பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Monday, 1 August 2011

அச்சம் ஒழி அதுவே - என்றும் ஒச்சமிலா வாழ்விற்கு வழி




அச்சத்தின் வேரறுப்போம்.
அருமை யானதொரு வாழ்விற்கு
வீதி சமைப்போம்.
அச்சமென்னும் பேய் பிடித்தால்
மிச்சமுள்ள யாவும் போகும்… 
அத்தனையும் போனப் பின்னே 
நல் வாழ்வதே நரகமாகும்.

அச்சம் ஒழி அதுவே - என்றும் 
ஒச்சமிலா வாழ்விற்கு வழி…..

இப்போது, மகாகவி சுப்ரமணிய பாரதி பாடல் ஒன்றையும் அதில் உள்ள அற்புத பொருள் தரும் வரிகளையும் அதிலே என்னை சற்று ஆழ்த்திய வரியைப் பற்றி கீழேக் காண்போம்...

அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 

எதற்கும், எந்த சூழ்நிலையிலும், எப்பொழுதும் அச்சமில்லை என்றே பாடும் மகாகவி.......

நஞ்சை கொண்டுவந்து நமது வாயிலே நண்பரூட்டும் போதிலும் அச்சமில்லை என்பது தான் மிகவும் அற்புதம்.

அப்படி ஒரு துரோகத்தில் மூழ்கிவிடாதே... அதிர்ந்து, ஒடிந்து, விழுந்து விடாதே... 

இதுவும் நடக்குமோ என்று எண்ணவேண்டாம்ஆகா இப்படி நடக்கிறதே என்றும் கூட எண்ணவேண்டாம்.

இப்படியும் நடக்கலாம், இது தான் உலகம், அப்படி நடப்பினும் அதற்காக அஞ்சவேண்டாம்கெஞ்ச வேண்டாம், துஞ்ச வேண்டாம்வஞ்சினம் கொண்டே வீறுகொண்டு எழுந்தே!

அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!! என்றே முழங்கே...... என்றுப் பாடுகிறான்.

இந்தப் பாடல் நம்மில் பலருக்கும் பல சூழல்களில் தன்முனைப்பை ஊட்டியிருக்கும், நம்மில் விழுந்தோருக்கு வீரமூட்ட உதவியிருக்கும், ஏன்? நடு இரவில் தன்னந் தனியே நடந்து சென்ற போதும் கூட நம்மைத் அது தைரியப் படுத்தியிருக்கும். எந்த வகை அச்சத்திற்கும் அருமருந்தான இந்த பாரதியின் வைர வரிகளை என்றும் நெஞ்சில் நிறுத்தி அச்சத்தைப் போக்குவோம். இல்லை, அடியோடு வேரறுத்துக் கொன்று ஒழிப்போம். நல்ல வாழ்விற்கு வழிவகைக் காண்போம்.


நன்றி வணக்கம்,

தமிழ் விரும்பி.




2 comments:

Unknown said...

அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை
அன்னைத் தமிழுக்கு அச்சமில்லை

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

////புலவர் சா இராமாநுசம் சொன்னது…
அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை
அன்னைத் தமிழுக்கு அச்சமில்லை////

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றிகள் ஐயா!

Post a Comment