போற்றிடு மனமே பொல்லா வினையறுக்கும்
பொற் பாதம் தினமே.
தினமும் யாதொரு கணமும் எந்தன்
மனமும் நினைமறக்கவும் கூடுமோ?
கூடலில் முக்கூடலில் தேடலில் -தேடுவோர்
பாடலில் தித்திக்கும் அமுதே!
அமுதே ஆருயிரே ஆலகாலம் உண்டே
குமுதக் குவலயம் காத்தோனே!
காப்பாய் கதிரொளி நிறைமதி நிமலா
பா(ர்)ப்பாய் என்றே பணிந்தோமே.
பணிந்தோம் நின்பாத மலர் -எனவே
துணிந்தோம் நினைச்சேர தூயனே!
தூயனே மாயையின் மணாளனே -எங்கள்
நேயனே தடுத்தாள்வை தேவதேவனே!
ஈசனே எந்தையே என்னிலை யானுறுனிம்
நேசனேநினை நினைக்கையில் சிந்தையில் தேனூறும்
பூசனை வேறொன்றும் யான்புரியேன் -அல்லால்நின்
தாசனாய் கமலப்பாதம் போற்றியே!
7 comments:
போற்றிடு மனமே பொல்லா வினையறுக்கும்
பொற் பாதம் தினமே.
தினம் படிக்கவேண்டிய பிரார்த்தனை வரிகளாய் அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..
எந்தையை..
எம்பெருமானை..
அந்தாதி பாடி புகழ்வித்தமை
மனதில் இன்ப ரீங்காரமிடுகிறது ஐயா..
போற்றிடுவோம். போற்றிடுவோம். நன்றி.
////இராஜராஜேஸ்வரி said...
போற்றிடு மனமே பொல்லா வினையறுக்கும்
பொற் பாதம் தினமே.
தினம் படிக்கவேண்டிய பிரார்த்தனை வரிகளாய் அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..////
நன்றிகள் சகோதிரியாரே!
/////மகேந்திரன் said...
எந்தையை..
எம்பெருமானை..
அந்தாதி பாடி புகழ்வித்தமை
மனதில் இன்ப ரீங்காரமிடுகிறது ஐயா..///
நன்றி கவிஞரே...
////Shakthiprabha said...
போற்றிடுவோம். போற்றிடுவோம். நன்றி.///
நன்றிகள் சகோதிரியாரே!
அருமையான அந்தாதிப் பாடல்
படித்து ரசத்ிதேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment