திருமுறைச்
சாரம் பாடல் ஓன்று.
ஆன்மாக்கள் யாம் கடவுளாகும் மென்றால்
ஆண்டு அவைதாம் பொருந்துமோ? - ஐய
வெண்பிறை சூடியத் திருவே - நீயே
ஒப்பில்லாக் கடவு ளென்றால்; அதுவே
முக்காலமும் உண்மை யாகுமே!
பேரியாழ் என்னும் வீணை மீட்டுவோனே
பேரழகான நாதனே பெரும் பூதத் தலைவனே
அருவமும் உருவமுமான அற்புத பொருளே
பகைப் பொருளும் நின்னைச் சாரின்
பகைத் தீர்ந்து நட்பாகும் எனும் உண்மையை
உலகிற்கு உணர்த்தவே உடம்பெல்லாம்
அரவங்கள் பூண்டே அருள் பாலிக்கும்
ஆனந்த ரூபனே ஆடல் அரசனே
காமனை கடும் கோபம் கொண்டே
அருவமாக மறைத்தே மகத்துவம் புரிந்தோனே
சீர்மேவும் சீர்காழியில் நின்று அருள்பவனே
சீரிய சிந்தை நிறைச் செந்தேனே
இலக்குமியின் நாயகனாம் திருமாலாய் வந்தருள்பவனே
வேத நாயகனே வேண்டும் வரம் தருபவனே
உடுக்கை உடையோனே இடுக்கண் தரும்
மாயை தனை மாய்த்து எனைக் காப்போனே
மாயாதேவியின் நாயகனே மன்றாடி வேண்டுகிறேன்
ஓயாது உழற்றும் ஐம்புலனை அடக்க அருளியே
மாயா உலகிலிருந்து எனை விடுவிப்பாயே!.
திருச் சிற்றம்பலம்!..
- தமிழ் விரும்பி.
4 comments:
மாயை தனை மாய்த்து எனைக் காப்போனே
மாயாதேவியின் நாயகனே மன்றாடி வேண்டுகிறேன்
ஓயாது உழற்றும் ஐம்புலனை அடக்க அருளியே
மாயா உலகிலிருந்து எனை விடுவிப்பாயே!.
அழ்கிய அன்னைத்த்மிழ் கவிதைக்குப் பாராட்டுக்கள்..
கவிதை அருமை...
////இராஜராஜேஸ்வரி said...
மாயை தனை மாய்த்து எனைக் காப்போனே
மாயாதேவியின் நாயகனே மன்றாடி வேண்டுகிறேன்
ஓயாது உழற்றும் ஐம்புலனை அடக்க அருளியே
மாயா உலகிலிருந்து எனை விடுவிப்பாயே!.
அழ்கிய அன்னைத்த்மிழ் கவிதைக்குப் பாராட்டுக்கள்..
9 December 2011 15:58////
பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரி...
////ராஜா MVS said...
கவிதை அருமை...
9 December 2011 19:44////
மிக்க நன்றி நண்பரே!
Post a Comment