கயவர்கள் இவர்கள் வேகமாக
விரைந்து பரவிய
காட்டாறு போன்றவர்கள்
உலகை நாசம் செய்தது
மட்டுமல்லாமல் தன்னையே
நாசம் செய்து கொண்ட
ஆலகால விஷம் கொண்ட
கரு நாகங்கள்...
அவச்சுழிக் கொண்டே
அவனியில் முளைத்த
அருவருத்த முட்கள்
அவத்தையே அவதானித்து
அவதி செய்வதே மூச்சாய்...
அவ நெறிக் கொண்டே
அவலம் விளைவித்த
அவமான சின்னங்கள் இவர்கள்
அவாவால் அசிங்ககப் பட்டே
அவழியில் ஆழ்ந்து
அநாதை நாய்களாய் அழிந்தவர்கள்
அதர்மத்தை விளக்க
வரலாறு வயிற்றில் சுமக்கும்
நரகல்கள் இவர்கள்....
ஒருவேளை
மலக்குடலில் கருவுற்று
மனிதக் கடலில் கலந்தவர்களோ?
அத்தனை அசிங்கமான
ஜென்மங்களை பற்றி
வேறென்ன சொல்வது!
"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது"
என்றாள் தமிழ் மூதாட்டி...
புல்லாய், பூண்டாய், புழுவாய் என்று தொடங்கி கடைசியாக மனிதன்
அளவிற்கு உயர்ந்த பின்னும் பாழும் கொடுங்
குணத்தால் கொடுமையின்
உச்சிக்கே சென்று அங்கிருந்து பந்தாடப்பட்டு
மீண்டும்...
ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டார்கள் என்றே
தோன்றுகிறது!
இன்னும் எத்தனை கோடிமுறை மீண்டும், மீண்டும் பிறந்து இறந்து.....
எப்போது மீண்டும் இந்த அற்புத மானிடப் பிறவியோ?
அந்த மகேசனே அறிவான்....
இந்தப் பட்டியல்கள் இன்னும் நீளும்...
இவர்களைப் பற்றிய சுருக்கமான விசயங்களை
இங்கே
படிக்கலாம்.
நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.




