எது பெருமை என
நீங்கள் உரைத்திட்ட யாவுமே மனதில் நின்றது.

மகேந்திரன் said...

தமிழ்மணம் 1

Unknown said...

///தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.///

தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

Unknown said...

////suryajeeva said...
அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் அருமையான கவிதை
30 December 2011 16:01 ////

பாராட்டிற்கு நன்றிகள் தோழரே!

Unknown said...

/////மகேந்திரன் said...
வேரூரில் விதைத்து
வித்திட்ட பயிர் வளர்ந்து
வளர்ந்த பயிர் பறித்து
மாற்றான் நெஞ்சில் பதியப்பட்டு
வேரூன்றி விழுதீன்று
வியாபிக்கும் உறவாம்
மனைவி பற்றிய தங்களின்
கவி போற்றுதலுக்குரியது ஐயா...

இதில் அத்தனை உறவுகளுக்கு எது பெருமை என
நீங்கள் உரைத்திட்ட யாவுமே மனதில் நின்றது.
30 December 2011 16:36 /////

உண்மை தான் நமது சந்ததி
உயர்ந்த விருச்சமாக; தனது
கருவறையை தானம் தந்த
அன்னபூரணி அல்லவா அவள்...
உலக இயக்கத்தின் காரணி..

தங்களின் கவிநயமும் கருத்தம் ஒருங்கே அமைந்த அருமையானப் பின்னூட்டப் பாராட்டு. நன்றிகள் கவிஞரே!

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

அலையற்ற கடலில் படகில் செல்வதுபோல
மிகச் சுகமாக கவிதையில் பயணிக்க இறுதியில்
கடைசி வரியில் சடாரென ஒரு
பெரும் பாறையில் மோதியதுபோல் மனம்
திடுக்கிட்டுப் போனது
இழந்தபின் தன் அருமையை விளக்கும் பல விஷயங்களில்
தாரம் முக்கியமானவள்.அனைவருக்குமே இது
இழந்தபின்தான் புரியும் என்பதே பெரும் சாபம்
அருமையான படைப்பு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தொடர வாழ்த்துக்கள் த.ம 3

ஷைலஜா said...

சிலருக்கு அப்படித்தான் சகோதரரே. ஆனாலும் பெண்கள் கொஞ்சம் புகழ்ச்சியை கணவரிடம் அதிகம் எதிர்பார்ப்போம்:)

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

Unknown said...

///Rathnavel said...
அருமையான கவிதை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
30 December 2011 18:17///

மிக்க நன்றிகள் ஐயா!
தங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown said...

////Ramani said...
அலையற்ற கடலில் படகில் செல்வதுபோல
மிகச் சுகமாக கவிதையில் பயணிக்க இறுதியில்
கடைசி வரியில் சடாரென ஒரு
பெரும் பாறையில் மோதியதுபோல் மனம்
திடுக்கிட்டுப் போனது
இழந்தபின் தன் அருமையை விளக்கும் பல விஷயங்களில்
தாரம் முக்கியமானவள்.அனைவருக்குமே இது
இழந்தபின்தான் புரியும் என்பதே பெரும் சாபம்
அருமையான படைப்பு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தொடர வாழ்த்துக்கள் த.ம 3
30 December 2011 18:44 ////

பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே!
தங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown said...

////ஷைலஜா said...
சிலருக்கு அப்படித்தான் சகோதரரே. ஆனாலும் பெண்கள் கொஞ்சம் புகழ்ச்சியை கணவரிடம் அதிகம் எதிர்பார்ப்போம்:)

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!
30 December 2011 22:06 ///

ஆஹா! நல்ல ரகசியம் (உத்தி) ஒன்றையும் கூறி இருக்கிறீர்கள். :):)
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சகோதிரி...

கீதமஞ்சரி said...

இருக்கும்போது அவள் அருமை புரிந்து அரவணைத்துச் செல்லும் தம்பதியரில் இருவருமே கொடுத்துவைத்தவர்கள். கவிதை முழுவதிலும் விரவிக்கிடக்கிறது வாழ்க்கையின் உன்னத சங்கதிகள். பாராட்டுகள்.

Admin said...

மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!
ஆனால்!... இது...
அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்!

அருமை..வாழ்த்துகள்..
த.ம-4

அன்போடு அழைக்கிறேன்..

உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

ஓசூர் ராஜன் said...

மனைவின் அருமை, மற்றொரு துணைவி வந்தால் தெரியும்! t.m-1

Unknown said...

////கீதா said...
இருக்கும்போது அவள் அருமை புரிந்து அரவணைத்துச் செல்லும் தம்பதியரில் இருவருமே கொடுத்துவைத்தவர்கள். கவிதை முழுவதிலும் விரவிக்கிடக்கிறது வாழ்க்கையின் உன்னத சங்கதிகள். பாராட்டுகள்.
1 January 2012 09:26////

உண்மைதான்... பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரி.

Unknown said...

////மதுமதி said...
மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!
ஆனால்!... இது...
அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்!

அருமை..வாழ்த்துகள்..
த.ம-4

அன்போடு அழைக்கிறேன்..

உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)
1 January 2012 12:59 ////

வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றிகள் நண்பரே!
உங்கள் பக்கமும் வருகிறேன்.

Unknown said...

////ஓசூர் ராஜன் said...
மனைவின் அருமை, மற்றொரு துணைவி வந்தால் தெரியும்! t.m-1
1 January 2012 14:02 ////

ஆகா.. இதுவும் உண்மைதான்... உணராமல் போகமுடியாது அல்லவா!
இருந்தும் கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமாகி விடுவது தான் அவலமே..
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் நண்பரே!

அன்புடன் மலிக்கா said...

//அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்!//

மிக மிக அருமை. அப்போதும் பலருக்கு புரிவதில்லை.புரியுமுன்பேதான் புதியது வந்திடுமல்லவா..[சிலருக்கு]

http://niroodai.blogspot.com/2011/12/blog-post_31.html

Unknown said...

////அன்புடன் மலிக்கா said...
//அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்!//

மிக மிக அருமை. அப்போதும் பலருக்கு புரிவதில்லை.புரியுமுன்பேதான் புதியது வந்திடுமல்லவா..[சிலருக்கு]

http://niroodai.blogspot.com/2011/12/blog-post_31.html
1 January 2012 17:22 ////
அதுவும் உண்மை தான்...
வருகைக்கும், பாராட்டிற்கும், நன்றிகள் சகோதிரி!

Unknown said...

வாழ்த்து சொல்ல வந்தேன்..

கவிதையிலே களங்காணும்

கலங்காப்புலி தமிழ்விரும்பிக்கு..

கவிதைக்காக அல்ல..காரணம்...கவிதை...

அந்தளவுக்குப் புரியாதது..பொறுமையும் தராதது..

இந்தக் கமெண்ட்டு எனக்கேயெனக்கே..

எனவே வந்தவழியே பயணிக்கிறேன்..

வாழ்த்தை புத்தாண்டுக்கே உரித்தாக்கி..

வாழ்க..வளர்க..வாழ்க..

Unknown said...

///minorwall said...
வாழ்த்து சொல்ல வந்தேன்..

கவிதையிலே களங்காணும்

கலங்காப்புலி தமிழ்விரும்பிக்கு..////

வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்திற்கும் நன்றிகள் நண்பரே!
உங்களுக்கும் எங்களது மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

////வாழ்த்து சொல்ல வந்தேன்..

கவிதையிலே களங்காணும்

கலங்காப்புலி தமிழ்விரும்பிக்கு..

கவிதைக்காக அல்ல..காரணம்...கவிதை...

அந்தளவுக்குப் புரியாதது..பொறுமையும் தராதது..

இந்தக் கமெண்ட்டு எனக்கேயெனக்கே..

எனவே வந்தவழியே பயணிக்கிறேன்..

வாழ்த்தை புத்தாண்டுக்கே உரித்தாக்கி..

வாழ்க..வளர்க..வாழ்க.. /////

அட இது தானேக் கவிதை...
தங்களின் இந்த பின்னூட்டமும் கூட
அழகாய் கவித்துவம் கொண்டுள்ளதே!

செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்
அதற்கு தங்களிடம் பஞ்சமில்லை...
ஆக அதை பேனாவில் கொண்டுவரத்தான்
வீணான செயல் என்றே ஒதுங்குவதேன்...

உண்மை வெறும் புகழ்ச்சியில்லை...
இதே பாணியில் இன்னும் துணிந்தால்
கவிஞனாவது திண்ணம் நண்பரே!

நன்றி! நன்றி!! நன்றி!!!..

Unknown said...

கவிக்க முயல்வது எனக்கு என்னவோ இயல்பை இழந்து செயற்கையாய் தோன்றுகிறது..
அதுனாலே எப்போவாவுது கதையைக் குடுக்கறதோட நிறுத்திக்குறேன்..நன்றி..

Unknown said...

///minorwall said...
கவிக்க முயல்வது எனக்கு என்னவோ இயல்பை இழந்து செயற்கையாய் தோன்றுகிறது..
அதுனாலே எப்போவாவுது கதையைக் குடுக்கறதோட நிறுத்திக்குறேன்..நன்றி..
2 January 2012 10:38///

இல்லை உண்மையில் உங்களால் முடிகிறது... இது தான் கவிதை.
வார்த்தை எழுப்பும் சப்தத்தை ஒரேமாதிரி உள்ளவைகளியாக கொணர்ந்து
பொருள்படும்படி செய்யுங்கள் அது அனைனவரும் ரசிக்கும் படி இருக்கும்...
கொஞ்சம் நல்ல மூடில் (வருத்தமோ / சந்தோசமோ) தனிமையாக இருந்து
வரிகளை வார்த்தைகளை தேர்ந்து கோருங்கள் அது தான் கவிதை
புதுக்கவிதைக்கு வரம்பு இல்லை.. அதிலே செய்தியும்... நல்ல ஒலியும்
இருக்கவேண்டும்... உன்களால் முடியும்.. எழுதி வகுப்பறைக்கு அனுப்புங்கள்.

மொழியில் ஆர்வம் (அது ஒரு கலை) அது எந்த மொழியானாலும் சரி...
இருந்தால் அவர்கள் உள்ளபடியே ஒருக் கவிஞர் தான்...
உங்களிடம் இருக்கும் ஆங்கில பிரியம், ஆர்வம், திறமை
அதைப் படம்பிடித்துக் காட்டுகிறது.. அப்படி இருக்க தமிழ் தாய் மொழி அது எப்படித் தடை படும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் வரட்டும்... யார்கண்டால் முதன் முதலிலே மிதி வண்டி ஓட்டப் பழகுபவன் கீழே விழாமல் ஓட்டுவது இல்லையா... நானும் அப்படித்தான்.. தனியாகப் பிறந்த நான் நானாக மிதிவண்டி, நீச்சல், ஏன் ஸ்கூட்டர், கார் வரைக்கும் பயிற்சி இல்லாமல் எடுத்த எடுப்பிலே ஓட்டினேன்.. கவிதையும் அப்படித்தான்.. நீங்களும் செய்ய முடிகிறது தொடருங்கள்... வாழ்த்துக்கள் நண்பரே!

Unknown said...

/////// தமிழ் விரும்பி said...
///minorwall said...
கவிக்க முயல்வது எனக்கு என்னவோ இயல்பை இழந்து செயற்கையாய் தோன்றுகிறது..
அதுனாலே எப்போவாவுது கதையைக் குடுக்கறதோட நிறுத்திக்குறேன்..நன்றி..
2 January 2012 10:38///

இல்லை உண்மையில் உங்களால் முடிகிறது... இது தான் கவிதை.
வார்த்தை எழுப்பும் சப்தத்தை ஒரேமாதிரி உள்ளவைகளியாக கொணர்ந்து
பொருள்படும்படி செய்யுங்கள் அது அனைனவரும் ரசிக்கும் படி இருக்கும்...
கொஞ்சம் நல்ல மூடில் (வருத்தமோ / சந்தோசமோ) தனிமையாக இருந்து
வரிகளை வார்த்தைகளை தேர்ந்து கோருங்கள் அது தான் கவிதை
புதுக்கவிதைக்கு வரம்பு இல்லை.. அதிலே செய்தியும்... நல்ல ஒலியும்
இருக்கவேண்டும்... உன்களால் முடியும்.. எழுதி வகுப்பறைக்கு அனுப்புங்கள்.

மொழியில் ஆர்வம் (அது ஒரு கலை) அது எந்த மொழியானாலும் சரி...
இருந்தால் அவர்கள் உள்ளபடியே ஒருக் கவிஞர் தான்...
உங்களிடம் இருக்கும் ஆங்கில பிரியம், ஆர்வம், திறமை
அதைப் படம்பிடித்துக் காட்டுகிறது.. அப்படி இருக்க தமிழ் தாய் மொழி அது எப்படித் தடை படும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் வரட்டும்... யார்கண்டால் முதன் முதலிலே மிதி வண்டி ஓட்டப் பழகுபவன் கீழே விழாமல் ஓட்டுவது இல்லையா... நானும் அப்படித்தான்.. தனியாகப் பிறந்த நான் நானாக மிதிவண்டி, நீச்சல், ஏன் ஸ்கூட்டர், கார் வரைக்கும் பயிற்சி இல்லாமல் எடுத்த எடுப்பிலே ஓட்டினேன்.. கவிதையும் அப்படித்தான்.. நீங்களும் செய்ய முடிகிறது தொடருங்கள்... வாழ்த்துக்கள் நண்பரே! //////////

மைனர் ஏதோ தெரியாம களத்துலே குதிச்சுட்டாரு..அதுக்காக இந்த காய்ச்சு காய்ச்சவேணாம்..பாவம்..மைனர் பொழச்சுப் போவட்டும்..வுட்டுடுங்க..

இராஜராஜேஸ்வரி said...

மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!

இருப்பிலேயே உணரவைத்த அருமையான கவிதை. பாராட்டுக்கள்..

Unknown said...

/////இராஜராஜேஸ்வரி said...
மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!

இருப்பிலேயே உணரவைத்த அருமையான கவிதை. பாராட்டுக்கள்../////

வருகைக்கும், பாராட்டிற்கும், நன்றிகள் சகோதிரி!

krishnar said...

minorwall said...
///வாழ்த்து சொல்ல வந்தேன்..

கவிதையிலே களங்காணும்

கலங்காப்புலி தமிழ்விரும்பிக்கு..

கவிதைக்காக அல்ல..காரணம்...கவிதை...///

த‌ம்பி மைன‌ருக்கு க‌விதை அரும்புகின்ற‌து வெளிப்ப‌டை.
த‌மிழ்விரும்பி அவ‌ருக்கு த‌ரும் ஊக்க‌ம் விரைவில் மைன‌ரின் ம‌ண‌ந்த‌ரும் க‌விதைக‌ளை எதிர்பார்க்க‌லாம்.
த‌ம்பி முய‌லுங்க‌ள் வெற்றி இப்போ உங்கள் மூக்கு நுனியில்.

Unknown said...

/////krishnar said...
minorwall said...
///வாழ்த்து சொல்ல வந்தேன்..

கவிதையிலே களங்காணும்

கலங்காப்புலி தமிழ்விரும்பிக்கு..

கவிதைக்காக அல்ல..காரணம்...கவிதை...///

த‌ம்பி மைன‌ருக்கு க‌விதை அரும்புகின்ற‌து வெளிப்ப‌டை.
த‌மிழ்விரும்பி அவ‌ருக்கு த‌ரும் ஊக்க‌ம் விரைவில் மைன‌ரின் ம‌ண‌ந்த‌ரும் க‌விதைக‌ளை எதிர்பார்க்க‌லாம்.
த‌ம்பி முய‌லுங்க‌ள் வெற்றி இப்போ உங்கள் மூக்கு நுனியில்./////

நல்லது..நன்றி..'உன்னால் முடியும் தம்பி' என்று ரெண்டு பேரும் சொல்வது எனக்கு உரக்கக் கேட்கிறது..
என்னால் என்னஎண்ண முடியும் என்று யோசிக்கிறேன்..
எல்லோருக்குமே முடிந்த, முடியாமலே நீட்டிக்க எண்ணும் விசயம்தான் நினைவுக்கு வருகிறது..
எதுக்கும் ரெண்டுநாள் இந்த மேட்டரை கிடப்புலே போடுவோம்..

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment