அபிஷேகப் பிரியன் நீயே!
அலங்காரப் பிரியனும் நீயே!
சமதர்மக் கடவுள் நீயே!
சத்தியத்தின் மறுஉரு நீயே!
நித்திய ஜோதி நீயே!
என்நெஞ்சில் நிறைந்தவனும் நீயே!
அளபில்லா ஆனந்தம் நீயே!
அன்னதானப் பிரபுவும் நீயே!
உத்திரத்தில் உதித்தவன் நீயே!
உத்திராட்சம் அணிந்தவன் நீயே!
மார்கழியில் பிறந்தவன் நீயே!
மாதவம் கொள்பவனும் நீயே!
மோகினியின் புதல்வனும் நீயே!
மோகத்தை அறுப்பவனும் நீயே!
வன்புலி நாயகன் நீயே!
வானோர் போற்றும் தெய்வமும் நீயே!
என்னுள் உறைந்தவன் நீயே!
எடுத்தாண்டு கொள்வாய் நீயே!
அத்வைத தத்துவம் நீயே!
அநாதை ரட்சகனும் நீயே!
வேண்டும் வரம் தருபவன் நீயே!
வினைகள் அறுக்க அருள்வாய் நீயே!
அரிகர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்ப
சுவாமியே சரணம் ஐயப்பா!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!!

