எங்கும், எதிலும், எல்லாம்,
ஊழல்! ஊழல்!! ஊழல்!!!
பாழும் சமூகம் பாரதியைப் போற்றும்
பாரதிதாசனை ஏத்தும்,
புத்தன், மகாத்மா காந்தியையும் துதிக்கும்
ஆனால், சாதி சாக்கடையிலே
குளித்துக் களிக்கும்!
சாதிகள் ஒழியும் வரை
ஊழல் வாதிகளை காப்பாற்ற
நாதிகள் வீதி தோறும் உண்டு...
போராடப் பிறந்தவர்கள்
போராடுவதை நிறுத்தலாகாது...
பொல்லாத ஊழலை நெருப்பில்
நீறாட்டும் வரை போராட்டமும் ஓயாது..
அன்னா பார்த்துக் கொள்ளுங்கள்
இங்கே எவனும் யோக்கியன் இல்லை...
இவனை எதிர்த்தால் - உடனே
அவன் வருவான்...
அவனை எதிர்த்தால் அவனைவிட
விரைந்தே இவன் வருவான்.
இப்போது இருவரையும் எதிர்த்தால்
இருவரும் சேர்ந்தே கொல்வான்
(வார்).
அதனாலேப் பார்த்துக் கொள்ளுங்கள்
அவர்கள் பார்க்காமல்
எதையும் கொள்வார்கள்
அவர்கள் கொள்வதைப் பார்த்தால்
அப்படி பார்த்தவர்களையும்
சேர்த்தேக் கொல்வார்கள்...
எல்லாம் அரசியல் சித்து
அவர்களின் நோக்கே சொத்து
பதவி, பணம், பந்தா - இதன்மீதே
அவர்கள் யாவருக்கும் பித்து
நியாயம் பேசினால் வாயைப் பொத்து
மீறினால் கத்தியில் குத்து??...
எதுவானாலும்,
அரசியல் திருடர்களாகப் பார்த்து
திருந்தா விட்டால் இந்தத்
திருட்டை ஒழிக்க முடியாது!!??....
கருவறைத் தொடங்கி
கல்லறை வரை நீளும் இந்த
நெடுந்தூர ஊர்வலத்தை
கண்ணீர்ப் புகையல்ல
Gun - னும் அல்ல - அந்தக்
கண்ணனே மனு நீதிச்
சோழனாக வந்தாலும்
கலைக்க முடியாது என்றே
எண்ணிய எண்ணம்
எங்கோ போனது - இன்றோ
இளைஞர்ப் பட்டாளாம்
உங்கள் பின்னால் நிற்கிறது!
ஒருங்கிணையுங்கள் ஒருபோதும்
தலைவராய் நில்லாதீர்
சாதி மத சாயம் பூசி - அந்த
சாக்கடையில் அமுக்கி
சாகடிக்க ஒருக் கூட்டமிங்கே
காத்துக் கிடக்கிறது....
நெருப்புச் சாலையில் பயணம் -
இருந்தும்
இருக்கட்டும் இடுப்புத் துணியில் கவனம்!
பொறுப்புள்ளவர்கள் போல கூடவேவருவர்
பொல்லாத அந்த நெருப்புள்ளே தள்ள?!
சத்தியமென்றாலே சோதனை
சடுதியில் போகும் வேதனை
சப்போர்ட்டுக்கு அழைப்போம் தேவனை!
அவன் இல்லாமல் ஏது? சாதனை!
இன்னும் போனால் போதனை
அந்த போதை தனை நிறுத்தி
போற்றுகின்றேன் உமது செயலதனை...
வெற்றியதை வெட்டிதான்
எடுக்க வேண்டும் என்றால்
வெட்டி மட்டுமல்ல
வேட்டும் வைக்கவே தயாரானது
இளம், புது இரத்தம் பாயும்
இளைஞர் கூட்டம், இன்னும்
இருக்க அணைத்துக் கொள்ளுங்கள்
காந்தியத்தைக் காவு கொடுக்காமல்!..
ஊழல் பேயை விரட்ட உடுக்கை எடுத்த - இந்த
இளையபாரதம் மிக விரைந்தே
படைக்கட்டும் புதிய பாரதம்!!!...
நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.

