வேண்டும் மீண்டும் ஒரு ஸ்ரீராம அவதாரம்.
நாடு இல்லை, வீடு இல்லை,
நம்பிக்கைத்தர நல்லோர்
யாரேனும் இல்லை
வாழ்(ழ)வில்லை, வழியும் இல்லை
மரத்துப்போன மனத்திற்கு
மறதி என்னும் மருந்தும் இல்லை
கனத்த இதயம், கலங்கிய கண்கள்
சொல்ல வார்த்தையில்லா,
ஊமையாகிறேன்?....
பரமனுக்கும் அடுக்குமோ,
இந்த பயங்கரக் கொடுமை?
ஓ.... நீதி தேவனே! எங்கே போனாய்?
மானுடம் மறித்துப்போனது,
மனிதநேயம் மண்ணுக்குள் போனது.
அத்தனையும் போனபின்னும்,
ஏன்? இன்னும்
எங்கள் உயிர் மட்டும்
போகவில்லை?
எங்கள் கூக்குரல் தரும் அவலம்
உனக்கும் கேட்கவில்லையா? - இல்லை
எங்கள் மக்களோடு நீயும் வீழ்ந்தாயோ?
உன்னை அழைத்து ஒன்றும் ஆகா
படைத்தவன் எங்கே அவனையே
அழைக்கிறேன்
இறைவா!
பொறுத்தது போதும்
பொறையே வெடித்து சிதறுமுன்
பூமிக்கு இறங்கி வா!
இல்லையாயின்...
சத்தியம் ஜெயிக்க, சமதர்மம் நிலைக்க
மீண்டும் இங்கே...
ஸ்ரீராமன் அவதரிக்கட்டும்!!.
6 comments:
அருமை..
அற்புதம்..
//இல்லையாயின்...
சத்தியம் ஜெயிக்க, சமதர்மம் நிலைக்க
மீண்டும் இங்கே...
ஸ்ரீராமன் அவதரிக்கட்டும்!!.//
சத்தியமான உண்மை..
அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும்
ஆட்சி நடத்தும் இவ் அவனியிலே
ஆதரவற்றோரை காக்க
அந்த ஸ்ரீராமன் அவதரிக்கட்டும் !
அவனருள் வேண்டும்
ஆலாசியத்தோடு இணைந்து வேண்டும்..
அன்பன் சிவ. சி.மா.ஜா
/////சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
அருமை..
அற்புதம்../////
///அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும்
ஆட்சி நடத்தும் இவ் அவனியிலே
ஆதரவற்றோரை காக்க
அந்த ஸ்ரீராமன் அவதரிக்கட்டும் !/////
இறைவன் சக்தி கொடுத்தது சத்தியத்தை காக்க..
சாகடிக்க அல்ல... இதை அந்த சுயநலப் பிசாசுகள்
உணராது போது.. சத்திய சீலன் தான் வரவேண்டும்...
நான் பள்ளியில் படிக்கும் போது எனது நண்பர் ஒருவர்
எழுதியக் கவிதை இப்போது நினைவிற்கு வருகிறது...
"சிங்க& நாய்களோ செருக்காட்டம் ஆடுகின்றன
சிங்கத் தமிழனோ செந்தீயில் வேகின்றான்
பொங்கி எழுகிறார் எம் தமிழ் மக்கள் - ஆயினும்
பொங்கவில்லை கண் கலங்கவில்லை
நம் தலைமை" என்பதாக முடியும்...
இன்றும் என் மனதில் நிற்கிறது...
வருகைக்கு நன்றிகள் நண்பரே!
உங்கள் கன்னி முயற்சி வெற்றி பெற என் இறைவன் தாழ் பணிந்த வாழ்த்துக்கள்.
Krishnar
தங்களின் வருகைக்கும்
வாழுத்துக்களுக்கும் என்
மனமார்ந்த நன்றிகளும்
வணக்கங்களும் அண்ணா...
தமிழ் விரும்பி, இராம அவதாரம் மீண்டும் வேண்டுமென்கிறார். ஆம்! நிச்சயம் தேவை. காரணம், ஈரமில்லா நெஞ்சம் கொண்டோர், அறவழியில் நில்லா அரசியல் வாதிகள், ஊரைக் கொள்ளையிட்டு உடல் வளர்க்கும் உன்மத்தர் கூட்டம், பிறர் உழைத்து வாங்கிய சொத்துக்களை அபகரிக்கப் பறந்து கொண்டிருக்கும் கழுகுக் கூட்டம், பிறர் வாழப் பொறாத வல்லூறுகள் இப்படி யுகத்துக்கு யுகம் அரக்கர் கூட்டம் மாறுபட்டிருக்கிறது. இந்த காலத்து அரக்கர்களை அடையாளம் காண்பது சுலபம். இவர்களை அழிக்க மறுபடி ஓர் இராமாவதாரம் நிகழ வேண்டியது அவசியம். சொந்த நாட்டைவிட்டு, வீட்டை விட்டு, சுற்றம் நட்புகளை நீங்கி அன்னிய மண்ணில் வாசம் செய்யும் ஒரு நல்ல உள்ளத்தின் கதறலை நிச்சயம் செவியில் வாங்கிக் கொள்வார் இராமபிரான். வாழ்க தமிழ் விரும்பி!
/////Thanjavooraan சொன்னது
இவர்களை அழிக்க மறுபடி ஓர் இராமாவதாரம் நிகழ வேண்டியது அவசியம். சொந்த நாட்டைவிட்டு, வீட்டை விட்டு, சுற்றம் நட்புகளை நீங்கி அன்னிய மண்ணில் வாசம் செய்யும் ஒரு நல்ல உள்ளத்தின் கதறலை நிச்சயம் செவியில் வாங்கிக் கொள்வார் இராமபிரான். வாழ்க தமிழ் விரும்பி////
வணக்கம் ஐயா!
தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.
ஆமாம் அத்தனையும் விட்டு விட்டு வந்தாலும் சிந்தனை மட்டும் அங்கேயே இருக்கிறது...
இந்த நவீன அரக்கர்களை அழிக்க நிச்சயம் ஒரு வித்தியாசமான முறையில் இராமபிரான் வருவார்.
நன்றிகள் ஐயா!
Post a Comment