பரமன் அழித்த முப்புரம் - மீண்டும்
பரா(ரம)சக்திப் படைத்த அற்புதம்!
சோதியனே
சுடர்மிகு ஞான வடிவானவனே
வேதியனே வேதமாக நின்றொளிரும் தூயவனே
தேவி ஒருபாகனே அண்டங்களாயிரம் கடந்த
ஆதி அந்தமில்லா அமுதே!
அமுதே
அறிவே ஆனந்தமே - அடியார்
குமுத மனம் துதிக்கும் கோவே
அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்ட;
குமுதவல்லி தொழும் தேவனே!
தேவனே
தேவாதி தேவனே ஆதிமூலனே
மூவரின் அன்னை முழுமுதற் காதலனே
மூவாமருந்தே முப்புரம் அழித்தவனே எப்புறமும்
மேவ எங்கும்நிறை பிரம்மமே!
பிரம்மமே
ஆதிஅந்த மில்லாத்தூய பேரொளியே
பிரபஞ்ச அமைதியில்; விழைந்த விருப்பத்தால்
பிரக்ஞை மேவி ஒளிகீற்றாய் உடைபட்டே
பிராணனோடு ஆகாயம்சேர் ஞாயிறே!
ஞாயிறாய்
ஒளிரும் அக்னிப் பரமனொடு
ஞமர்சக்தியும் கொஞ்சிக் குலவி ஞெகிழிஒலிக்க
ஞமலிஉண்ட தோர்ஞஞ்சை மேவப்பெருங் கூத்தாடி
ஞான்று ஞெகிழடுதீ பொங்கியதே!
(ஞமர் - பரந்து விரிந்த
ஞெகிழி - சலங்கை
ஞமலி – கள் / மயில்
ஞஞ்சை - மயக்கம்
ஞான்று - அந்த நேரம் / அப்பொழுது
ஞெகிழடுதீ =ஞெகிழ் + அடுதீ = உருகிப் பெருகிய
பெரும் தீ.)
பொங்கிய
பேரொளி பரவெளி எங்கும்
தங்கிதோடு டையோன் உடுக்கை யொலியோடு
சங்கும்பெரும் பறையும் சேர்ந்தொலிக்க வெடித்து
வெங்கனல்தெறித்து சக்திசமைத்தது முப்புரமே.
முப்புரமேவிய செந்தீப்பந்துகள் சக்கரமாயோடி
முட்டிமோதி
எப்புறமும் வியாபித்தேநிற்கும் சக்தியின்
ஆளுமையிலே
முப்பொழுதும் முடிவில்லா மூலத்தின் மேனியாக
எப்பொழுது மெழில்கொஞ்சுகிற சோதியனே!
6 comments:
அன்னையின் தரிசனம்.......
ஞகர வரிசையில் அமைந்த சொற்கள்
புழக்கம் குறைந்திருக்கும் வேளையில்
அந்த சொற்கள் கொண்டு பாமாலை
புனைந்தமை மிக அழகு ஐயா.
தோடுடைய செவியனுக்கு
நீங்கள் அணிவித்த பாமாலையை
படித்து படித்து ரசித்தேன்...
///தினேஷ்குமார் said...
அன்னையின் தரிசனம்.......///
மிக்க நன்றி நண்பரே!
///மகேந்திரன் said...
ஞகர வரிசையில் அமைந்த சொற்கள்
புழக்கம் குறைந்திருக்கும் வேளையில்
அந்த சொற்கள் கொண்டு பாமாலை
புனைந்தமை மிக அழகு ஐயா.
தோடுடைய செவியனுக்கு
நீங்கள் அணிவித்த பாமாலையை
படித்து படித்து ரசித்தேன்...///
மிக்க நன்றி கவிஞரே!
"சோதியனே சுடர்மிகு ஞான வடிவானவனே" என்று பாடலின் வரியை ஒளியோடு தொடர்புபடுத்தி அந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவனை ஞானபிரகாசர் போற்றியதுபோல் உணர்கின்றேன்...
பாடலில் உள்ள சொற்களை நாவில் உச்சரிக்கும் போது ஒலியின் அதிர்வுகளையும் ரசித்து உணர்கின்றேன்... பாடல் மிகவும் அருமை நண்பரே...
////Balamurugan Jaganathan said...
"சோதியனே சுடர்மிகு ஞான வடிவானவனே" என்று பாடலின் வரியை ஒளியோடு தொடர்புபடுத்தி அந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவனை ஞானபிரகாசர் போற்றியதுபோல் உணர்கின்றேன்...
பாடலில் உள்ள சொற்களை நாவில் உச்சரிக்கும் போது ஒலியின் அதிர்வுகளையும் ரசித்து உணர்கின்றேன்... பாடல் மிகவும் அருமை நண்பரே...////
தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே!
Post a Comment