பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday, 8 December 2011

உயிரில் கலந்த அமுதமா? உடலில் கலந்த விசமா?



முள்ளில் மலர்ந்த ரோஜாவா
முள்ளாய் மலர்ந்த ரோஜாவா?
கல்லில் ஊரும் சுனைநீரா?
சொல்லாமல் போனக் கானல்நீரா?...

பூத்துக் குலுங்கும் குறிஞ்சியா?
சேத்துக்குள் குத்தும் நெருஞ்சியா?
புனல் பூத்த தாமரையா?
அனல் பூத்த கறும்பாறையா?...

நிலவா? அதன் நிழலா?
உயிரில் கலந்த அமுதமா?
உடலில் கலந்த விசமா?
இதயம் நுழைந்த இன்பமா?
இரண்டாய் பிளக்கும் பெருந்துன்பமா?...

கனவில் வந்த தேவதையா?
மனதை நசுக்கிய ராட்ச்சசியா?
நீயாரென்று எப்படி அறிவேன்?...

தூரத்து குளிர் நிலவா?
தூக்கம் களைத்த வெறுங்கனவா?...

நெருங்கியே வருகிறாய் இருந்தும்
நெற்றியை ஏன் சுருகுகிறாய்?
இதயம் திறந்து கூறாயோ?
இனி(யும்) என்னைக் கொள்(ல்)வாயோ?...

வாள்விழி கொண்டே கீறியதை
வாய்மொழி கொண்டே ஆற்றாயோ?
தேன்மொழி தனைசிந்தியே என்னுள்
இன்பத் தீயை மூட்டாயோ?
கார்குழல் கொண்டே இருக்கியதை
காதல் கொண்டே உயிர்ப்பாயோ?...



நிலவிலும் மலரிலும் உன்முகம்
நெஞ்சம் குளிர்ந்திடும் இன்முகம்
வஞ்சி நீ வான்முகிலோ?
வனத்திலாடும் அழகு மயிலோ?...

வானில் பூத்த விண்மீனோ?
செஞ்சு வைத்த வான்மதியோ?
சிறந்த பொன்னோவியமோ?
அணங்கோ? அழகு மயிலோ?...

ஆனந்த கானமோ ஆருயிரே!
குளிர் காலச் சூரியனே! 
கோடை காலத் தென்றலே!
பூந்தேனே! மாம்பூவே! முதுக்குடமே! 



கடைசியாக உன்னைக் கேட்கின்றேன்
ஏதும் சொல்லாமற்போவது நியாயமோ?...

தஞ்சம் என்று வந்தென்னை 
கொஞ்சம் நின்று பாராயோ?
நீயில்லாது நித்தம் சாகிறேன் 
உன்வாசம் வந்தே உயிர்க்கிறேன்...

எனைக்கொள்ளாமல் கொன்று போறவளே!
ஒரேதியாகக் கொ(ன்று)ண்டு போவாயோ?  

என்னுள் அமர்ந்த தேவியே!
உன்னையும் சேர்த்து எரித்து  
எப்படிப் போக்குவேன் ஆவியே?


2 comments:

ஷைலஜா said...

ஆஹா மனசை ஊடுருவும் வரிகள் ..

Unknown said...

///ஷைலஜா said...
ஆஹா மனசை ஊடுருவும் வரிகள் ..
9 December 2011 00:23 ////

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் சகோதிரி...

Post a Comment