கடவுள் தத்துவம் பற்றிய விவேகானந்தரின் சிந்தனைகளை, நான் புரிந்துக் கொண்டவைகளை, இங்கே உங்களிடம் பகிர்ந்துக்
கொள்கிறேன்.
உங்களின் சிந்தனைகளையும், அனுபவங்களையும், புரிந்துணர்வு களையும் கூறுங்களேன்.
கடவுள் தத்துவம்
கடவுள் என்பவர் யார்?
'ஜன்மாத்யஸ்ய யத:- யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ' 1
அவரே கடவுள்.
அவர் என்றும் உள்ளவர்,
எப்போதும் தூயவர்,
என்றும் சுதந்திரர்,
எல்லாம் வல்லவர்,
எல்லாம் அறிந்தவர்,
கருணை வடிவானவர்,
குருவிற்கெல்லாம்
குருவானவர்
எல்லாவற்றிற்கும் மேலாக
'ஸ ஈச்வர:, அநிர்வசனீய ப்ரேம ஸ்வரூப:
அந்த இறைவன் சொல்லுக்குள் அடங்காத அன்பு வடிவினன்.' 2
இந்த விளக்கங்கள் நிச்சயமாக சகுணக் கடவுளுக்கானவை.
(அனைவரும் வணங்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல்
உருவத்தை செய்துக் கொண்டு வணங்கும், அந்த உருவக் கடவுள்)
அப்படி என்றால் இரண்டுக் கடவுள்கள் இருக்கிறார்களா?
தத்துவ ஞானியின் 'இதுவல்ல, இதுவல்ல' என்ற சச்சிதானந்தக் கடவுள், பக்தனின் அன்பே வடிவான கடவுள் என்று
இரண்டு கடவுளரா?
இல்லை, இல்லை, இல்லை.
சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்புமூர்த்தியும்.
நிர்குணமும் , சகுணமும் ஒருவரே.
அப்படியானால்
பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்திலிருந்து வேறானவரா?
அதுவும் இல்லை.
இந்த பிரபஞ்சம் (நாம் பூதக் கண்களால் காணும் இந்த உலகம், வெளி, கோள்கள், நட்சத்திரங்கள் என்று யாவும்)
பிரமத்தில் இருந்து தோன்றியது, தோன்றியது என்றால் மறையவும் செய்யும்.
எங்கே மறையும்.
என்றக் கேள்வி வரும்.
எங்கிருந்து தோன்றியதோ அதனுள்ளேச் சென்று மறையும். பிறகு
அது மீண்டும் தோன்றும். இது படைப்பின் சுழற்சி. இதை இங்கே தற்காலிகமாக நிறுத்தி
விசயத்திற்கு செல்வோம்.
சகுணக் கடவுள் என்பவர் மாயையின் வழியாக காணப்படும் பரம்பொருளே அதாவது பரம்பொருள் எனபது தான்; நிர்குணக் கடவுள் / சச்சினானந்தம் /
பிரபஞ்சத்தின் ஆதி மூலம்.
இங்கே மாயை என்பது என்ன என்று விளக்க / புரிய / ஞாபகப்
படுத்த வேண்டும்.
பிரபஞ்சப் பொருள்கள் யாவும் ஜடப் பொருள்கள் என்றுக் கொள்வோம், அப்படி இருக்கும் போது அதனுள் ஒரு
இயக்கம் வேண்டும் அல்லவா?
அந்த இயக்கம் பெறுவதற்கு, இந்த சக்தி / இயற்கை /அதாவது மாயை தான்
காரணம். இதை பிராணன் என்றும் கூறுவோம்.
ஆக, அந்த பரம்பொருள், அந்த ஒரேக் கடவுள்,
இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை
வைத்துக் கொள்ளும் போது "ஜீவன்" எனப்படுகிறார்.
இயற்கையை தான் ஆளும் பொது "ஈசுவரன்" அல்லது
சகுணக் கடவுள் எனப்படுகிறார்.
நிர்குணமும், சகுணமும் ஒருவரே.
பக்தன்
வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்தில் இருந்து வேரானதோ, வேறுபாடு உள்ளதோ இல்லை.
எல்லாமே இரண்டற்ற ஒன்றே தான். ஒன்றேயானப் பிரம்மம் தான்.
மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியதாக இருப்பதால்
நம்மால் அன்பு செலுத்தவோ, வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது.
எனவே பக்தன் பிரமத்தை, குணங்களோடு கூடிய நிலையில், அதாவது உலகங்கள் அனைத்தையும்
ஆள்பவராகிய நிலையில்; அதாவது இயற்கையை ஆளும் ஈசுவரனாக, இறைவனைக் கொண்டு வழிபடுகிறான்.
சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்.
ஒருப் பொருள் கொண்டு பல பொம்மைகள் செய்கிறோம் என்றுக்
கொள்வோம்.
அது களிமண்ணாகவோ, மரமாகவோ, கல்லாகவோ, கண்ணாடியாகவோ இருக்கலாம்.
அப்படி செய்யும் போது, அந்த செய்யப்பட்டப் பொருள்
உருவத்தில் மாறுபாடு கொண்டு, அதற்கு எலி என்றும் புலி என்றும் பெயர் வைக்கிறோம்
என்றுக் கொள்வோம்.
இப்போது எலியைப் புலியாகவோ, புலியை எலியாகவோ மாற்ற முடியாது.
ஆனால் அந்த இரண்டும் உருவான மூலப் பொருள் ஒன்றே.
அந்த மூலப் பொருள் இந்த பொம்மைகளை செய்வதற்கு முன்பே
இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆனால் அது உருவமும், நாமகரணமும் (பெயரும்) கொண்டு
இருக்கிறது.
இவை இரண்டும் வேறு வேறானவை என்றுக் கொள்கிறோம்.
எதிலிருந்து
எதுவரை என்றால், அந்த மூலப் பொருளில் இருந்து இவைகள் உருவம்
பெற்றதிலிருந்தும் அந்த உருவம் அழியும் வரை.
உருவம் பெறாத மூலப் பொருளாக இருந்தவரையில் அவை இரண்டும்
ஒன்றே.
அதுபோன்றே, அறுதி உண்மையான பிரமத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடே இறைவன்.
இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், பிரமத்தைப் பற்றி மனித மனத்தால்
உணரமுடிந்த மிக உயர்ந்தக் கருத்து இறைவன்.
படைப்பு அநாதி காலந்தொட்டு (நிர்ணயிக்க முடியாதக் காலம் தொட்டு)
இருந்து வருகிறது. ஆக இறைவனும் அப்படியே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.பிரம்ம சூத்திரம், 1.1.2.
2.சாண்டில்யப் பக்தி சூத்திரங்கள்,3.
நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.
18 comments:
மிக அருமையான பதிவு நண்பரே..,
கடவுள் என்பவர் யார்?
அவன் ஏகன்.
அவன் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன்.
அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!
அவன் யாருடைய சந்ததியும் இல்லை.
அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
*
கடவுள் என்பது தமிழ் சொல்
God ஆங்கில சொல்
பகவான் என்பது ஹிந்தி சொல்.
அல்லாஹ் என்பது அரபி சொல்.
----
குர்ஆன் கூறுகிறது
அல்லாஹ் நித்திய ஜீவன்,
(பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன்;
அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
அவன் தூங்குவதுமில்லை;
மேலும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை;
வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான் பரிந்து பேச முடியும்!
அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்.
அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர , அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும், மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கின்றான்.
(குர்ஆன்:2:255)
இந்த டொபிக் பக்கமெல்லாம் நான் இன்னும் போனதில்லை (அவ்ளோ மூளை இன்னும் வளரல, ஹி ஹி).
இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் போது "ஜீவன்" எனப்படுகிறார்.
இயற்கையை தான் ஆளும் பொது "ஈசுவரன்" அல்லது சகுணக் கடவுள் எனப்படுகிறார்.
மேலே குறிப்பிட்ட வாக்கியங்கள் கலக்கல், இதைவிடத் தெளிவாக விளக்க முடியாது. என்னைப்பொறுத்தவரை கடவுள் எனக்கு ஒரு friend மாதிரி. அப்பப்போ உரிமையோடு சண்டை போடுவது, திட்டுவது, புகழ்வது எல்லாம் நடக்கும். - உமா
////ராஜா MVS சொன்னது…
மிக அருமையான பதிவு நண்பரே..,////
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் நண்பரே!
///பெயரில்லா சொன்னது…
கடவுள் என்பவர் யார்?
அவன் ஏகன்.
அவன் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன்.
அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!
அவன் யாருடைய சந்ததியும் இல்லை.
அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
*
கடவுள் என்பது தமிழ் சொல்
God ஆங்கில சொல்
பகவான் என்பது ஹிந்தி சொல்.
அல்லாஹ் என்பது அரபி சொல்.///
அருமை... அருமை... சகோதரரே!
மறைகள் யாவும் ஒரேக் கருத்தைத் தான் கூறுகின்றன...
அழைக்கும் மொழிகள் தான் வேறே, அழைக்கப் படுவோர் ஒருவரே.
தங்களின் அருமையானத் தகவல்களுக்கும், கருத்திற்கும் நன்றிகள்...
அதோடு தங்களுக்கு நானும் சில புள்ளி விவரங்களைத் தருகிறேன்.
அல்-குர் ஆனில் அடங்கியுள்ளப் பாகங்கள் (ஜூஸூக்கள்)30
அத்தியாயங்கள் (ஸூராக்கள்)114 .
வசனங்கள் (ஆயத்துக்கள்) 6666 .
எழுத்துக்கள் (ஹர்ஃபுகள்)325671 .
மக்காவில் வெளியான அத்தியாயங்கள் (மக்கியா) 86 .
மதினாவில் வெளியான அத்தியாயங்கள் (மதினியா) 28 .
மொத்தப் பக்கங்கள் 786 . அதை தான் பிறைக்கு மேலே எழுதுவதாம்.
நன்றி வணக்கம்.
///மேலே குறிப்பிட்ட வாக்கியங்கள் கலக்கல், இதைவிடத் தெளிவாக விளக்க முடியாது. என்னைப்பொறுத்தவரை கடவுள் எனக்கு ஒரு friend மாதிரி. அப்பப்போ உரிமையோடு சண்டை போடுவது, திட்டுவது, புகழ்வது எல்லாம் நடக்கும். - உமா
3 ஆகஸ்ட், 2011 7:09 pm /////
கடவுளை தந்தையாகப் போற்றுவது நன்றாம், தாயாய்ப் போற்றுவது அதனினும் நன்றாம்.. தோழனாக இன்னும் நன்றாம் இதிலே மிகவும் சிறப்பு காதலியாக / காதலனாகப் போற்றுவதாம் அதில் தான் அவ்வளவு அன்பின் பெருக்கு அதிகம் இருக்குமாம்.
அப்படிப் போற்றிய பன்னிருவரை பாருங்கள். மீரா, சாந்தா சக்குபாய், ஆண்டாள், கானோபாத்திரை, ராமாபாய், ஜனாபாய், காரைக்கால் அம்மையார், பிளாபாய், குணவதிபாய், கடுமாபாய், சிளாபாய், கோமாபாய்... இவர்களைப் பற்றி இன்னும் படிக்கவில்லை.. அதோடு துளுக்க நாச்சியாரையும் சேர்க்க வேண்டும், கோவில்களை இன்றும் கைலி அனுவித்து ரொட்டி பாலும் படைப்பார்களாம்.
தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கு நன்றி உமா.
கடவுளை தத்துவத்தை விளக்கவும், விளங்கவும் தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டுகள்.
என்னதான் ஜாங்கிரியின் சுவை அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று ஏடுகளில் எழுதினாலும் அதை ருசித்தவர் மட்டுமே அதன் சுவையை உணரமுடியும். அவ்வாறே இறைவனை உணர்வால் மட்டுமே அறிய முடியும்.
விளக்கங்கள் புரிவது போல் இருந்தாலும் இரண்டு உணர்வாளர்களுக்கு மட்டுமே அந்த உண்மை புரியும்.
கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.
தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா.
///MANI சொன்னது…
கடவுளை தத்துவத்தை விளக்கவும், விளங்கவும் தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டுகள்.
என்னதான் ஜாங்கிரியின் சுவை அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று ஏடுகளில் எழுதினாலும் அதை ருசித்தவர் மட்டுமே அதன் சுவையை உணரமுடியும். அவ்வாறே இறைவனை உணர்வால் மட்டுமே அறிய முடியும்.
விளக்கங்கள் புரிவது போல் இருந்தாலும் இரண்டு உணர்வாளர்களுக்கு மட்டுமே அந்த உண்மை புரியும்.
கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.
தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா.////
உண்மைதான் நண்பரே,
இதுவரை இனிப்பு என்பதையே அறியாத யாருக்கும் அந்த இனிப்பு எப்படி இருக்கும் என்று புரிய வைக்க முடியாது தான் அது உணர வேண்டிய சுவை அல்லவா. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள் நண்பரே!
சச்சிதானந்தந்தைப் பற்றி எழுதினீங்கோ..நித்தியானந்தத்தைப் பத்தி எழுதலே..
//// சாந்தா சக்குபாய், ராமாபாய், ஜனாபாய், பிளாபாய், குணவதிபாய், கடுமாபாய், சிளாபாய், கோமாபாய்...\\\\\\\\\\\\\\\\\\
நமக்கெல்லாம் இந்த பிளேபாய் பத்தி மட்டுமே தெரியும்..
அப்புறம்..'நான் அவன் இல்லை'ன்னு ஒரு படம் சில வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன்..ஜீவன் நடிச்சது..
அதிலே கண்ணன் வந்து பக்தியை ஆட்கொண்டு (போட்டிருந்த நகை நட்டையும் சேர்த்துதான்)
'ராதா காதல் வராதா?' என்ற அருமையான பழைய பாட்டை ரீ மிக்ஸ்லே பாடி...ஆஹா...
செம படம் அது..நீங்க பார்த்தீங்களா?
சாரி..'கண்ணன் வந்து பக்தையை ஆட்கொண்டு' ன்னு திருத்திப் படிக்கணும்..
/////minorwall சொன்னது…
சச்சிதானந்தந்தைப் பற்றி எழுதினீங்கோ..நித்தியானந்தத்தைப் பத்தி எழுதலே..
//// சாந்தா சக்குபாய், ராமாபாய், ஜனாபாய், பிளாபாய், குணவதிபாய், கடுமாபாய், சிளாபாய், கோமாபாய்...\\\\\\\\\\\\\\\\\\
நமக்கெல்லாம் இந்த பிளேபாய் பத்தி மட்டுமே தெரியும்..
அப்புறம்..'நான் அவன் இல்லை'ன்னு ஒரு படம் சில வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன்..ஜீவன் நடிச்சது..
அதிலே கண்ணன் வந்து பக்தியை ஆட்கொண்டு (போட்டிருந்த நகை நட்டையும் சேர்த்துதான்)
'ராதா காதல் வராதா?' என்ற அருமையான பழைய பாட்டை ரீ மிக்ஸ்லே பாடி...ஆஹா...
செம படம் அது..நீங்க பார்த்தீங்களா?///
இல்லை மைனர்வாள்... நித்தியானந்தம் இருந்தவர லெனின் போய் புரட்சி செஞ்சு இப்ப பாவம்...
அதோட, வழக்கு இப்ப மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாத்தியாச்சம் நாம் எதுவும் பேசக் கூடாது..
நான் அவன் இல்லை பார்த்தேன் அவனும் கூட யோக சக்தியை பயன் படுத்தி எப்படி பாருங்க
நவீன புலனாய்வு முறையில் இருந்து கூட தப்பிக்கிறான்...
நன்றி நண்பரே!
கடவுள் என்ற சொல்லை மிக ஆழமாக சிந்திச்சு பதிவு செய்திருக்கிறீங்க...
எல்லாமே மனம் .....
ஏதோஒரு சக்தி அதை கடவுள் என்று சொல்கிறோம்...
பதிவுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்
///vidivelli சொன்னது…
கடவுள் என்ற சொல்லை மிக ஆழமாக சிந்திச்சு பதிவு செய்திருக்கிறீங்க...
எல்லாமே மனம் .....
ஏதோஒரு சக்தி அதை கடவுள் என்று சொல்கிறோம்...
பதிவுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்///
வணக்கம் விடிவெள்ளியாரே...
தங்களின் வருகைக்கும்,
மனம் கனிந்த பாராட்டிற்கும்
நன்றிகள்.
கடவுள் என்றால், கடந்தவன், எல்லாவற்றையும்
கடந்தவன் ஆகும்
தங்கள் பதிவு அதை விளக்கவும் , விளங்கவும் செய்கிறது
நன்றி
புலவர் சா இராமாநுசம்
////புலவர் சா இராமாநுசம் சொன்னது…
கடவுள் என்றால், கடந்தவன், எல்லாவற்றையும்
கடந்தவன் ஆகும்
தங்கள் பதிவு அதை விளக்கவும் , விளங்கவும் செய்கிறது
நன்றி
புலவர் சா இராமாநுசம்////
வணக்கம் ஐயா!
தங்களின் வருகைக்கும்,
பின்னூட்டத்திற்கும் நன்றிகள் புலவரே.
நான் உங்கள் கட்டுரைகளை படித்து மகிழ்ந்தேன். சிறந்த விளக்கம், நீங்கள் இது போன்ற மேலும் பல கட்டுரைகளை பார்க்க நம்புகிறது.
///சூரிபாபா சொன்னது…
நான் உங்கள் கட்டுரைகளை படித்து மகிழ்ந்தேன். சிறந்த விளக்கம், நீங்கள் இது போன்ற மேலும் பல கட்டுரைகளை பார்க்க நம்புகிறது.///
தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் நண்பரே!
Post a Comment