மஹாகவி பாரதி நமக்கு பல லட்சியங்களை விட்டுச்
சென்று தொண்ணூறு ஆண்டுகளைத் தாண்டிவிட்டது...
மகாகவியின் இந்த நினைவு நாளில் அவனுடைய உயரிய
சிந்தனைகளை இளம்பிஞ்சுகளின் மனதிலும் விதைக்க அரும் பாடுபடும் பெரியவர்களுக்கு
எனது வணக்கங்களும், வாழ்த்துக்களும் கூறி...
பாரதிக்கு திருவையாற்றில் இருதினங்களுக்கு
முன்பு எடுத்த விழாவின் சிலப் படங்களையும் பார்வைக்கு வைக்கின்றேன்!
இளங்குயில்கள் இரண்டு இனியகவிகள்பாட எந்தன்
இதயம் இனித்ததே இன்பத்தேனாய்!
புத்தம் புதுக்காலை புதியதோர் உலகம்படைக்கவே
புறப்பட்டோமென்றே பாரதியின் குழந்தைகளாக
பூத்துக் குலுங்குங்கிய அவ்வேளை - நெஞ்சிலொரு
சக்திப்பிறக்கிறது அதைக்கண்ட இவ்வேளை !
உடல் போருளாவி யனைத்தையும் உயர்
உலகிற்கே அளித்து உன்னத மானுடம்
உலகத்தோர் உயிர்க்கொடியில் பூக்கவே
உத்திகளை பாடிசென்றேயே பாரதி!
உனது நினைவுகள் மாத்திரம் அல்ல
உனது கனவுகள் தான் எங்கள்
உன்னத இலட்சியங்கள் அவைகளை
உன்னினைவுநாளில் புதுப்பித்து கொள்கிறோம்!
பாமரனையே நோக்கினாய் பாமரனோடு பழகினாய்
பாமரனுக்காக பாடினாய் பாமரனை எண்ணி வாடினாய்
பாமரனையும் சாடினாய் பாடியக்கவிதைகளை
சம்ர்பித்தாய்
பாமரனுக்கே; பாமரன்யானதை மறப்பேனோ?
எட்டயபுரத்திலே உதித்த சிகப்பு சூரியனே
எங்கள் இதயமெல்லாம் ஒளிபரப்பி - அறியாமை
என்னும் இருட்டைப்போக்கிய செந்தமிழ்கவிராஜனே!
என்றென்றுமுனை நன்றியோடு நினைக்கின்றோம்!
வாழ்க வளர்க
பாரதியின் புகழ்!
14 comments:
என்றும் அழியாத பாரதி இன்றும் நமோடு வாழ்கிறான்... பகிர்விற்கு நன்றி, விழாவில் பங்கெடுத்த குழந்தைகளுக்கும் விழ ஏற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
பாரதியின் புகழ்பாடும் அற்புதப் பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. மஹாகவியைப் போற்றும் கவிதைகளும், புகைப்படங்களும் மிக அருமை.
உனது நினைவுகள் மாத்திரம் அல்ல
உனது கனவுகள் தான் எங்கள்
உன்னத இலட்சியங்கள் அவைகளை
உன்னினைவுநாளில் புதுப்பித்து கொள்கிறோம்!
என்று நானும் உங்களோடு சேர்ந்து உறுதி கூறுகிறேன்.
///சீனு said...
என்றும் அழியாத பாரதி இன்றும் நமோடு வாழ்கிறான்... பகிர்விற்கு நன்றி, விழாவில் பங்கெடுத்த குழந்தைகளுக்கும் விழ ஏற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துக்கள்///
தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல.
///Parvathy Ramachandran said...
பாரதியின் புகழ்பாடும் அற்புதப் பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. மஹாகவியைப் போற்றும் கவிதைகளும், புகைப்படங்களும் மிக அருமை.///
உனது நினைவுகள் மாத்திரம் அல்ல
உனது கனவுகள் தான் எங்கள்
உன்னத இலட்சியங்கள் அவைகளை
உன்னினைவுநாளில் புதுப்பித்து கொள்கிறோம்!
///என்று நானும் உங்களோடு சேர்ந்து உறுதி கூறுகிறேன்.////
நன்றிகள் சகோதரி!
வணக்கம்
அன்னைத் தமிழே! உன்னடியை
அடியேன் தலைமேல் சூடுகிறேன்!
முன்னை முகிழ்த்த முதுமொழியே!
முல்லைக் காடே! முத்தமிழே!
பொன்னை நிகா்த்த இவ்வலையைப்
பொறுமை யாகப் படித்திட்டேன்!
உன்னை உடலாய் உயிராக
உடைய கவிஞன் உவந்தனனே!
////கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...
வணக்கம்
அன்னைத் தமிழே! உன்னடியை
அடியேன் தலைமேல் சூடுகிறேன்!
முன்னை முகிழ்த்த முதுமொழியே!
முல்லைக் காடே! முத்தமிழே!
பொன்னை நிகா்த்த இவ்வலையைப்
பொறுமை யாகப் படித்திட்டேன்!
உன்னை உடலாய் உயிராக
உடைய கவிஞன் உவந்தனனே!
4 October 2012 03:58 ////
அன்னைத் தமிழை போற்றியக் கவிவேந்தனே!
உம்மையும் உம்மோடு என்னையும் உயர்
அன்போடு பண்பையும் அணிசேர்த்தாற் போல்
மலரும் மனமுமாக்கிய உயிரினும் மேலான
அன்னைத் தமிழை அடியேனும் போற்றுகின்றேன்
அன்பாக உம்மோடு சேர்ந்தே!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் ஐயா!
பாரதியின் நினைவுகளை எடுத்துரைத்த சகோதரரே நன்றி பல பல
///Mohan P said...
பாரதியின் நினைவுகளை எடுத்துரைத்த சகோதரரே நன்றி பல பல
4 October 2012 11:௨௧///
தங்களின்வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் சகோதரரே!
Are you looking around for a superior Home maintenance services in the zone? Ourtechnicians.com to provide cost effective services.
home maintenance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/
facebook link
www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://otocekiciyolyardimara.blogspot.com/
Post a Comment