"வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு "
உலகப் பொதுமறை என்னும் திருக்குறள் உலகில்
இதுவரை "நாளிதுவரை நரிக்குறவரின் மொழியான வக்கிரபோலி முதலியவற்றைச் சேர்த்து 34 மொழிகளில் 130 மொழிபெயர்ப்புகள் வந்துள்ளனவாம்.
ஆங்கிலத்தில் மட்டும் ஏறத்தாழ நாற்பதுக்கு
மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் தோன்றியுள்ளனவாம்.
திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு 1730 ஆம் ஆண்டு இலத்தீன் மொழியில் வீரமாமுனிவர் தான் முதன்
முதலில் செய்து இருக்கிறார்.
(தனது கல்லறையில் இங்கு ஒருத் தமிழ் மாணவன்
உறங்குகிறான் என்று வேண்டிக் கொண்ட மாபெரும் தமிழறிஞர், தேம்பாவணி தந்த இலக்கண மேதை; தன்னை தமிழ் மாணவன் என்றேக் கூறிக்
கொண்டிருக்கிறார் பாரும்.)
போலந்து மொழியில் திருக்குறள் வெளியிடப்பட்ட
போது வெறும் ஏழு நாட்களுக்குள் ஒரு நூறாயிரம் படிகள் விற்பனையாகி இருக்கிறது
என்பது வரலாறு.
(அங்கே
படிப்பாளிகள்; அறிவுத் தேடுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
நாம் தான் வக்கிர புத்தியை கூர் செய்யும் சிறிய, பெரிய திரையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு
வீட்டில் உள்ளவர்களோடு இல்லை, வீட்டுக்கு
வந்தவர்களிடம் கூட சரியாக பேசாமல் இருக்கிறோமே)
இனம், மதம், நாடு, மக்கள் என்று எந்த
பேதமும் இல்லாமல், மொத்தத்தில் இந்த மானுடத்திற்கான ஒரு பொது மறை, அதனாலே அது உலகப் பொதுமறை எனப் பட்டது.
மகாகவிக் கூறியது போல்.
'வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து' என்பதைப் பற்றிய சிந்தனை தான் இப்போது…..
திருவள்ளுவர்! உலக அரங்கிலே தமிழ்மொழியையும், தமிழர்களையும், தமிழகத்தையும்
தலைநிமிர வைத்த ஒரு ஈடு இணையில்லாத பெயர். அதனாலே அவன் தெய்வப் புலவன் ஆகிறான்.
"யாமறிந்தப் புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல்
இப்பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"
என்றான் பாரதி.
அப்படிப் பெருமைப் படக் கூடிய நமது
திருவள்ளுவர் ரஷ்ய ஞானி டால்ஸ்டாயையும், இலக்கியச் சோலை
கவிப் பேரரசு நமது ரவீந்திர நாத் தாகூரையும், நமது அண்ணல்
மகாத்மா காந்தியடிகளையும், ஆல்பர்ட் ஸ்வைட்சரையும் கவர்ந்தார் என்பது தான்
சிறப்பு.
அதனாலே, அவர் வான்புகழ் கொண்ட புலவன் அப்படி ஒருவன்
இனி எங்கேயும் காண்பதரிது என்பதே உண்மை.
டால்ஸ்டாயும் திருக்குறளும்:
1908
ஆம் ஆண்டில் "Free Hindustan" என்ற ஏட்டின்
ஆசிரியர் டால்ஸ்டாயுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதற்கு டால்ஸ்டாயும் தனது பதிலை ரஷ்ய மொழியிலே
எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதம் சில மாதங்கள் கழித்து நமது
மகாத்மாவின் கையில் கிடைத்து இருக்கிறது. அவர் மகாத்மா, 1909 ஆம் ஆண்டு குஜராத்தி மொழியிலே மொழி பெயர்த்து
வெளியிட்டாராம்.
அந்தக் கடிதத்திலே டால்ஸ்டாய் திருக்குறளை 'இந்துக் குறள்' என்றுக்
குறிப்பிட்டு 'இன்னா செய்யாமை' என்னும்
அதிகாரத்தில் இருந்து கீழ்க் காணும் ஆறுக் குறள்களை மேற்கோள் காட்டி
இருந்தாராம்.
சிறப்பீனும் செல்வம் பெறினும்
பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள். |
|
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்
மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். |
|
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத
செய்தபின்
உய்யா விழுமந் தரும். |
|
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். |
|
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. |
பிறர்க்கின்னா முற்பகல்
செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.
பிற்பகல் தாமே வரும்.
அடுத்ததாக...
கிரெம்ளின் மாளிகையில் திருக்குறள்:
ரஷ்யாவில் 'கிரெம்ளின் மாளிகை' யில் உள்ள ஒரு நிலவரை. அது அணு குண்டாலும் அழியாத "டங்ஸ்டன்' என்னும் உலோகத்தால் செய்யப் பட்டதாம். மூற்றாம்
உலகப் போரே மூண்டாலும், அதனால் மனிதர்கள் பலகோடி அழிந்தாலும் மிஞ்சி
இருக்கும் மானிடனுக்காவது பயன் படவேண்டும் என்ற உயரிய எச்சரிக்கை நோக்கில், அங்கே வைக்கப் பட்டுள்ளப் அறிய நூல்களுள் நமது
திருக்குறளும் ஒன்று என்றால், வேறு சான்று
வேண்டுமோ! அதன் பெருமையை உரைக்க...
ஆல்பர்ட் ஸ்வைட்சரும் திருக்குறளும்:
இவர் ஏசுநாதரின் மறுபிறவி என்று வாழ்ந்த
ஜெர்மானியத் தத்துவ ஞானியான இந்த ஆல்பர்ட் பலக் குறட்பாக்களை மனப்பாடமே செய்து இருந்தாராம்.
மேலும் "சீரிய கோட்பாடுகளின் தொகுப்பான திருக்குறளில்
காணப் படும் அத்துணை உயர்ந்த ஞானம் உலக இலக்கியத்தில் வேறு எந்த நூலிலும்
இல்லை" என்றும் கூறிச் சென்றிருக்கிறார்.
(ம்ம்ம்... என்ன
செய்வது, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நாம் தான்
ஊர் முழுக்க நெய்க்கு அலைகிறோமே..... இன்னும் படித்த பலரும் சும்மா, எழுதுவதற்கும், பேசுவதற்கும், கைத் தட்டல்கள் வாங்குவதற்கும் மாத்திரமே, இந்தக் குறள்களை பயன் படுத்துகிறோம் என்பதே
உண்மையும் கூட)
தாகூரும் வள்ளுவரும்:
"பாரத நாடு முழுவதற்கும், ஏன்? உலகம் முழுவதற்குமே மகான் வள்ளுவரின் கோட்பாடுப்
பொருந்தும்" என்றுப் பாராட்டி இருக்கிறார்.
நமது நோபல் பரிசு பெற்ற முதல் இலக்கியவாதி
தாகூர் அவர்கள். மேலும் மயிலையில் இருக்கும் தெய்வப் புலவரின் கோவிலுக்கு வந்து
வணங்கி விட்டும் சென்றிருக்கிறாராம்.
திருவள்ளுவரைப் பற்றி நமது மகாத்மா:
"யான் தமிழ் கற்க விரும்பியதற்கு காரணம், வள்ளுவரின் வாய் மொழியை அவருடைய தாய் மொழி மூலம்
படித்தறி வதற்கேயாம்" என்றும்,
"நம்மில் சிலருக்கே திருவள்ளுவரின் பெயர்
தெரியும். அந்த மாமுனிவரின் பெயரை வட இந்தியர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
திருக்குறள் அறிவுக் கருவூலத்தை போன்று, அவரைப் போன்று
வழங்கியவர்கள் வேறு எவருமில்லை" என்றும் வியந்தும்.
தன்னை தமிழ் படிக்கச் செய்ததே திருவள்ளுவர்
தான் என்று கூறியிருப்பது எத்தனைப் பெருமைக்குரிய விஷயம்.
அதோடு வள்ளுவரின் வாய் மொழியை அவர் வழியே அறிய
வேண்டும், வேறொருவர் மொழி பெயர்க்க நேரும் போது அதன்
உயரியத் தன்மையை முழுமையாக உணர்ந்து உய்ய முடியாமல் போய்
விடுமோ என்றும் எண்ணி இருக்கிறார் மகாத்மா.
இப்பேர்ப் பட்ட, ஒப்பிலா உலகம் போற்றும் உலகப் பொதுமறையை
நாமும் தொடந்து படிப்போம்.
எப்படி?....
"கற்க கசடற கற்பவைக் கற்றபின்
நிற்க அதற்கு தக"
என்னும் ஐயனின் வாக்குபடியே. மேலும் நமது
குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.
இதுவே நமது வேதம். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய
வேதம் என்ற சிந்தனையோடு விடை பெறுகிறேன்.
மீண்டும் சிந்திப்போம்.
நன்றி வணக்கம்.
அன்புடன்,
தமிழ் விரும்பி.
24 comments:
வணக்கம் உங்களின் இடுகை இப்போதுதான் பார்த்தேன் உளம் கனிந்த பாராட்டுகள் வள்ளுவம் இன்று உலகம் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு அதன் சிறப்புகளை கண்டுவருகிறது நல்ல பதிவு பாராட்டுகள் நன்றி ......
தமிழ் விரும்பி ஐயா நீர்
தமிழ் மறை விரும்பி ஐயா நீர்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
////மாலதி சொன்னது…
வணக்கம் உங்களின் இடுகை இப்போதுதான் பார்த்தேன் உளம் கனிந்த பாராட்டுகள் வள்ளுவம் இன்று உலகம் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு அதன் சிறப்புகளை கண்டுவருகிறது நல்ல பதிவு பாராட்டுகள் நன்றி ......////
அன்புடன் வணக்கம்,
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் சகோதிரி.
///புலவர் சா இராமாநுசம் சொன்னது…
தமிழ் விரும்பி ஐயா நீர்
தமிழ் மறை விரும்பி ஐயா நீர்
நன்றி
புலவர் சா இராமாநுசம்////
தங்களின் வருகைக்கும்
பாராட்டிற்கும் நன்றிகள் ஐயா!
(ம்ம்ம்... என்ன செய்வது, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நாம் தான் ஊர் முழுக்க நெய்க்கு அலைகிறோமே..... இன்னும் படித்த பலரும் சும்மா, எழுதுவதற்கும், பேசுவதற்கும், கைத் தட்டல்கள் வாங்குவதற்கும் மாத்திரமே, இந்தக் குறள்களை பயன் படுத்துகிறோம் என்பதே உண்மையும் கூட)
ஹ ஹ ஹா
ஹி ஹி ஹீ
அருமை அருமை நண்பரே..
திருக்குறளுக்குப் பெருமை சேர்த்தோர் பட்டியலில் தாங்களும் இடம்பிடித்து விட்டீர்கள்..
பல அரிய தகவல்களை இங்கு தந்திருக்கிறீர்கள்..
தமிழ் கூறும நல்லுலகமே தங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது..
வார்த்தைகளால் நன்றி சொல்லமுடியவில்லை..
தமிழ்நாட்டிற்குள் இருந்திருந்தால் இந்த ஒரு
பதிவிற்காகவே தங்களை தேடி நாடி வந்திருப்பேன்..
நன்றிகள் பல...
கிரெம்ளின் மாளிகையில் திருக்குறள்:
அருமை,, அருமை,, அருமை,,
அன்புடன் வணக்கம் ஆலாசியம்,
பின்வரும் வலைத்தளத்தை பார்வையிட வேண்டுகிறேன்..
நன்றி.
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/06/blog-post_20.html
அன்புடன் வணக்கம்,
தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் தோழரே!.
தாங்கள் சொல்லிய பதிவைப் பார்த்தேன்.
புரட்சியார் இப்படி தான் புரட்சி செய்வார்... அதை இப்போது விட்டு விடுவோம்.
கி.மு. 14 பில்லியன்
~ பெரும் வெடிப்பில் உலகம் தோன்றியது.
கி.மு. 6 - 4 பில்லியன்
~ நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன்முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலைமூரியாக் கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
இது தான் ஆராய்ச்சியாளர்கள் / ஆய்வாளர்கள் சொல்வது... ஆக அப்படி இருக்க மொழி எங்கிருந்து தோன்றி இருக்க வேண்டும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை..
உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூலம் தமிழ் தான் என்று ஆய்ந்து நிரூபித்து இருப்பது தற்சமய வரலாறு.
திருவள்ளுவரைப் பற்றிய கருத்திற்கு... அவர் எந்த மதம் என்று ஆராய்ந்தாலும் பொருந்தும் அதனாலே அவர் எழுதிய குரல்கள் யாவும் உலகப் பொதுமறையாகிறது... நதி, ரிஷி இதனின் பயனை உய்யா மூலம் தேடுவது சிலருக்கு விருப்பமாக இருக்கலாம்.. அது அவர்களுக்கு அவசியமாக இருக்குமோ? தெரியவில்லை.
திருவள்ளுவர் ஒரு கிருஸ்தவரா என்று கூட ஆராய்ந்து சிலர் கருத்து தந்துள்ளார்கள். எது வானாலும் தூங்குவது போல் நடிப்பவர்களை நாம் எழுப்பவே முடியாது என்பதே எனது கருத்தும். கம்பர் வைணவர் என்றால் அவர் இராமாயணத்திலே சிவனை பெருமைப் படுத்தாமல் விட்டாரா.
திருமணக் கோலத்திலே நிற்கும் மாப்பிள்ளை; பெற்றவர்களுக்கு பிள்ளை, கட்டிக்கிட்டவளுக்கு கணவன், உடன் பிறந்தவர்களுக்கு சகோதரன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருந்தும் குறிப்பது என்னவோ அந்த ஒருவரையே... விட்டு விடுவோம் புயாதவர்களுக்கு என்றுமே புரியாது தான் அந்த பரம் பொருள் புரிய வைத்தால் தான். இருந்தும் இன்றைய தினமலர் செய்தியைக் கூறி முடிக்கிறேன்...
"இந்த தேசத்தின் அன்னை போன்ற கலாசாரத்தை, இந்த கலாசாரத்தின் ஆணி வேராக இருக்கக் கூடிய மதத்தை, இந்த மதத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிற ஆன்ம ஞானத்தை, நாம் உணர வேண்டும். இந்து தர்மம் என்பது பெரிய மரம்; பல கிளைகளும், விழுதுகளும் விட்டு வளர்ந்து நிற்கிற இதன் பூக்களில், பல்வேறு வண்ணங்கள் இருக்கலாம்; கிளைகள் பலவாய் இருக்கலாம். ஆனால், வேதம் என்னும் ஒற்றை வேரால் உயிர்த்திருக்கிறது, இந்த மரம். இதைப் பாதுகாப்பது நம்முடைய கடமை." சுவாமி தயானந்த சரஸ்வதி. நன்றி தினமலர்.
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் நண்பரே!
உங்கள் எல்லா பதிவுகளையும் படித்தேன் (ரொம்ப தாமதமா வந்திருக்கேனோ???). வேலைப்பளுதான் காரணம், இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன் (!!!). உங்க மத்த பதிவுகளைவிட இதில் எழுத்துநடை எளிமையாக இருக்கிறது. கிரெம்ளின் மாளிகை பற்றி முதல்முறையாக அறிகிறேன் (எவ்ளோ பொது அறிவு!!!) - உமா
கூகுளே அக்கௌன்ட் உபயோகித்து கமெண்ட் போடலாம்னா நிறைய தடவை முயற்சி செய்தும் முடியல, அதான் - உமா
@உமா...
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் உமா.
அருமையான பதிவு நண்பரே, இதை மொழி பெயர்த்து ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டுகிறேன்.
இதை மட்டுமே நான் பின்னூட்டமாக இட நினைத்தேன். பிறகு அடியார் ஜானகிராமனின் பின்னூட்டத்தை பார்த்துதான் தாங்கள் ஆலாசியம் என்பதை தெரிந்து கொண்டேன்.
எனது பதிவை தங்கள் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு அடியாருக்கு நன்றி.
//புரட்சியார் இப்படி தான் புரட்சி செய்வார்... அதை இப்போது விட்டு விடுவோம்.//
இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறதே. :)
அந்த பதிவில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினால் என் கருத்தையும் பதிவையும் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
//உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூலம் தமிழ் தான் என்று ஆய்ந்து நிரூபித்து இருப்பது தற்சமய வரலாறு.//
இது இன்னும் நிறைய பேருக்கு தெரியாது அன்பரே. செந்தமிழ் மாநாட்டில் கூட இதைப்பற்றி தெரிவித்தார்களா என தெரியவில்லை. இந்த செய்தி உண்மை காட்டுத்தீ போல் பரவ வேண்டாமா..
நன்றி தமிழ் விரும்பியே....
புரட்சியாருக்கு வணக்கம்,
தங்கள் வரவு நல்வரவாகுக...
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள்...
ஆங்கிலத்திலா! தமிழ் தெரியாதவர்கள் படிப்பதற்காகவா! அப்படி யாரும் நம் வலைப் பதிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. எதனால் இப்படி கூறினீர்கள் என்றுத் தெரியவில்லை. கட்டுரையின் கடைசியில் தமிழனுக்கு அறைகூவல் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய நிலையும் வந்துவிட்டதா!!!
//புரட்சியார் இப்படி தான் புரட்சி செய்வார்... அதை இப்போது விட்டு விடுவோம்.//
இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறதே. :)
அந்த பதிவில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினால் என் கருத்தையும் பதிவையும் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
அதை இப்போது விட்டுவிடுவோம் என்பது சாதாரணமாக சொல்ல வந்ததே திருவாளர் ஜானகி ராமன் அவர்கள் எண்ணியிருந்தக் கருத்தை பற்றி பேசுவோம் என்பதாக கருதப் பட்டு எழுதியது.... உள்குத்தெல்லாம் இல்லை நண்பரே... உலகில் முதலில் தோன்றிய மனிதன்; அவனது எழுத்து, சொல் பொருள் (நிறைவு பெற்ற அல்லது வளர்ந்த மொழி = எழுத்து, சொல், பொருள்......) இவைகள் மற்ற மொழிகளின் தொடக்கத்திற்கு மூலமாக இருக்கும், இருக்கிறது... அப்படி இருக்க "அகரம்" தான் அனைத்து மொழிகளிலும் தமிழைப் போல் முதலில் வருகிறது என்று சொல்லி தொடங்கி யுள்ளீர்கள்... பாராட்டுக்கள்.
திருவாளர் ஜானகி ராமன் அவர்கள் கூறியது போல், மொழி என்பது மொத்த உருவம், எண்ணத்தைப் பகிர்ந்துக் கொள்ள உதவும் கருவி... அந்தக் கருத்துக்களை வேறு ஒரு இடத்தில் கால காலமாக இருக்க வைக்க, சந்ததிக்கு கிடைக்க பல நல்லக் கருத்துகளை பதிந்து வைக்க. எழுத்து உபயோகப் படுகிறது...
ஆக, எழுத்து இல்லாமல் மொழி இருக்கலாம் எனத் தோன்றலாம். இல்லையா? அது தான் இல்லை.. எழுத்து வடிவம் பெறாமல் இருந்தது.... வடிவம் இல்லாமல் இருப்பதால், எழுத்து இருந்திருக்க இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா.. (அதுக் கடவுளைப் போல) அது ஒலி வடிவாக இருந்திருக்கிறது.
@ புரட்சியாரின் பின்னூட்டத்திற்கான பதிலின் தொடர்ச்சி.....
மனிதன் முதலில் தனது எண்ணக் கருத்தைப் பகிர்ந்துக் கொள்ள முயற்சித்த போது... அவன் ஒலி வடிவத்தில் இருத்த எழுத்துக்களை சேர்த்து ஒரு சொல்லை உருவாக்கி அது ஒரு பொருளை அடுத்தவனுக்கு உணர்த்தி இருக்கும். இப்படியாக வளர்ந்து அது பொதுத் தன்மை அடைந்து நாம் இருவரும் பேசிக் கொண்டும் இருக்கிறோம். ஆக எழுத்து ======> மொழிக்கும் உள்ளத் தொலைவு இப்போது தங்களுக்கு புரியும் படி நான் சொல்லியிருப்பேன் என்று நான் நபுகிறேன். நீங்கள் தொடர்ந்து எழுங்கள் நண்பரே....
நன்றி.
அருமை, அருமையாக இருந்தது திருக்குறள் பற்றிய தகவல்கள். உலகமே போற்றும் திருக்குறளின் அருமையை நம் மக்கள் உணர்ந்து பின்பற்றாமை கண்டு மனம் வருந்துகிறது. நம் மக்களுக்கு ஃபாரின் சரக்கு மேல் தான் மோகம் அதிகம் போலும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சும்மாவா சொன்னார்கள்.
///MANI சொன்னது…
அருமை, அருமையாக இருந்தது திருக்குறள் பற்றிய தகவல்கள். உலகமே போற்றும் திருக்குறளின் அருமையை நம் மக்கள் உணர்ந்து பின்பற்றாமை கண்டு மனம் வருந்துகிறது. நம் மக்களுக்கு ஃபாரின் சரக்கு மேல் தான் மோகம் அதிகம் போலும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சும்மாவா சொன்னார்கள்.
22 ஜூலை, 2011 5:33 pm///
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
உண்மை தான் நம் மக்கள் என்று இல்லை ஆசிய மக்களுக்கே ஐரோப்பியர்கள் என்றால் அப்படி ஒரு நெளிவு அதை இங்கும் காண முடிகிறது நண்பரே!
"என்று தணியுமோ இந்த அன்னியமோகம்" என்ற மகாகவிகளின் வார்த்தைகள் தான் நினைவில் வருகிறது. நன்றிகள் நண்பரே!
தமிழ்விரும்பியின் பதிவைப்படித்தேன்..மிக கவனத்துடன் படிக்க வேண்டியிருந்தது..
ஆல்பர்ட் ஸ்வைட்சர், லியோ டால்ஸ்டாய் என்று பல தெரிந்த பெயர்கள் இடம் பெற்றிருந்தன..
அங்கங்கே வள்ளுவர் என்ற பெயரும் கூட இடம்பெற்றிருந்தது..
ஆமா..அவுரு யாரு?
///minorwall சொன்னது…
தமிழ்விரும்பியின் பதிவைப்படித்தேன்..மிக கவனத்துடன் படிக்க வேண்டியிருந்தது..
ஆல்பர்ட் ஸ்வைட்சர், லியோ டால்ஸ்டாய் என்று பல தெரிந்த பெயர்கள் இடம் பெற்றிருந்தன..
அங்கங்கே வள்ளுவர் என்ற பெயரும் கூட இடம்பெற்றிருந்தது..
ஆமா..அவுரு யாரு?
22 ஜூலை, 2011 9:48 pm///
வாருங்கள் மைனர்வாள்....
தங்களின் வரவு நல்வரவாகுக...
தமிழ் உலகம் போரபோக்கப் பார்த்தா...
இப்படித்தான் கேட்க வேண்டி
வரும் போல இருக்கு போங்க...
நன்றிகள்...
வணக்கம் தமிழ்விரும்பி அவர்களே!
" வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு "
என்று பாட்டுக்கொரு புலவனால் பாடப்பட்ட பின் நம் பெருமையை உணர்ந்துகொண்டோம்.
உம்மால் மீண்டும் பெருமை அடைகிறோம்.
வள்ளுவம் பின்பற்ற வேண்டிய ஒன்று என்பதை எல்லோரும் உணர்வோம்.செயல்படுத்துவோம்.
நன்றி.
///சிவ. வே. கங்காதரன் சொன்னது…
வணக்கம் தமிழ்விரும்பி அவர்களே!
" வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு "
என்று பாட்டுக்கொரு புலவனால் பாடப்பட்ட பின் நம் பெருமையை உணர்ந்துகொண்டோம்.
உம்மால் மீண்டும் பெருமை அடைகிறோம்.
வள்ளுவம் பின்பற்ற வேண்டிய ஒன்று என்பதை எல்லோரும் உணர்வோம்.செயல்படுத்துவோம்.
நன்றி.
23 ஜூலை, 2011 1:30 pm///
அன்புடன் வணக்கம் நண்பர் சிவ.வே. கங்காதரன் அவர்களே!
தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
@தமிழ் விரும்பி
தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி
@minorwall
ஹலோ சார் இப்படி இருக்கீங்க...நலமா? ....என்ன தெரியுதா...
//அங்கங்கே வள்ளுவர் என்ற பெயரும் கூட இடம்பெற்றிருந்தது..
ஆமா..அவுரு யாரு?//
என்ன இப்படி காமெடி பண்றீங்க :)
////R.Puratchimani சொன்னது…
@தமிழ் விரும்பி
தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி
@minorwall
ஹலோ சார் இப்படி இருக்கீங்க...நலமா? ....என்ன தெரியுதா.../////
புரட்சி சார்..உங்களை மறக்க முடியுமா? என்ன இப்புடி கேட்டுபுட்டீங்க?
நாம என்ன அந்த மாதிரி லேசுலே மறந்துபோற அளவுலேயா பழகிட்டிருந்தோம்?
ச்சே..ச்சே..மனசு ரொம்ப வலிக்குது போங்க..
/////////////R.Puratchimani சொன்னது…
//அங்கங்கே வள்ளுவர் என்ற பெயரும் கூட இடம்பெற்றிருந்தது..
ஆமா..அவுரு யாரு?//
என்ன இப்படி காமெடி பண்றீங்க :) ///////////
கடைசி வரைக்கும் அவுரு யாருன்னு தமிழ்விரும்பியும் சொல்லலை..நீங்களும் சொல்லலை..மேலே முதல் போட்டொவுலே கண்ணாடி போட்டுட்டு பொக்கைவாய் சிரிப்போட இருக்காரே அவுரா?
தாடி வெச்சிருப்பாருன்னு கேள்விப்பட்ருக்கேன்..
இதுலே ரெண்டு பேரு போட்டொவுலே தாடி இருக்குது..அதுலே யாராவுது ஒருத்தரா இருக்குமோ?ஒண்ணுமே புரியலை போங்க..
Post a Comment