பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday, 13 April 2012

நந்தனத்திற்கு இதயம் கனிந்த வந்தனம்!

நந்தனத்திற்கு இதயம் கனிந்த வந்தனம்!
வந்தேபல செல்வங்களும் இங்கே தங்கணும்
நல்லாரும் வாழ்ந்திட; தீயோரும் திருந்திட 
பொல்லாரே இல்லாதுபோக வேண்டுமென்று  
எல்லாம் வல்ல இறைவனை இப்போதே 
இந்நாளில் பணிந்தே வணங்கு வோம்.

கல்வியும் கேள்வியும் சிறக்க வேண்டும்
கணினியின் அற்புதம் பெருக வேண்டும்
இல்லாதவர் இல்லாதொழிய வேண்டும்
இருப்பவர் யாவருக்கும் கொடுக்க வேண்டும்
வறுமையும் கொடுமையும் மடிய வேண்டும்
மனிதநேயம் எல்லோரிடமும் வளரவேண்டும்.

சொல்லால் கொல்லும் கொடுமை போகவேண்டும்
முள்ளாய் குத்தும் கவலையும் சாகவேண்டும் 
கல்லாய்ப் போன மனங்களும் கனியவேண்டும்
நில்லாது தொடரும் போரும் ஒழிய வேண்டும் 
கல்லாதுசெயும்  பொல்லா தொழிலதிபரும் திருந்தவேண்டும்
எல்லாம்வல்ல இறைவனும் அருளவேண்டும். 


அனைவருக்கும் இனிய நந்தன வருடத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இறைவன் அருள் பெற்று வாழ்க! வளமுடன்!!


5 comments:

மகேந்திரன் said...

செறிந்திருக்கும் சொல் வளமாய்
பொதிந்திருக்கும் பொருள் வளமாய்
தங்கத் தமிழின் இன்சுவையாய்
தங்கள் வாழ்வில் இனிமை நிறைந்திருக்கட்டும்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சீனு said...

தங்களது வலைபூவிற்கு வருவது இதுவே முதல் முறை,

//எல்லாம்வல்ல இறைவனும் அருளவேண்டும். / எல்லாருக்கும் அருள்வான். அருமையான வரத்தைக் கோர்வைகள், வாழ்த்துக்கள் நன்றி. உங்களைத் தொடர்கிறேன். தொடர்வேன், தொடர்ந்து வருகிறேன்

krishnar said...

வணக்கம்.
இலங்கையில் இரு மாதங்கள் தங்கி மீண்டும் வந்துள்ளேன்.
இனித்தான் உங்கள் கட்டுரைகளைப் படிக்கவேண்டும்.

Krishnar

Udhaya Kumar said...

சார் இன்று தான் தங்களின் "அன்னைத் தமிழ்" க்கு
என் இதயம் கனிந்த வழ்த்துகள் தொடற இறைவனை வணங்குகிறேன்
நன்றி

Boys said...

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php

Post a Comment