எல்லாமாகி
எங்கும் நிறை பராசக்தியே!
பொல்லா
வினையறுப்பாய் ஆதிசக்தியே!.
வெடிபடு அணுவினுள் ஒளியுரு கடும்பொறி;
இடியொடு பிறந்தக்கொடுவிட அரவச்சீறி; நடுநடுங்க
துடிதுடிக்க; சடசட, படபடவெனப் பாயும்மின்
கொடியொடு ஓடிடும் தூதூமணியே!
அறிவினில் உறையும்; கருவென வளரும்;
பரிதியில் ஒளிரும்; வளியென பரவும்;
விரிவெளி யெனத் திகழும்; குணம்,
குறியிலா ஞானப்பெரும் திரளே!
ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும்
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை
நன்றாய் படைக்க ஒன்றும் பலவாய்
ஒன்றியழ கொழிக்கும் ஆதிசக்தியே!
பெருமிருள் நெடுதுயில் சடுதியில்மறைய -விண்
உறுபெரும் பொருளது சுடரொளி
நிறைய
மருளெனும்செய் பாவமதுரு உறுவது ஒழிய
பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே!
-நன்றி.

