"பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்"
''சாரமுள்ள பொருளினைநான்
சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்".
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்".
எம்மதமும்
சம்மதம்... உலகில் உள்ள எல்லா மதமும் உரைப்பதுவும் அதுவே! வேதாந்த சாரம் அது தான்
அத்தனை மதங்களின் மறைகளின் சாரம் என்பதை மகாகவி பாரதியார் அருமையாக பாடியுள்ளதைப்
போலவே...
அவர்
இஸ்லாமிய மார்க்கத்தின் கடவுளாகிய அல்லாவையும் பாட மறக்கவில்லை. அந்த அற்புத வேதநாயகத்தின்
புகழினை பாரதி பாடுவதை, இன்று இந்த ரம்ஜான் பண்டிகையின் போது நாமும் அக மகிழப்
படித்து அந்த அல்லாவின் அருள் தனை பெறுவோமாக!!!.
அல்லா.
அல்லா, அல்லா, அல்லா,
சரணங்கள்
பல்லாயிரம்
பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத்
திசையினும் ஊர்எல்லை இல்லாவெளி வானிலே!
நில்லாது
சுழன்றோட நியமம்செய்த தோர்நாயகன்
சொல்லாலும்
மனத்தாலும் தொடரொணாத பரஞ்சோதி (அல்லா)
கல்லாதவர்
ஆயினும், உண்மை சொல்லாதவர் ஆயினும்,
பொல்லாதவர்
ஆயினும், தவம் இல்லாதவர் ஆயினும்,
நல்லார்
உரை நீதியின் படி நில்லாதவர் ஆயினும்,
எல்லாரும்
வந்து ஏத்தும் அளவில் எம பயம் கெடச் செய்பவன் (அல்லா)
ஏழைகட்கும்
செல்வர்கட்கும் இரங்கியருளும் ஓர்பிதா
கோழைகட்கிம்
வீரருக்கும் குறைதவிர்த்திடும் ஓர்குரு
ஊழி,ஊழி,அமரராய், இவ் வுலகின்மீதில் இன்புற்றே
வாழ்குவீர்
பயத்தைநீக்கி வாழ்த்துவீர் அவன்பெயர் (அல்லா)
புனித
ரம்ஜான் பண்டிகை முதன் முதலில் கி.பி. 634 - முதல் கொண்டாடப் படுவதாக
அறிகிறேன்.
மேலும், 786
என்ற இந்த எண்கள் முதன் முதலில்
திருக்குரான் எழுதப் பட்ட போது எடுத்துக் கொள்ளப் பட்ட பக்கங்கள் என்று
அறிகிறேன்... உண்மைதானா? என்பதை நமது இஸ்லாமிய நண்பர்கள் தான் கூற வேண்டும்....
நன்றி
வணக்கம்,
அன்புடன்,
தமிழ்
விரும்பி.
2 comments:
வலை வந்து கருத்துரை வழங்
கினிர் நன்றி
கடுமையான முதுகுவலி
காரணமாக அமர்ந்து கருத்துரை
வழங்க இயலவில்லை மன்னிக்க!
பின்னர் எழுதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
////புலவர் சா இராமாநுசம் சொன்னது…
வலை வந்து கருத்துரை வழங்
கினிர் நன்றி
கடுமையான முதுகுவலி
காரணமாக அமர்ந்து கருத்துரை
வழங்க இயலவில்லை மன்னிக்க!////
ஐயா வணக்கம், பெரிய வார்த்தைகள் வேண்டாம் தாங்கள் பெரியவர்கள்... தங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தாலும்.. தங்களின் உடல்நலம் பற்றி அறிந்து வருந்துகிறேன்... உடம்பை நன்குப் பேணி கொள்ளவும். உங்களின் உடல் சிரமம் தீர அந்த பரபிரமத்தை வேண்டிக் கொள்கிறேன். நன்றிகள் ஐயா!
Post a Comment