வேண்டும் மீண்டும் ஒரு ஸ்ரீராம அவதாரம்.
நாடு இல்லை, வீடு இல்லை,
நம்பிக்கைத்தர நல்லோர்
யாரேனும் இல்லை
வாழ்(ழ)வில்லை, வழியும் இல்லை
மரத்துப்போன மனத்திற்கு
மறதி என்னும் மருந்தும் இல்லை
கனத்த இதயம், கலங்கிய கண்கள்
சொல்ல வார்த்தையில்லா,
ஊமையாகிறேன்?....
பரமனுக்கும் அடுக்குமோ,
இந்த பயங்கரக் கொடுமை?
ஓ.... நீதி தேவனே! எங்கே போனாய்?
மானுடம் மறித்துப்போனது,
மனிதநேயம் மண்ணுக்குள் போனது.
அத்தனையும் போனபின்னும்,
ஏன்? இன்னும்
எங்கள் உயிர் மட்டும்
போகவில்லை?
எங்கள் கூக்குரல் தரும் அவலம்
உனக்கும் கேட்கவில்லையா? - இல்லை
எங்கள் மக்களோடு நீயும் வீழ்ந்தாயோ?
உன்னை அழைத்து ஒன்றும் ஆகா
படைத்தவன் எங்கே அவனையே
அழைக்கிறேன்
இறைவா!
பொறுத்தது போதும்
பொறையே வெடித்து சிதறுமுன்
பூமிக்கு இறங்கி வா!
இல்லையாயின்...
சத்தியம் ஜெயிக்க, சமதர்மம் நிலைக்க
மீண்டும் இங்கே...
ஸ்ரீராமன் அவதரிக்கட்டும்!!.