வெள்ளை உள்ளம் கொண்டவருக்கு
வேண்டும் வரம் தருபவளே!
எல்லையில்லா பிரபஞ்சம் தனை
தன் னகத்துள் கொண்டவளே!
கல்லா மில்லா உள்ள
மதைக் கொண்ட முனிவர்களின்
சொல்ல முதாய் திகழ்பவளே
இச்சா ஞான கிரியாசக்தியே!
வல்லமைத் தாரோயோ வாழ்வெலாம்
தெள்ளுத் தமிழ் கவிப்பாடி
சித்தம்நிறை தேவியுனை நித்தமும்
நின் பாதம் பணிந்திடவே!
நீயின்றி நானில்லை நினது
நினைவின்றி எனது யிரில்லை
கனவிலும் பிரிவதில்லை நினைக்
காணும்வரை நான் ஓய்வதில்லை...
ஐம்பொருளின் ஆக்கமானாய் -என்
ஐம்புலனின் தாக்கமும் ஆனாய்
ஐயத்திற்கு அப்பால் நிற்கும்
ஜெயத்திற்கு ஆதாரமும் ஆனாய்
பேரொளியில் பிறந்தாயோ! எந்தை
பேரொளியாய் பிறந்தாயே; எந்தாயே!
பேரொலி எழுப்பும் மின்னல்கொடியே
பேரொலி எந்தன் மனப்
பேய் தனைக் கொள்ளுமோ!
கூறடி!;
ஆனந்த பைரவி!
யாரடி?;
நானென்று எனக்கு;
பாரடி!;
நான் உந்தன்
காலடி!;
நின்றேக் கதறுகின்றேன்.
சேவடிதனை எந்தன் சிரமீதே
ஓரடி யாவது வைப்பாயோ!
பூவடிதனை போன்று கின்றேன்
கேளடித் தாயே யுனைக்
கெஞ்சிப் பணி கின்றேன்
கூறாயோ ஒருபதில் கூறாயோ
பாராயோ கடைக்கண்
கொண்டு
பாவம் யாவும் பொடிப் பொடியாக!
இரங்காயோ இறங்கி – என்
உயிருக்குள் உயிராய் உறங்கிக்கிடக்கும்
பேரொளி யினைத்
தீண்டாயோ!
எங்கெங்கும் காணினும் நீயென்றால்
என்னுள் ளிருப்பதும் நீயன்றோ!
என்னுள் இருப்பதும் நீயென்றால்
எப்படிக் காண்பேன் நானின்றே.
அல்லும் பகலும் அல்லல்படும்
பிள்ளை யான் வேண்டுவது
தில்லைக்கு எட்ட வில்லையோ!
கள்ளமில்லா எனதுள்ளம் கதறுவதும்
உன்செவிகளில் விழவும் இல்லையோ!
பிள்ளையான் பேயாய் உழல்கிறேன்
பேசாது இனியும் இருப்பாயோ!
சொல்லடி சிவசக்தி நிந்தன்
சோதனை இன்னும் நீளுமோ!
வேதனைத் தீர்ப்பாயோ இவ்வுடல்
வெந்தே தீயுமுன்னே எந்தன்மன
வேள்வி தனை ஏற்பாயோ
வேண்டியதை வேண்டி நிற்கின்றேன்
விரைந்தே வந்தெனைக் காப்பாயோ!
வேதமுனிகள் தொழும் தேவியே!
வேதங்களை பாதமாக கொண்டவளே!
வேதநாயகியே! வினைகள் தீர்ப்பாயே
ஊனில் உறைந்தவளே! எந்தன்
உயிரில் கலந்தவளே அருள்வாயே!
கொல்லடி எந்தன் மனம்தனை;
வில்லோடு வரும் மன்மதனை;
நில்லடா நீயங்கே என்றுநிறுத்தி;
வல்லனாய் வென்றிடவே; எனக்கிங்கே
வல்லமைத் தாரோயோ -பத்ர
காளீ! நீலீ!! திரிசூலீஇ!!!
அக்னியால் சுட்டெரிப்பாய் எந்தன்
ஆனவமதையே;
ஆவேசமுடனே
ஆணிவேரோடு பெயர்த் தெடுப்பாய்
என் அகந்தை தனையே
நித்தமும் நினைப்பணிகின்றேன்; நீயே
நிமலன்பாதம் சேர்ப்பாய் என்தாயே!
8 comments:
நவராத்திரி வருமுன்னே தேவிக்கு வரவேற்பு ..அழகிய அர்த்தமுள்ள கவிதை அன்னை நம்மைக்காப்பாள்!
////ஷைலஜா said...
நவராத்திரி வருமுன்னே தேவிக்கு வரவேற்பு ..அழகிய அர்த்தமுள்ள கவிதை அன்னை நம்மைக்காப்பாள்!
4 October 2012 16:04////
தங்களோடு அன்னை அவள் வலது தோளில் வீற்றிருக்கும் பச்சைக் கிளியும் அல்லவா வந்துள்ளது. ஸ்ரீ மீனாக்ஷி தாயாரே வந்ததாக எண்ணி மகிழ்கிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரியாரே!
ஆஹா!!!, என்ன அற்புதமான கவிதை. பக்தி மேலீட்டு அம்பிகையின் பொற்பாதம் தவிர வேறொன்றும் வேண்டா ஆன்மாவின் துடிப்பு அப்படியே வெளிப்படுகிறது. 'எத்தனை நாள் உனைப் பிரிந்து இந்த உலக மாயையில் இருப்பேன்?, என்னுடல் வேகும் முன் என் இதய வேள்வியை ஏற்று, அருள்புரிவாய்!!!' என்று இறைஞ்சும்,
//பிள்ளையான் பேயாய் உழல்கிறேன்
பேசாது இனியும் இருப்பாயோ!
சொல்லடி சிவசக்தி நிந்தன்
சோதனை இன்னும் நீளுமோ!
வேதனைத் தீர்ப்பாயோ இவ்வுடல்
வெந்தே தீயுமுன்னே எந்தன்மன
வேள்வி தனை ஏற்பாயோ
வேண்டியதை வேண்டி நிற்கின்றேன்
விரைந்தே வந்தெனைக் காப்பாயோ!//
வரிகள் கண்களில் நீர் அரும்பச் செய்தன. சகோதரரின் கவிதை, ஆன்மத் தேடலை அழகாக விவரிக்கிறது. மிக மிக அற்புதமான கவிதை. மிக்க நன்றி அண்ணா.
///Parvathy Ramachandran said...
ஆஹா!!!, என்ன அற்புதமான கவிதை. பக்தி மேலீட்டு அம்பிகையின் பொற்பாதம் தவிர வேறொன்றும் வேண்டா ஆன்மாவின் துடிப்பு அப்படியே வெளிப்படுகிறது. 'எத்தனை நாள் உனைப் பிரிந்து இந்த உலக மாயையில் இருப்பேன்?, என்னுடல் வேகும் முன் என் இதய வேள்வியை ஏற்று, அருள்புரிவாய்!!!' என்று இறைஞ்சும்,
//பிள்ளையான் பேயாய் உழல்கிறேன்
பேசாது இனியும் இருப்பாயோ!
சொல்லடி சிவசக்தி நிந்தன்
சோதனை இன்னும் நீளுமோ!
வேதனைத் தீர்ப்பாயோ இவ்வுடல்
வெந்தே தீயுமுன்னே எந்தன்மன
வேள்வி தனை ஏற்பாயோ
வேண்டியதை வேண்டி நிற்கின்றேன்
விரைந்தே வந்தெனைக் காப்பாயோ!//
வரிகள் கண்களில் நீர் அரும்பச் செய்தன. சகோதரரின் கவிதை, ஆன்மத் தேடலை அழகாக விவரிக்கிறது. மிக மிக அற்புதமான கவிதை. மிக்க நன்றி அண்ணா.
4 October 2012 16:37////
தங்களின் சந்தோசத்தைக் கண்டு நானும் அகம் மகிழ்கிறேன் சகோதரி!
அன்னையவளின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
அழுத கண்ணீரைத் துடைக்க நமக்கு அவளின்றி வேறு யாருண்டு!!!
தங்களின் நெகிழ்ச்சியான பின்னூட்டத்திற்கு நன்றிகள் சகோதரி!
Sir, kavithai migavum arumai... padikka padikka pakthi paravasam ponguthu... mikka nandri...
////Balamurugan Jaganathan said...
Sir, kavithai migavum arumai... padikka padikka pakthi paravasam ponguthu... mikka nandri...
4 October 2012 19:14////
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே!
தங்கள் மூலம் அன்னைத்தமிழில் இனைந்துள்ளேன் . தங்கள் கவிதையும் படித்து மகிழ்ந்தேன்
/////நடராஜன் said...
தங்கள் மூலம் அன்னைத்தமிழில் இனைந்துள்ளேன் . தங்கள் கவிதையும் படித்து மகிழ்ந்தேன்
8 October 2012 20:05///
மிக்க நன்றிகள் ஐயா!
Post a Comment