கற்றதும் - கேட்டதும்.
தமிழர் வரலாறு -
அரசியல் மற்றும் பண்பாட்டுக் காலப் பகுப்பு...
கி.மு. 14 பில்லியன்
~ பெரும் வெடிப்பில் உலகம் தோன்றியது.
கி.மு. 6 - 4 பில்லியன்
~ நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன்முதலில் தமிழ்
நாட்டில் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலைமூரியாக் கண்டத்தில் முதலில் மனித
இனம் தோன்றியது.
கி.மு. 470000
~இக்கால இந்தியாவின் தமிழ்நாடு, பஞ்சாப் இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360,000
~முதன் முதலில் சீனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள்
கொண்டுவந்தனர்.
கி.மு. 300,000
~ யோமோ மனிதர்கள் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100,000
~கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள
மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75,000
~கடைசிப் பனிக்காலம், உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50,000
~தமிழ் மொழியின் தோற்றம்.
மகாவித்வான் ரா.இராகவ ஐயங்கார் அவர்கள் எழுதிய
கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்னும் நூலில் இருந்து ஒருக் குறிப்பை எடுத்து தர
விரும்புகிறேன்.
தமிழ் மொழியைத் தந்து யார். இறையனார் ஆம், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்
குற்றமே என்று நக்கீரர் வாதிட காரணமாக நின்றாரே அந்த சிவபெருமான் தான்.
ஆமாம், நமது தமிழ் குறுமுனி உலகின் முதல் "குளோனிங்"
முறையில் பிறந்தக் குழந்தையான அகத்தியருக்கு சிவனார் அருந்தமிழை அருளியதாம்.
அதைக் கூறும் செய்யுளோடு மகாவித்வான் அவர்களின் விளக்கத்தையும் பார்ப்போம்.
"........ குறுமுனியாகிய
அகத்தியர் தமிழ்முனியெனச் சிறந்தோங்குதவாம். ஈண்டு "என்றுமுள தென்றமிழ்"
எனவுரைத்து வைத்துமேல்,
"உழக்குமறை
நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு
மதிக்கவி னினுமரபினாடி
நிழற்பொலி
கணிச்சி மணிநெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை
சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்."
என்பதனால் சிவபிரான் தந்தமிழ் என்பராலெனின் ஆண்டுச் சிவபிரான் தந்தது எனக் கூறியதும் தமிழிலக்கணத்தையேயாமென்க.
என்பதனால் சிவபிரான் தந்தமிழ் என்பராலெனின் ஆண்டுச் சிவபிரான் தந்தது எனக் கூறியதும் தமிழிலக்கணத்தையேயாமென்க.
சிவபிரான்
தந்த தமிழிலக்கணத்தையே அகத்தியர் உலகிற்குத் தந்தார் என்பதே இதன் கருத்தாம்.
சிவபிரான்
பாணினிக்குணர்த்தியதும் வடமொழி இலக்கணத்தையேயாகும்.
அதுபோல
இதனையும் கொள்க. நான்மறையினும் உலகவழக்கினும் கவின்பெற நூலினும் முறைப்பட
ஆராய்ந்து கடவுள் தந்த தமிழ் என்றதனாலும் அஃதிலக்கணமேயாவதறிக. நான்மறையினாராய்ந்தன
- மொழிக்கு முதற்காரணம் எழுத்தென்றலும்,.................."
வடமொழியை தேவபாஷை என்று வழங்குதல் காண்கிறோம், அதில் மாற்றுக் கருத்தில்லை. அதைப்
போன்று இறையனார் அருளிய இந்த அன்னைத் தமிழை மகா தேவ / தெய்வ பாசை என்பர் புலவர்
பெருமக்கள். ஆக அப்படி அழைப்பதுவும் சாலப் பொருந்தும். என்பது இதன் படி விளங்கும்
என்றாலும், அதனை
தமிழ் சான்றோர் வழி விளக்க
வேறு முறை துணிகிறேன்.
கி.மு. 50,000
- 35,000
~தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35,000
- 20, 000
~ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க, சிந்திய மொழிகள் தமிழில் இருந்து பிரிந்தக் காலம்.
கி.மு. 20,000
- 10,000
~ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தக் காலம். (இந்தோ, ஐரோப்பிய மொழிகள்)
கி.மு. 10,527
~முதல்
தமிழ்ச் சங்கத்தை பாண்டியமன்னன் காய்சினவழுதி தொற்றுவித்தக் காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப் பட்டன.
கி.மு. 10,527
-6100
~பாண்டியமன்னர்கள்; காய்சினவழுதி, வடிவம்பலம்ப
நின்ற நெடியோன், முந்நீர் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10,000
~கடைசி
பனிக்காலம் முற்றுப் பெற்றது. உலக மக்கள்த் தொகை 4 மில்லியன். குமரிக்கண்டம் தமிழர் நூறாயிரம் (100000)
கி.மு. 6087
~கடல்
கொந்தளிப்பில் குமரிக்கண்டம் மூழ்கியது.
மேலும் அடுத்தடுத்தப் பதிவுகளில்
இதன் தொடர்சியைக் காணலாம்…
எனக்குப் பிடித்த
குற்றாலக் குறவஞ்சிப் பாடல் ஒன்றைக் கீழேத் தந்து முடிக்கிறேன். குறவஞ்சியின்
ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர் அவர்கள் எழுதியது. தமிழ் விரும்பிகள்
அனைவருக்கும் இவரது இந்தக் கவிகள் படிக்கப் பிடிக்கும். படிப்போர் அனைவருக்கும் தேன் தமிழாய் இனிக்கும். சுவைத்துப் பாருங்கள்.
கொஞ்சம் சற்று உரக்க மெட்டோடு பாடிப் பாருங்கள்... அப்படிப் பாடும் போது கவிதையின்
செம்மை, தமிழின் இனிமையத் தரும் என்பது உண்மை.
வசந்தவல்லி
பந்தடித்தல்
விருத்தம் வித்தகர் திரிகூ டத்தில் வௌிவந்த வசந்தவல்லி தத்துறு விளையாட்டாலோ தடமுலைப் பிணைப்பினாலோ நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப் பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே. |
|
இராகம் - பைரவி, தாளம் - சாப்பு கண்ணிகள் செங்கையில் வண்டு கலின் கலினென்று செயஞ்செயம் என்றாட - இடை சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து குழைந்தாட - மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே. பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக் - குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டுமதன் சிலை வண்டோட - இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட - மலர்ப் பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே. சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப் - புனை பாடகமுஞ் சிறுபாதமு மங்கொரு பாவனை கொண்டாட - நய நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே - அணி ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்து பந்தாடினளே. இந்திரையோ யிவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ - மன முந்தியதோ விழிமுந்தியதோ கரமுந்தியதோ வெனவே - உயர் சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப் பைந்தொடி நாரி வசந்த வொய்யாரி பொற்பந்து கொண்டாடினளே.
சந்திரன் சூடிய குற்றாலீஸ்வரர்
|
வரிகளை படிப்பதற்கு தகுந்த மாதிரி பிரித்துத் தந்துள்ளேன். என்னது
பொருளா.. எளிய தமிழ் என்பதால் அதைத் தரவில்லை.
பாடி இன்புற்று இருப்பீர்கள் என்று
நம்புகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.
14 comments:
சுவையான பதிவு.
தமிழினம் முதலினம் என்று சொல்ல எனக்கும் ஆசைதான்.
குறவஞ்சி அல்வாவை விட மேல்.
////அப்பாதுரை சொன்னது…
சுவையான பதிவு.
தமிழினம் முதலினம் என்று சொல்ல எனக்கும் ஆசைதான்.
குறவஞ்சி அல்வாவை விட மேல்.
25 ஜூலை, 2011 6:49 pm /////
திருவாளர் அப்பாத்துரை அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் வருகைக்கும்... சறுக்கலைச் சுட்டிய மேன்மைக்கும் நன்றி.
இப்போது சரியாக எழுதி இருக்கிறேன் ஐயா!
தமிழினம் முதல் இனம் தான்...
எனக்கும் சொல்லிக் கொள்ள ஆசை தான்
என்று சொல்வதன் தயக்கம் யாது ஐயா?
மீண்டும் நன்றி...
நல்ல ஆழமான பயனுள்ள பதிவு..
வாழ்த்துக்கள்..
இந்த குற்றாலக் குறவஞ்சி பாடல் படித்த நினைவு இருக்கிறது. பதிவில் உள்ள தகவல்களை முதன்முறை அறிகிறேன்.
///vidivelli சொன்னது…
நல்ல ஆழமான பயனுள்ள பதிவு..
வாழ்த்துக்கள்..///
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே!
///Uma சொன்னது…
இந்த குற்றாலக் குறவஞ்சி பாடல் படித்த நினைவு இருக்கிறது. பதிவில் உள்ள தகவல்களை முதன்முறை அறிகிறேன்.
26 ஜூலை, 2011 4:46 pm///
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் உமா.
நல்லது..நீங்கள் தமிழ்விரும்பி என்று பெயர்கொண்ட காரணத்தை இனி யாரும் கேட்காமலிருக்கவென்றே ஒரு தனிப் பதிவா?
என்னை மாதிரி நுனிப்புல் மேயும் தமிழர்களுக்கு நல்ல தீனிதான்..நன்றி..
////minorwall சொன்னது…
நல்லது..நீங்கள் தமிழ்விரும்பி என்று பெயர்கொண்ட காரணத்தை இனி யாரும் கேட்காமலிருக்கவென்றே ஒரு தனிப் பதிவா?
என்னை மாதிரி நுனிப்புல் மேயும் தமிழர்களுக்கு நல்ல தீனிதான்..நன்றி../////
ஹா...ஹா... ஹா...
ஓ... அப்படியும் எடுத்துக்கலாம் அல்ல.
நன்றி நண்பரே!
நல்ல பதிவு...முதலில் தோன்றியது தமிழா சமஸ்கிருதமா?
@minorwall
என்ன சார் என்னையும் வள்ளுவரையும் இப்படி ஒட்டிடிங்க? :(.......... :)
///R.Puratchimani சொன்னது…
நல்ல பதிவு...முதலில் தோன்றியது தமிழா சமஸ்கிருதமா?////
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி"
//////R.Puratchimani சொன்னது…
@minorwall
என்ன சார் என்னையும் வள்ளுவரையும் இப்படி ஒட்டிடிங்க? :(.......... :)/////////////
ச்சும்மா..ஒரு கலகலப்புக்குத்தான்..தமிழ்விரும்பி ரொம்ப சீரியசான ரூட்டுலே போயிட்டுருக்காரே..
கொஞ்சம் கூல் பண்ணுவோமேன்னுதான்..
மைனர்வாள் நானும் நீங்க சொன்னதிற்குப் பிறகு வள்ளுவர் படத்தை அந்த பதிவில் சேர்த்துவிடலாம் என்று முயற்சி செய்தால் முடியவே மாட்டீங்கிது. பிளாகர் மக்கர் பன்றார். என்ன நான் கண்டு பிடிச்சிட்டேனா? அதைத் தானே சொல்ல வந்தீங்க... ஹி..ஹி..ஹி...
pin point ட்டா மேட்டரை கவர் பண்ணிட்டீங்கோ..எல்லோரு படத்தையும் போட்டுட்டு தலைவரு படத்தை போடக் காணோமேன்னு பார்த்தேன்..அதான்..
Post a Comment